
* குஜராத்தில் நவராத்திரி 9 நாட்களும் பெண்கள் கும்மியடித்து நடனமாடுவார்கள். இந்த நடனத்துக்கு கரவோ என்று பெயர்.
* தமிழகத்தில், நவராத்திரி கொலு வைக்கப்படுவது போல, ஜப்பான் நாட்டிலும் கொலு வைத்து வழிபடுகின்றனர். நம்மூர் சரஸ்வதி போல, அங்கு, 'பெண் டென்' என்ற தேவதையை வணங்குகின்றனர். சரஸ்வதி கையில் ஓலைச்சுவடி வைத்திருப்பது போல, அந்த தேவதையின் கையில் புத்தகம் இருக்கும்.
* தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் முப்பெரும் தேவியர் இணைந்த அர்த்த நாரீஸ்வர துர்க்கை உள்ளது. 3 தலை, 8 கைகளுடன் இந்த துர்க்கை காணப்படுகிறார்.
* துர்கை அம்மனின் ஒன்பது அவதாரம் பின்வருமாறு: மகேஸ்வரி, ராஜேஸ்வரி, வராஹி, லட்சுமி, வைஷ்ணவி, சாந்தி தேவி, அன்னபூரணி, துர்கா, மற்றும் சரஸ்வதி.
* ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியில் திரிபுர சுந்தரி கோவிலில் ஒரு நவராத்திரிக்கு கலசத்தில் வைக்கப் படும் தேங்காய் அடுத்த ஆண்டு நவராத்திரி வரை கெடாமல் இருக்கும்.
* ஒடிசா மாநிலத்தில் நவராத்திரி 16 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது சோடஷ பூஜை என்று அழைக்கப்படுகிறது.
* புரட்டாசி மாதத்தை எமனின் கோரை பல் என்று அக்னி புராணம் சொல்கிறது. இந்த மாதம் எமனின் பாதிப்பில் இருந்து தப்பவே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.
* நவராத்திரி நாட்களில் முப்பெரும் தேவியரின் கதைகளை கேட்டால் அம்மைநோய் தாக்காது என்பது நம்பிக்கை.
* கொலு எனும் சொல் பண்டைய தெலுங்கு மொழியில் இருந்து வந்ததாம். தெலுங்கு மொழியில் கொலு என்றால் வீற்றிருத்தல் என்று பொருள்.
-ஆர். பிரசன்னா, ஸ்ரீரங்கம்
நவ துர்க்கை வழிபாடு முதல் நாளிலிருந்து வரிசையாக...
பண்டைய காலங்களில் ஒன்பது நாட்களும் துர்க்கையை ஒன்பது விதமாக வழிபடும் வழக்கம் இருந்தது.
1. சைலபுத்ரி
2. பிரம்மசாரிணி
3. சந்த்ரகண்டா
4. கூஷ்மாண்டா
5. ஸ்கந்தமாதா
6. காத்யாயணி
7. காலராத்ரி
8. மகாகௌரி
9. ஸித்திதாத்ரி
நவ ராகங்கள்
ஒன்பது நாட்களும் பாடவேண்டிய ராகங்கள்
1. தோடி
2.கல்யாணி
3. காம்போதி ,கௌளை
4. பைரவி
5.பந்துவராளி
6. நீலாம்பரி
7.பிலஹரி
8.புன்னாகவராளி
9. வசந்தா
-கே.எஸ். கிருஷ்ணவேனி, மைலாப்பூர்
_________
நவ அம்மன் பாடல்கள் :
1. தேவி மகாத்மியம்
2. அபிராமி அந்தாதி பாடல் தவரிகள்
3. துர்கா அஷ்டகம்
4. இலட்சுமி தோத்திரம் (கனகதாரா தோத்திரம்)
5. சகலகலாவல்லி மாலை
6. சரஸ்வதி அந்தாதி
7. மஹிஷாசுரமர்த்தினி தோத்திரம்
8. ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்
9. லலிதா நவரத்தின மாலை
-சௌமியா சுப்ரமணியன். பழைய பல்லாவரம்.
_________
நவ கோலங்கள்
நவராத்திரி ஒன்பது நாட்களும் முதல் நாள் தொடங்கி அடுத்தடுத்த நாட்களில் அரிசி மாவினால் பொட்டுக்கோலம், கோதுமை மாவினால் கட்டக் கோலம், முத்தைக் கொண்டு முத்துக் கோலம், அட்சதையினால் படிக்கட்டு கோலம், கடலையினால் பறவைகள் கோலம் ,பருப்பினால் தேவியின் நாமம், பூக்களால் திட்டாணிக் கோலம்,காசுகளைக் கொண்டு பத்மக் கோலம், கற்பூரத்தைப் கொண்டு ஆயுதக் கோலம் என ஒன்பது வகையான கோலமிட தேவி அருள் பெறலாம்.
-மகாலக்ஷ்மி சுப்ரமணியன், காரைக்கால்.
_________
நவராத்திரி நிவேதனங்கள் !
முதல் நாள்
*சுண்டல், வெண்பொங்கல்*
• இரண்டாம் நாள்
*புளியோதரை*
• மூன்றாம் நாள்
*சர்க்கரைப் பொங்கல்*
• நான்காம் நாள்
*கதம்பம் (காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்)*
• ஐந்தாம் நாள்
*ததியோதனம் தயிர்சாதம், பொங்கல்*
• ஆறாம் நாள்
*தேங்காய் சாதம்*
• ஏழாம் நாள்
*எலுமிச்சை சாதம்*
• எட்டாம் நாள்
*பாயஸôன்னம் ( பால் சாதம்)*
• ஒன்பதாம் நாள்
*அக்கார அடிசில் (பச்சரிசி,பால், சர்க்கரை கலந்த பால் பாயசம்), சர்க்கரை பொங்கல்.*
-சௌமியா சுப்ரமணியன், பழைய பல்லாவரம்.