இயற்கை வண்ண ஓவியம்! ஆரெம்கேவியின் கைவண்ணத்தில் காவியம்!

Lino saree...
Lino saree...
Published on

காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவைகள் விற்பனையில் தனி முத்திரை பதித்துவரும் ஆரெம்கேவி நிறுவனம், நேர்த்தியான, புதுமையான பல படைப்புகளை அறிமுகப்படுத்துவதிலும் சிறப்பான இடத்தை தக்க வைத்து வருகிறது. அந்த வரிசையில் மேலும் பல புதிய படைப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

1924 - ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆரெம்கேவி சில்க்ஸ், இந்திய பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டாக விளங்கும் பட்டு புடவைகளின் கைவினைத்திறன் மற்றும் புதுமைகளுக்காக பல தேசிய விருதுகளை வென்றுள்ளது.

ஆரெம்கேவி டிசைன் ஸ்டுடியோ, கைதேர்ந்த நெசவுக் கலைஞர்களைக் கொண்டு தனித்துவமான பட்டுப்புடவைகளை உருவாக்கியுள்ளது. ஹம்ச தமயந்தி, ஐஸ்வர்யப்பூக்கள், சின்னஞ்சிறு கிளியே, தர்பார் கிருஷ்ணா, குறளோவியம், பிரமிப்பூட்டும் ரிவர்சிபிள் சேலை, 50000 வண்ணங்கள் கொண்ட பட்டுப்புடவை, வர்ணஜாலம் பட்டுப்புடவை தொகுப்புகள், புதுமையான இயற்கை வண்ண பட்டுப்புடவைகள் மற்றும் லினோ பட்டுப்புடவைகள் அழகியல் பேசும் அற்புத புடவைகள்.

Lino saree...
Lino saree...

ஆரெம்கேவியின் மிகச்சிறந்த கைவினைஞர்கள் மூலம் நெய்யப்பட்ட 50000 வண்ணங்களைக் கொண்ட புடவையை, தங்களுக்கு பிடித்த வண்ணங்களில் வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுத்து கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.

ஆரெம்கேவியில் பல வகையான ஃபேன்சி மற்றும் எம்பிராய்டரி செய்யப்பட்ட புடவைகள், சல்வார் கமீஸ்கள், பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ‘ரெடிமேட்’ ஆடைகளும் உள்ளன.

இயற்கை வண்ண தொகுப்பில், வடிவமைக்கப்பட்ட புடவைகள் அனைத்தும் இயற்கை முறையில் சாயம் ஏற்றப்பட்டதாகவும், பல ஆசிய கலாச்சாரங்களை பொலிவுடன் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதாகவும் அமைந்துள்ளது தனிசிறப்பு. கைவினைத்திறனை கொண்டாடும் விதத்திலும் ஃபேஷனுக்கோர் ‘Trend Setter’ ஆகவும் இந்த கலெக்ஷன்கள் அமைந்துள்ளன.

Folk art saree...
Folk art saree...

பலதரப்பட்ட கலாச்சார பாரம்பரியம் மற்றும் வியப்பூட்டும் கலைத்திறன் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் மூன்று பிரிவுகளில் இப்புடவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கிராமப்புறக் கலை:

யற்கை வண்ண பட்டுப்புடவை, கிராமப்புறங்களின் வாழ்வியல் முறை சார்ந்த பாரம்பரியத்தின் கலை வடிவங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய சாயமேற்றும் நுட்பங்களின் திறனை காட்சிப்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு புடவையும் இயற்கையின் அற்புதங்களிலிருந்து தருவிக்கப்பட்ட நிறங்களைக் கொண்டு ஓவியமாக உருவாக்கப் பட்டுள்ளது. ஆசியாவின் பலதரப்பட்ட சமுதாயங்களின் வரலாறுகள், சடங்குகளின் பிரதிபலிப்புகள் மற்றும் வாழ்க்கை முறைகளின் அடையாளங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது.

Folk art saree...
Folk art saree...

மைசூர் நகரத்தின் அடையாளமான அம்பாவிலாசின் மைசூர் கிருஷ்ணா பட்டுப்புடவை, இந்தோனேசிய பழங்குடி மக்களின் கலாச்சார மினங்கா பாவு கலை வடிவ பட்டுப்புடவை மற்றும் தாய்லாந்தில் லாய் தாய் கலை வடிவ பட்டுப்புடவை பண்பாட்டு பெருமை பேசும் இயற்கை வண்ண அற்புத புடவைகள் வடிவமைப்பின் நேர்த்தி மற்றும் ‘ஹசே சித்தாரா’வின் நுட்பமான டிசைன்கள் வரை ஒவ்வொன்றுமே தனித்துவமான வரலாற்றை காட்சிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
உங்களுக்கு சளி பிடித்தாலும் இந்த 6 பழங்களை தாராளமாக சாப்பிடலாம்! 
Lino saree...

இந்திய கலாச்சாரம்:

ந்திய கலாச்சார தொகுப்பில் இடம்பெற்றுள்ள பட்டு புடவைகள் காலத்தால் அழியாத பாரம்பரியங்கள் மற்றும் கைவினைத் திறன்களை வெளிப்படுத்தும் அற்புத படைப்புகள்.

இயற்கை வண்ணம் கொண்டு ஆரெம்கேவியின் டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களை கொண்டு உன்னத படைப்புகளாக  வெள்ளி மற்றும் பொன்னிற ஜரிகையில் புஜோடி கட்ச் பகுதியின் கலாச்சார வேலைப்பாடுகளுடன் நெய்யப்பட்ட சுடரின் ஆரஞ்சு வண்ண பட்டுபுடவை. மஞ்சள், ரஸ்ட் மற்றும் பச்சை வண்ண வாழைப்பூ வரிகள் கொண்ட அற்புதமான பட்டுபுடவை.

Heritage  saree...
Heritage saree...

தென்னிந்தியாவின் பண்பாட்டு அடையாளங்களோடு கோர்வை முறையில் பாரம்பரியமிக்க மீனாக்காரி வேலைப்பாடுகளுடன் நெய்யப்பட்ட மஸ்டர்ட் வண்ண பட்டுபுடவை.

இண்டிகோ வண்ணத்தில் உடல் முழுவதும் மல்லி மொக்குகளும், முந்தானையில் திரிகோண மாங்காய் வடிவமும், கொண்ட இண்டிகோ திரிகோண மாங்காய் வடிவ பட்டுபுடவை.

500 ஆண்டுகளுக்கு முன்பு அரச பரம்பரையினர் பயன்படுத்திய நெசவு முறையோடு, கமலம் புட்டா மீனாக்காரி வேலைப்பாடுகளுடன் கூடிய கோடாலி கருப்பூர் பட்டுபுடவை. பாரம்பரியமிக்க பைத்தனி வடிவங்களால் நெய்யப்பட்ட  அரக்கு ஆரஞ்சு வண்ண பைத்தனி பட்டுபுடவை.

Heritage  saree...
Heritage saree...

லினோ கலெக்ஷன் :

காப்புரிமை பெற்ற லினோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நெய்யப்பட்ட லினோ பட்டுப் புடவைகள் பாரம்பரிய பட்டுப் புடவைகளிலிருந்து 40 சதவிகிதம் எடை குறைவாகவும், இலகுவானதாகவும் இயற்கை வண்ணம் கொண்டு உருவாக்கப்பட்ட பட்டுப் புடவைகள்.

விவா மெஜந்தா லினோ பட்டுப்புடவை, தாஜ் லினோ வர்ணா பட்டுப்புடவை, லினோ வர்ணா புட்டா பட்டுப்புடவை, லினோ ஃப்ளோரல் வர்ணா பட்டுப்புடவை மற்றும் கிளாஸிக் லினோ வர்ணா பட்டுப்புடவை ஆகிய லினோ கலெக்ஷன் புடவைகள் காலத்திற்கேற்ற பொலிவுடன் ஆரெம்கேவி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com