-பி.என். நரசிம்மமூர்த்தி, சென்னை
ஓவியம்: பிள்ளை
“உங்க வீட்ல டெய்லி டிபன் உப்புமாதானே?”
“அடேடே... எப்படிக் கரெக்டா கண்டுபிடிச்சே?”
“டிபன் சாப்பிட்டு முடிச்சதும் வாயே திறக்கறது இல்லையே!”
*********************************************
“எனக்கு இப்போதான் கல்யாணம் ஆயிருக்குன்னு எப்படி சார் கரெக்டா கண்டுபிடிச்சீங்க?”
“பார்சல்களைக் கட்டி முடிச்சதும் அழகா மூணு முடிச்சு போடறியேப்பா!”
*********************************************
“தயாரிப்பாளர் பணம் செட்டில் பண்ணும்போது குறைச்சுக் குடுத்துட்டாறாமே?”
“அது வெறும் ‘கனவுக் காட்சி’ன்னு சொல்லிக் குறைச்சுட்டாரு!”
*********************************************
“நைட் வாட்ச்மேன் வீடு எங்கே இருக்கு?”
“அதோ அந்தத் தூங்கு மூஞ்சி மரத்துக்குப் பக்கத்து வீடு!”
*********************************************
“லஞ்ச ஒழிப்புத்துறை ஆபீஸிலே யாருமே மதியம் சாப்பிட மாட்டேங்கறாங்களே?”
“யாரோ விஷமிகள் போர்டுலே புள்ளி வெச்சு ‘லஞ்ச் ஒழிப்புத் துறை’ன்னு மாத்திட்டாங்களாம்!”
*********************************************
“உங்களோட ஆதார் கார்டைக் குழந்தைகிட்டே காமிக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது?”
“ஏன் அப்படிச் சொல்றே?”
“அதைப் பாக்கும்போதெல்லாம் அவன் ‘வீல் வீல்’ன்னு பயந்து அழறானே!”