

இன்று நோய் வந்த பின்னர் அதை சரி செய்ய மருந்து, மாத்திரைகள் பின்னே பலர் சென்று கொண்டிருக் கிறார்கள். மருந்துகள் பாட்டில்களிலும், ஊசிகளிலும் மட்டும் அல்ல, இவைகளும் மருந்துகள்தான், ஆனால் இவை அனைத்தும் நோய்கள் வராமல் தடுக்கும் அரு மருந்துகள். உலகின் தலைசிறந்த மருந்துகள் என ஆராய்ச்சியாளர்கள் கூறும் சில...
உடலில் சேர்ந்த கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுவதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை மருந்து என்கிறார்கள். அதற்கு சிறந்த வழி திரவங்களுடன் நாளை தொடங்குவது தான். தண்ணீருடன் நாளை தொடங்குவது உடலை நீரோற்றமாக வைத்து நச்சுக்களை வெளியேற்றவும் உதவும் எளிய வழி. அதோடு தேவைக்கு ஏற்ப நீரை எடுத்துக்கொள்வதும் முக்கியம் உணவுக்கு இடையில் ஆரோக்கியமான இடைவெளியை கொண்டிருக்க வேண்டும் இரவு 7மணிக்கு முன் இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும். காலை அல்லது மதிய உணவின் போது அவசியம் புரோபயாடிக்களை சேர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி செய்வதால் முழு உடல் ஆரோக்கியம் எனும் ஒட்டுமொத்த பலன் இருந்தாலும். இருதயக்கோளாறுகள் தொடங்கி ஆயுட்கால நீட்டிப்பு வரை உயிர் காக்கும் பலன்கள் பல அதனால் உண்டு என்று பல ஆய்வுகள் உறுதி செய்துள்ளது. அந்த வகையில் உடற்பயிற்சிக்கு புற்றுநோய் வளர்ச்சியை குறைக்கும் அசாத்திய திறனும் உண்டு . அன்றாடம் உடற்பயிற்சி செய்தால், மனிதர் களுக்கு வரும் 26 கேன்சர்களில் 13 வகையான கேன்சர்களிலிருந்து தப்பலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தினமும் 20-30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.
தினமும் உங்கள் உணவில் 10 காய்கறிகள் மற்றும் பழங்கள்சேர்கிறதா? அப்படியானால் உங்களுக்கு 24 சதவீதம் இதய நோய்களும், 33 சதவீதம் பக்கவாத நோய்களும், 13 சதவீதம் புற்று நோய்யையும் மொத்தத்தில் 31 சதவீதம் திடீர் மரண தாக்குதல்களும் தவிர்க்கப்படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உடல் பாகங்களிலுள்ள செல்களின் வேகமான அழிவு அதனால் உடலினுள் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளும் தான் வயோதிகத்தின் அறிகுறிகள் இதனை குடலில் தோன்றும் ஆரோக்கியமான நுண்ணுயிரிகளால் தடுக்க முடியும் அதற்கு காய்கறிகளும், பழங்கள் நிறைந்த உணவுகளால் மட்டுமே முடியும் என்கிறார்கள்.
ஆரோக்கியத்தின் ரகசியம் ஆரோக்கியமான தூக்கத்தில் இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால் தூக்க குறைவு நம் குடல் பகுதியிலுள்ள நுண்ணுயிர் குழுமத்தில் ஆரோக்கிய சீரழிவை ஏற்படுத்தி பலதரப்பட்ட நோய்கள் வருவதற்கு காரணமாகிறது என்பதை அமெரிக்க நோவா பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். உடலின் 90 சதவீத ஹார்மோன்கள் வயிற்றில் தான் சுரக்கிறது. எனவே குடல் பகுதி ஆரோக்கியமாக இருக்க ஆழ்ந்த தூக்கம் அவசியம்.
சூரிய ஒளி ஓர் ஆற்றல் மிக்க மருந்து. உடலில் சூரிய ஒளியே படவில்லை என்றால் வைட்டமின் டி குறை காரணமாக அடிக்கடி சோர்வு, பலவீனம், தசை வலி, மூட்டு வலி அல்லது எலும்பு முறிவுகளை சந்திப்பீர்கள். இருதய மற்றும் நுரையீரல் செயல்பாட்டிற்கும் வைட்டமின் டி போதிய அளவு இருக்க வேண்டும் இல்லையேல் அடிக்கடி மனச்சோர்வு, மன அழுத்தம் கூட ஏற்படும் என்கிறார்கள். வெர்ஜினியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இதற்கு.தினமும் 15-20 நிமிடங்கள்காலை10மணிக்குள் வெயில் படும்படி இருந்தலே போதுமானது.
இயற்கை மருத்துவத்தில் ஒரு தலை சிறந்த மருந்து விரதம் இதுநேரடியாகக்குணம் பெற வழி செய்யாமல் மறைமுகமாக குணம் பெற உதவுகிறது. உடலில் அளவுக்கு அதிகமாக இருக்கும் சத்துகளையும், கழிவுகளையும் வெளியேற்ற உதவுகிறது. மாதத்தில் அல்லது வாரத்தில் ஒரு நாள் விரதம் இருக்கும் நபர்களுக்கு ஹார்ட் அட்டாக், பக்கவாதம், கேன்சர் போன்ற நோய்கள் வருவது குறைவு மேலும் அவர்களின் ஆயுளும் கூடும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஒரு கோபம் 10 நோய்யை உண்டாக்கும், ஆனால் ஒரு சிரிப்பு 100 நோயை குணமாக்கும் என்பார்கள். நம் உடலில் எந்தப்பகுதியில் நோய் இருந்தாலும் சரி டி - லைம்போசைட்ஸ் எனும் பொருளைத்தான் உடல் பயன்படுத்தி நோயிலிருந்து நம்மை காப்பாற்றி வருகிறது நாம் வாய்விட்டு உரக்கச்சிரிக்கும் போது டி-லைம்போசைட்ஸ் செயல் திறனும் அதிகரிக்கிறது. இது குறைந்தால் கார்டிசோல் அதிகம் சுரந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும். எனவே தினமும் 20 நிமிடங்கள் மனம் விட்டு சிரிங்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அன்றாட வாழ்க்கையில் .நன்றியுணர்வுடன இருங்கள. நன்றியுணர்வு உடையவர்கள் ஆரோக்கியமான மனநலம், உடல் நலம் பெற்று வாழ்கிறார்கள் என்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். நன்றியுணர்வு உடையவர்கள் மற்றும் நேர்மறை சிந்தனையாளர்களின் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு கட்டுப்பாட்டில் இருப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு இரவில் நிம்மதியான தூக்கமும், குறைந்த மனஅழுத்தமும் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்தது.
குடும்பமாகவும், நட்புகள் சூழவும் வாழ்கின்றவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வதும். குடும்பத்தில் பாசத்தோடு அதிக நேரம் செலவழிப்பவர்களுக்கும், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக அதிக நேரம் செலவழிப்பவர்களுக்கும் இரத்த அழுத்தமும், மன அழுத்தமும் நார்மலாக இருக்கும்.அது அவர்களின் இளமை காக்க உதவுகிறது என்கிறார்கள் சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
நம்புங்கள், நன்றாக வாழ்வோம் என்ற மகிழ்வு மனநிலையும் ஒரு மருந்து தான். வருவது வரட்டும் என்று கவலைப்படாமல் இன்றைய பொழுதை மகிழ்ச்சியாக கழியுங்கள். எப்போதும் சந்தோஷமாக இருங்கள். உங்களின் நோய் எதிர்ப்பு சக்தி துடிப்புடன் செயல்படும் என்கிறார்கள் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்கள்.