தாய்மை அழகானது!

தாய்மை அழகானது!

தாயாக இருப்பது சந்தோஷத்தைக் கொடுக்கும். நிறைவைக் கொடுக்கும். உண்மைதான் ஆனால் இது சில சமயங்களில்தான் தினம் தினம், நாள் பூராவும் இந்த நிலை நீடிக்காது.  சில சமயம் ஏமாற்றமாகவும், சில சமயம் சோர்வூட்டுவதாகவும்,  சில சமயம் ஆத்திரமாகவும் இருக்கும். குழந்தை பிறந்த உடன் ஏற்படுகிறதே அதுதான் அதீதமான இன்பத்தைக் கொடுக்கும்.

முதல் மாதத்தில் குழந்தையை வீட்டுப் பெரியவர்களும், மற்றவர்களும் கவனித்துக் கொள்வார்கள். பச்சை உடம்பு என்று தாய் பரிந்து பரிந்து உணவளித்து, எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, பெண்ணை அதிகம் அலுங்காமல் நலுங்காமல் கவனித்துக்கொள்வாள் சுலபமாக பிரசவம் ஆகியிருந்தால் கூட 'ரொம்ப கஷ்டப்பட்டாள்' என்று வந்தவர்களிடம் விவரிப்பாள். (கண் பட்டுவிடக் கூடாதே என்பதற்காக) குழந்தையை எடுத்து விடுவதைத் தவிர புதுத்தாய்க்கு வேறு வேலை யில்லாமல் பார்த்துக் கொள்வாள்.

குழந்தை பிறந்த உடன் ஏற்பட்ட ஆனந்தமும், புதுமையும் சில நாட்களில் குறைந்து விடும். பிறகு குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் முழு நேர வேலைதான் மிஞ்சும்.

இதெல்லாம் ஒரு பெண்ணின் மனநிலையைப் பாதிக்கும். குழந்தையை நாள் முழுவதும் கவனித்துக் கொள்ளும் பொழுது ஒரு சலிப்பேற்படும். இதுதான். நல்ல தாய் இல்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஒரு தோல்வி மனப்பான்மையில் காரணமில்லாமல் அழுகை வரும். தான் தனியாக கையில் கதறும் குழந்தையுடன் நிற்பதுதான் தெரியும்.

இதற்குமேல், யாராவது "நீதான் முதல் பிள்ளை பெற்று விட்டாயோ, ஒவ்வொருத்தர், நாலு, அஞ்சு பெற்று வளர்க்கவில்லையா? எங்கம்மா ஆளா போட்டுக் கொண்டாள்?” என்று ஏசும்போது அழுகைதான் பொங்கும்.

உங்களுக்குப் புத்துணர்ச்சி ஏற்படச் செய்ய. உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்ள, உங்களுக்காகவே உங்கள் சந்தோஷத்திற்காகவே, சிறிது நேரம் ஒதுக்குவது மிகவும் அவசியம்.

1. வாரத்தில் ஒரு பாதி நாளோ, ஒரு மாலைப் பொழுதோ, ஒருவிதமான கட்டாயமான வேலையும் செய்யாமல், உங்களுக்காகவே ஒதுக்குங்கள். இந்த நேரத்தில் உங்களுக்குப் பிடித்த. நீங்கள் ஆசையாக விரும்பிச் செய்ய வேண்டும் என்று எண்ணும் காரியத்தைச் செய்யவும். என்ன செய்ய வேண்டும். என்பதை முன் கூட்டியே தீர்மானித்து. முழுக் கவனத்தையும் செலுத்தி அனுபவித்துச் செய்யவும்.

2. ற்ற தாய்களுடன் கலந்து பேசி, பிரச்னைகளை விவாதித்து, எப்படித் தீர்க்க வேண்டும். தீர்க்கலாம் கொள்ளுங்கள். என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

3. நீங்கள் வீட்டிலேயே இருந்தாலும், குழந்தைகள் சிறிது பெரியவர்களான பின்பு. என்ன செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ, அதில் அக்கறை எடுத்துக் கொண்டு, அதைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

4. மாதம் ஒரு முறையாவது குழந்தைகள் இல்லாமல், ஆசையாகத் திட்டமிட்டு கணவருடன் மட்டும் வெளியே போகவும்.

5. ங்கள் வயதொத்தவர்களுடன் மட்டுமல்லாமல், எல்லா வயது தாய்களுடனும் நெருங்கிய தொடர்புகொள்ளவும். அவர்களின் அனுபவம் பல சமயங்களில் உங்களுக்கு உதவும்.

6. குடும்பத்துடன் லீவுக்கு உல்லாசப் பயணம் செல்லுகையில், அது உங்களுக்கும் சந்தோஷத்தை அளிக்க வல்லதாக, உங்கள் நித்திய வேலைகளிலிருந்து ஒரு மாறுதலாக இருக்கக் கூடியதாக உங்களுக்கும் ஓய்வு அளிக்கக் கூடியதாக இருக்கும்படி தேர்ந்தெடுக்கவும்.

7. ங்கள் குழந்தைகளின் வயதொத்த குழந்தைகள் உள்ள மற்ற தம்பதிகளைத் தெரிந்துகொள்ளவும். ஒருவர் பொறுப்பில் மற்றவர் சமநேர அடிப்படையில், குழந்தைகளை விட்டுவிட்டு நிச்சிந்தையாக வெளியே செல்லச் சௌகரியமாக இருக்கும்.

8. தவிக்கு ஆள் இல்லாமல் எல்லா வேலையையும் நீங்களே செய்ய முயலாதீர்கள். இது உங்கள் உடல், மனநிலையை பெரிதும் பாதிக்கும். வீட்டில் கணவன், மற்றவர்களையும் பொறுப்பில் பங்கேற்கச் செய்யுங்கள்

9. குழந்தை வளர்ப்பில், தாய்மையில் உங்களால் முழுமையடைய முடியுமா. முடியாதா என்பது முக்கியமில்லை அடைந்தால் சந்தோஷம்தான். ஆனால், இது முடியாவிட்டால், தலையைப் பிய்த்துக் கொள்ளாதீர்கள். அப்படி உணர வேண்டும் என்று உங்களைக் கட்டாயப்படுத்தாமல், உங்களுக்குத் திருப்தியளிக்கக்கூடிய செயலை, வடிகாலைத் தேடிக்கொள்ளுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com