தொகுப்பு: ராஜி ரகுநாதன், ஹைதராபாத்- தன்னம்பிக்கை தாரகை பிரியங்கா“எனக்குப் பார்வையில்லைதான். ஆனால், கம்ப்யூட்டர் என் சிறந்த தோழி. நான் ஒரு ஜாலியான, மகிழ்ச்சியான, குறும்பை விரும்பும் பெண்” என்று கூறுகிறார் பிரியங்கா. இதைக் கேட்பவர் யாராயிருந்தாலும் அவருடைய உற்சாகம் உடனடியாக தொற்றிக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை.உடல் உறுப்புகள் அனைத்தும் குறையின்றி இருந்தும், செல்வம், கல்வி எல்லாம் சிறப்பாக இருந்தும் எப்போதும் எதையோ இழந்தாற்போல் திகிலோடு காணப்படும் பலரை நாம் பார்க்கிறோம். தேர்வில் அடைந்த தோல்விக்கும் காதல் தோல்விக்கும் தற்கொலையே முடிவு என்று செல்லும் இந்தக் காலத்தில் பிரியங்கா ஒரு அபூர்வமான பெண்.வாரங்கல்லைச் சேர்ந்த பிரியங்காவின் தந்தை லட்சுமிநாராயணா சுகாதாரத் துறையில் பணிபுரிகிறார். தாயார் சுவர்ணா இல்லத்தரசி. பிரியங்காவின் அக்காவுக்குத் திருமணமாகிவிட்டது. பிரியங்கா மட்டும் பிறவியிலேயே பார்வையின்றிப் பிறந்தார்..பெற்றோரின் அன்பு சிறு வயதிலிருந்தே பிரியங்காவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருந்தது. உறவினர்கள் பிரியங்காவைப் பார்த்து, “ஐயோ பாவம்” என்றனர். சிலர் சிரித்தனர். ஆனால், பெற்றோர், “நீ அழகாக இருக்கிறாய். நன்றாகப் படி. உன் காலில் நீ நின்றால் உலகில் பலருக்கும் உன்னால் நிழல் தர முடியும். சாலையில் யானை நடந்துச் செல்வதைப் பார்த்தால் நாய்கள் குறைக்கத்தான் செய்யும். யார் எத்தனை ஏளனம் செய்தாலும் வருத்தம் அடையாதே!” என்று மகளுக்கு ஆறுதல் கூறினர்.அதுவே பிரியங்காவுக்கு உலகின் மீது அன்பை வளர்த்தது. விடாமுயற்சியோடு முன்னேற உதவியது.சிறுவயதில் தெலங்காணா கரீம் நகர் தொடக்கப்பள்ளியில் சேர்ந்து படித்தார். டி.வி.யில் ஒருநாள் ஹைதராபாத்தில் உள்ள தேவனார் பார்வையற்றோர் பள்ளி பற்றிய செய்தியைக் கேட்டார். அங்கு சென்று படிக்க விரும்பினார். தன்னைப் போன்றோரோடு சேர்ந்து படித்தால் உலகத்தாரின் ஏளனத்திற்கு ஆளாக நேராது என்று அந்த பிஞ்சு உள்ள உணர்ந்துகொண்டது. பேகம்பேட்டில் உள்ள தேவனார் பாரவையற்றோர் பள்ளி ஹாஸ்டலில் பிரியங்காவைச் சேர்த்தனர் பெற்றோர். அங்கு சேர்ந்த பின் மேலும் மன தைரியம் வரப்பெற்றார் பிரியங்கா. படிப்பிலும் உற்சாகத்திலும் எப்போதும் முதலிடத்திலேயே இருந்தார்.அதன் பின்னர் பாரதி கல்லூரியில் சேர்ந்து பி.எஸ்சி படித்தார். அங்கு லெக்சரர்களும் தோழிகளும் உதவியதால் நன்கு படிக்க முடிந்தது. பின்னர் காகதீயா யுனிவர்சிட்டியில் சேர்ந்து எம். எஸ்சி கம்ப்யூட்டர் படித்தார்.அவரிடம், “உன் பெஸ்ட் ஃப்ரண்டு யார்?” என்று கேட்டால்,“கம்ப்யூட்டர்” என்று பளிச்சென்று பதில் அளிக்கிறார், யூ டியூப், கம்ப்யூட்டர் போன்ற தொழில் நுட்பங்கள் மிகவும் தன்னம்பிக்கையை அளிப்பதாகத் தெரிவிக்கிறார்.போட்டித் தேர்வுகள் எழுதி கிராம ஊராட்சி செயலராக வேலையில் சேர்ந்தார். பணியின் ஒரு பகுதியாக கிராமச் சுகாதாரம், மரம் நடுதல் போன்றவற்றைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவருக்கு இருந்தது. அவற்றை எவ்வாறு கையாளுகிறார் என்று கேட்டபோது, “வேலை மிகவும் நன்றாக உள்ளது. ஆனால், ஒவ்வொன்றுக்கும் பிறரின் உதவியை நாட வேண்டியுள்ளது. என் பணியை நான் பார்வையிட வேண்டும் என்றால் யாராவது ஒருவர் கண்ணால் பார்த்து எனக்கு சொன்னால்தானே என்னால் புரிந்துகொள்ள முடியும்? எனக்கு அது பிடிக்கவில்லை. அதனால் வேறு துறையில் முன்னேறுவதற்கு முயற்சித்து வருகிறேன். நல்ல வாய்ப்புக் கிடைத்தால் அதில் சேர்வேன். பணியில் திருப்தி ஏற்பட்டால்தானே மகிழ்ச்சியாக இருக்க முடியும்?” என்கிறார்..“உலகம் எங்களைத் தாழ்வாகப் பார்க்கிறது. பிறர் தயவால் படிப்பும் வேலையும் பெறுவது எனக்கு பிடிப்பதில்லை. நானாகவே முன்னேற வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறும் பிரியங்கா,ஊனமுற்றோருக்கான மாடலிங் போட்டி களிலும் பங்கு பெற்று பரிசுகள் பெற்று வருகிறார். திறமையுள்ள யாரையும் யாரும் தடுத்து நிறுத்தமுடியாது என்பதற்கு இவர் ஒர் உதாரணமாக நிற்கிறார்.நினைத்ததைச் சாதித்து, வானமே எல்லையாக உயரவேண்டும் என்று விரும்பும் இந்த இளம் பெண்ணை வாழ்த்துவோம்.