தாயே நல்ல தோழியாகி....

தாயே நல்ல தோழியாகி....

ப்பப்பா... இந்தக் காலத்துக் குழந்தைகளா? பாடாப் படுத்தறது. சமாளிக்க முடியலை..." இது இப்போது தாய்மார்களிடையே, தங்கள் குழந்தைகளின் படுத்தலைப் பற்றி... விளம்பரப்படுத்தி அலுத்துக் கொள்ளும் வாசகம். உண்மையில் பார்க்கப் போனால் குழந்தைகளா பாடுபடுத்துகிறார்கள்?

வேலைக்குப் போகிற தாயானாலும் சரி. வீட்டோடு இருப்பவர்களானாலும் சரி.. தங்கள் குழந்தைகளிடம் தேவையான நேரம் செலவழித்து, அன்புடன். ஒழுங்கான விதத்தில் வளர்க்க முயற்சிப்பதில்லை என்பது சற்றுக் கசப்பான உண்மை... குழந்தைக்குச் சாதம் ஊட்டுதல், குளிப்பாட்டுதல். தலை வாருதல் போன்றவைகளைச் செய்தபடியே அவற்றின் மனத்தில் பதியும்படி கடவுள் கதைகளையும், பக்திப் பாடல்களையும் கற்பித்தனர் அந்தக் காலத் தாய்மார்கள். இன்று காலை டென்ஷனில் குழந்தைகளைக் கவனிப்பதில்லை.

நாம் குழந்தையாக இருந்து வளர்ந்து பெரியவராக ஆகி இருக்கிறோம். குழந்தைப் பருவ எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள் நாம் கடந்து வந்த படிகளே. இதை மனத்தில் கொண்டு நல்ல தாயாக தடந்து கொண்டால், குழந்தையும் நல்ல குழந்தையாக இருக்கும். சில எளியமுறைகள்.

1. எப்போதும் குழந்தை கேட்கிற கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்லுங்கள். கேள்வியைப் பார் என்று திட்டுவதோ பொய் கலந்த பதிலோ கூடவே கூடாது குழந்தை புரிந்து கொள்கிறாற்போல் அந்தக் கேள்வியின் பதில் இப்போது அதன் சின்ன அறிவுக்கு விளங்காது. இன்னும் சில வருடங்களில் தானே புரித்து கொள்ளமுடியும் என்று இதமாய் கூறுங்கள். குழந்தையின் “ஏன்? எதற்கு?” என்று கேள்வி கேட்கும். ஆர்வ அறிவை அலட்சியப்படுத்தினால், பொது அறிவு விருத்தியாகாது.

2. மத சம்பந்தப்பட்ட விஷயங்களில் பொய்க் கதைகளோ, புனைந்துரைகளோ வேண்டவே வேண்டாம் சிறு வயதில், அவர்களில் உண்னம் எது. பொய் எது என்று பகுத்தறிய முடியாது. தந்தை சொல் மீழுத காப்பியங்களை விவரிக்கையில், அவன் தந்தை சொன்னால் பாழும் கிணற்றில் கூட விழுவான் என்ற கைச்சரக்கை அநாவசியமாய் இணைக்காதிர்கள். குழந்தை நீங்கள் சொல்வதை முழுமையாய் நம்பும்படி சொல்வதால், குழந்தை உண்மை, பொய்யைப் பகுத்தறியத் தெரிந்து கொள்வாள்.

3. குழந்தை ஆவலும் ஆர்வமுமாய், எதையாவது சொல்லவோ, கேட்கவோ வந்தால், "போ, அந்தண்டை, கைவேலையாய் இருக்கும்போது தொண தொணன்னு...” என்று அதட்டி விரட்டாமல், மற்ற வேலைகளை விடக் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். எந்த நேரமானாலும், எதுவானலும் அம்மாவிடம் சொல்லக் குழந்தைகள் பயப்படக்கூடாது.

4. தவறு செய்ததை ஒப்புக் கொண்டால் தயவு செய்து தண்டிக்காதீர்கள். சொல்வதைக் கேட்காமல் சில சமயம் தெரியாத்தனமாய்த் தவறு செய்வார்கள் குழந்தைகள். இனிமேல் அத்தகைய தவறைச் செய்யக்கூடாது என்று காரணத்துடன் விளக்குங்கள். மறுபடி தவறு செய்தால் கட்டாயம் தண்டனை உண்டு என்று எச்சரிப்பதொடு, முடிந்தால் என்ன தண்டனை என்பதையும் கூறுங்கள்.

5. அன்பினால் ஆகாதது உண்டோ?  அடிக்கு அடக்கு முறைக்கு அடங்காத சிறுவன், அன்பான அணுகலில் பணிந்து விடுவான். அன்பு செலுத்துவதில் பேரம் லாபம் பார்க்காதீர்கள். இளம் குருத்து செழிக்க அன்பு நீர்தான் அதிகம் தேவை

6.குழந்தைகள் எது கேட்டாலும். வாங்கித்தால் உடனே வாங்கித் தரக் கூடாது. அது அவர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு மனப்பான்மையை வளர்க்கும்.  திடீரென்று தகுதிக்கு மீறிய ஒன்றைக் கேட்டு வாங்கித் தர முடியா விட்டால் நொறுங்கிப போவார்கள். அதனால் அவர்கள் கேட்கும் பொருள் தேவையானதாய் இருந்தாலும் உடனே வாங்கித் தராமல் இரண்டுநாள் கழித்து வாங்கித் தரவும். எந்தப் பொருளாவது வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தால் எவ்வளவு அவசியமானதாய் இருந்தாலும் வாங்கித் தரக் கூடாது. பிடிவாதம் என்னும் கொடிய குணத்துக்குத் தீனி போடக் கூடாது.

7. குழந்தைகள் காலையில் எழுத்திருத்தல், விளையாடுதல் முதலியவற்றிற்கும், விருந்தினர், நண்பர் வந்தால் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியும் செய்யக்  கூடாத தவறுகள் பற்றியும் அட்டவணை கொடுங்கள். கூடியவரை குழத்தையிடம் எதிர்பார்க்கும் ஒழுங்கு முறை உங்களிடமும் இருக்கும்படி நடந்து கொள்ளுங்கள்.

8. இந்தக் காலம் கூட்டுக் குடித்தன முறை, அதிகக் குழந்தைகளுடன் வளரும் முறை இல்லாத சிறு குடும்பம். இதனால் குழந்தைகளிடம் ‘தான்’ ‘தனது’ என்ற மனப்பான்மை வளரும். பெருந்தன்னம பகிர்ந்து கொள்ளும் குணம். அக்கம்பக்கம் அனைவரிடமும் நட்பு. மன்னிக்கும் குணம், கனிவு தைரியம் இவற்றைச் சிறு கதைகள் மூலம் குழந்தை மனத்தில் பதிய வையுங்கள்.

9. புகழ்ச்சிக்கு மயங்காதவர்கள் உண்டோ? “அட மீனுக்குட்டி, என்ன அழகாய் அறையைத்  தொடைச்சிருக்கா. முகம் பார்த்து நெத்திக்கு இட்டுக்கலாம் போலிருக்கு. ரெண்டாம் தடவை அழுந்தத் துடைச்சுடு. கண்ணாடியாய் பளபளக்கும் தரை என்று தட்டிக் கொடுப்பது குழந்தையிடம் வேலையில் நாட்டத்தை உருவாக்கும். இன்னொரு குழந்தையுடன் ஒப்பிட்டுப் பேசுவது கூடவேகூடாது. குழந்தை தன்னம்பிக்கையை இழப்பதுடன். அனாவசியப் பொறாமை உணர்ச்சிக்கு மனத்தில் இடம் கொடுக்கும்.

10.நாம் எதேனும் தவறு செய்து, குழந்தை சுட்டிக் காட்டினால், தவறைத்  திருத்திக் கொண்டு, ஒப்புக்கொள்ள வேண்டும்.  'பெரிய மனுஷனாட்டம் என்னைக் குத்தம் கண்டுபிடிக்கிறியா?" என்று அதட்டக் கூடாது.

11. குழந்தை தன் கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ள உதவ வேண்டும். அம்மா வானத்து மேகத்தில நேரு மூஞ்சி தெரியுது  என்றால், “அடடே, கரெக்டாய்க் கண்டுபிடிக்கிறே!'' என்று வியக்க வேண்டும். “அம்மா, அசையாமல் உன் முகத்தை காட்டு. நான் படம் வரையப் போறேன் என்று ஒரு வட்டம் போட்டு, கண்ணும், காதும், மூக்கும், தன் சிறு மூளைக்கு எட்டிய வகையில் வரையும் குழந்தையின் ஒவியத் திறமையைப் பாராட்டி ஊக்கவிக்க வேண்டும். “அம்மா, நான் யானை வரைஞ்சிருக்கேனே” என்று படத்தைக் காட்டும் குழந்தையிடம், “யானையா இது? என்று கேலி செய்யாமல், “அட, யானை இவ்வளவு நல்லாப் போட்டிருக்கிறே... தும்பிக்கையை இன்னும் கொஞ்சம் நீட்டி, கண்ணை சரியாய்ப் போட்டால் உசிருள்ள யானை மாதிரியே இருக்கும்...” என்று புகழ வேண்டும்.

பொறுமையுயும், அன்புமாய், குழந்தைக்கு செலவழிக்க என்று நேரத்தை ஒதுக்கிவைத்து, குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்தால் நாடு போற்றும், நல்ல குடிமகனாய் நம் குழந்தை வளர்வதோடு, நாளைய இந்தியா நம்பிக்கையூட்டும் இளந்தளிர்களால் ஆளப்படும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com