நன்னாரி எனும் கற்பகத்தரு மூலிகை!

நன்னாரி எனும் கற்பகத்தரு மூலிகை!

ன்னாரி சித்தர்கள் கூறிய கற்பகத்தரு மூலிகைகளில் ஒன்று. கிருஷ்ணவல்லி, அங்கார மூலி, அனாதமூலா, நறுக்கி மூலம், பாதாள மூலி, நறுநீண்டி, சுகந்த மூலி, காணறுசாரி இதுவெல்லாம் நன்னாரியின் வேறு பெயர்கள். நன்னாரி கொடியாகத் தரையில் படரும் பூக்கும் தாவரம், வெப்ப மண்டலத் தாவரம். இதன் வேர்தான் மருத்துவக் குணம் கொண்டது, நறுமணமிக்கது. இனிப்பும் சற்று கசப்பும் கலந்த சுவையுள்ளது. இந்தச் செடியின் வேரை உலர்த்தி பதப்படுத்தி தயாராவதுதான் நன்னாரி சர்பத். தொன்மையான குளிர்பானம்.

பொதுவாக, கோடையில் தாகத்தையும் உஷ்ணத்தையும் தணிக்கக்கூடியதாகவும், பித்தத்தைக் குறைக்கக் கூடியதாகவும் இருக்கும் நன்னாரி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும், ஆர்த்ரைட்டிஸ் மூட்டுவலிகளையும் குறைக்கும். நன்னாரியிலுள்ள இம்பிளமென்ரி பண்புகள் படர்தாமரை, சொரியாசிஸ் போன்ற சரும நோய்களுக்கு நிவாரணம் தரும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்னை களுக்கும் நல்ல தீர்வைத் தருகிறது. நன்னாரி உடலில் உள்ள வெப்பத்தை அகற்ற உதவுவதோடு உள்ளுறுப்புகளில் உண்டாகும் புண்களையும் ஆற்றுகிறது.

நன்னாரி ரத்தத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட்டு அளவைக் குறைக்கும் தன்மை கொண்டது. அது மட்டுமின்றி பாக்டீரியா தொற்றுக்களை அகற்றி உடல் நச்சுக்களை சிறுநீர் மூலம் நன்கு வெளியேற்றி விடுகிறது. நன்னாரியை நீரில் ஊற வைத்து அல்லது வேகவைத்து வெயில் காலங்களில் சாப்பிட்டு வர சிறுநீரகக் கற்கள் உருவாகுவதைத் தடுக்கலாம்.

நன்னாரியில் ‘சமோனின்’ எனும் இயற்கை ஊக்கி உள்ளது. இது ரத்தத்தைச் சுத்தம் செய்ய உதவுகிறது. 20 கிராம் நன்னாரி வேரை இடித்து 2 லிட்டர் நீரில் கலந்து கொதிக்க வைத்து, ஆறவைத்து, அதை பருகி வந்தால் ரத்தம் சுத்தமாகும். நீடித்த முகப்பரு, அரிப்பு, ஒவ்வாமை மற்றும் கரப்பான் போன்றவை நீங்கும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்.

நன்னாரி வேர் பட்டையை நீரில் ஊற வைத்து வடிகட்டி பாலும், சர்க்கரையும் கலந்து கொடுக்க, சளியால் அவதிப்படும் குழந்தைகள் விரைவில் நலம் பெறுவர். நன்னாரி சாறு கலந்த நீரை இரு துளிகள் கண்களில் விட கண்கள் குளிர்ச்சியாகி கண் எரிச்சல் சரியாகும்.

நன்னாரி வேர்ப்பொடியை தேன் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வர, ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். செரிமான பிரச்னைகள் சரியாகும். வயிற்றுப்புண் சரியாகும். சிறுநீர் கடுப்பு மற்றும் எரிச்சல் சரியாகும். மஞ்சள் காமாலை பாதிப்புகள் நீங்கும். நன்னாரி வேரில் காணப்படும் கிழங்கை உலர்த்தி காயவைத்து ஊறுகாய் போல செய்து சாப்பிட கல்லீரல் சம்மந்தப்பட்ட நோய்கள் சரியாகும். மூலம், ஒவ்வாமை சரியாகும். நன்னாரி வேரினை பொடி செய்து கொத்துமல்லி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வயிறு, குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும்.

நன்னாரி இலையை நெய்யில் வதக்கி மிளகு, இந்துப்பு மற்றும் சிறுபுளி சேர்த்து துவையல் செய்து சாப்பிட, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்னைகள் சரியாகும். துவையல் செய்து சாப்பிட முடியாதவர்கள் நன்னாரி வேரைத் தட்டி பனைவெல்லம், எலுமிச்சை சாறு நீர் கலந்து சாப்பிடலாம்.

நன்னாரியில் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் ஆன்டி டியூமர் தன்மை உள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், உடல் சோர்வு  இருக்கும்போது நன்னாரி பொடியை எலுமிச்சை சாறு அல்லது ஆரஞ்சு சாறு கலந்து சாப்பிட சோர்வு மறைந்து புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பலாம் என்கிறார்கள்.

கோடை காலத்தில் சிலருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் இருந்துகொண்டே இருக்கும். அதிக தாகம் நீங்க 50 கிராம் நன்னாரி வேரை 250 மி.லி. நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி 50 கிராம் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து பாகு பதத்தில் 10 மி.லி. சாப்பிட்டு வர தாகம் தீரும்.

கோடையில் சிலருக்கு அதிக வியர்வை ஏற்படும். இதற்கு நன்னாரி, வெட்டி வேர், விளாமிச்சி வேர், மஞ்சட்டி, பாசிப்பயறு ஆகியவற்றுடன் நான்கில் ஒரு பங்கு கோரைக்கிழங்கு சேர்த்து அரைத்து சலித்து தினமும் தேய்த்து குளித்து வந்தால் அதிக வியர்வை நீங்கும்.

நன்னாரி வேர் பொடி அரை ஸ்பூன் 20 கிஸ்மிஸ் பழம் சேர்த்து கொதிக்க வைத்து, ஆறிய பிறகு வடிகட்டி இரவு சாப்பிட்டு வர மலச்சிக்கல் சரியாகும். சுவாசக் கோளாறுகள் சரியாகும்.

பச்சை நன்னாரி வேரை 20 கிராம் தட்டி, 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து, வடிகட்டி 100 மி.லி.யை காலையிலும், மாலையிலும் குடித்து வந்தால் பித்த நோய், நீரிழிவு உடலில் சூடு அதிகமாவதால் வரும், மேக வேட்டை மற்றும் மேக நோய் தீரும். சொறி சிரங்கு மறையும் ஆண்மைக் குறைவு சரியாகும்.

நன்னாரி, வேரினைப் பொடியாக்கி சோற்றுக் கற்றாழையின் சோறு கலந்து சாப்பிட விஷக்கடிகள் குணமாகும். நன்னாரி, தனியா, சோம்பு இவை அனைத்தும் சம அளவு எடுத்து பொடி செய்து தினமும் சாப்பிட்டு வர உடல் பருமன் குறையும். நெல்லிக்கனி சாற்றில் நன்னாரி வேரை ஊறவைத்து, உலர்த்தி பொடி செய்து சாப்பிட இதயம் வலுவடையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com