நான் சிறுவனாக இருந்தபோது, எங்கள் வீட்டில் கொலு வைக்க வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுவேன். ஆனால், என்னுடைய அப்பாவின் அத்தை இரண்டு பேர் சிறு வயதிலேயே கணவரை இழந்துவிட்டதால் நம் வீட்டில் கொலு வைப்பது ராசி இல்லை என்று சொல்லிக்கொண்டே இருந்தார்கள். பிறகு என் அம்மா, "பரவாயில்லை கடைசி மூன்று நாட்கள் வைக்கலாம்" என்று மூல நட்சத் திரத்தன்று மட்டும் வீட்டில் கொலு வைப்பார்கள். என் அக்கா, தங்கைகள் எல்லோரும் படி கட்டி அதில் கொலு பொம்மைகளை வரிசையாக வைப்பார்கள். நான் பார்க் வைப்பேன். எங்கள் வீட்டில் கொலுவைவிட பார்க்தான் மிகப் பெரியதாக இருக்கும். அந்தப் பார்க்கில் நான் அட்டைப் பெட்டிகளைச் சேகரித்து அதில் சிறு சிறு வீடுகளைக் கட்டி வைத்து அதன் மீது குட்டியான பல்புகளை எரிய விடுவேன். எல்லோர் வீட்டிலும் வைக்கும் 10 நாள் கொலுவைவிட எங்கள் வீட்டில் வைக்கும் 3 நாள் கொலு மிகவும் பிரபலமானது. எல்லோரும் வந்து பார்த்துவிட்டு நான் வைத்திருக்கும் பார்க்கை மிகவும் ரசித்து என்னைப் பாராட்டுவார்கள். 'நிச்சயமா நீ ஒரு இஞ்சினியராகத்தான் வருவாய். உனக்கு மெக்கானிக்கல் மூளை அதிகமாக இருக்கிறது" என்று அவர்கள் என்னை ஆசீர்வாதம் செய்ய, அதேபோல் நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். நவராத்திரி காலம் என்றாலே நான் சிறுவயதில் செய்த வீடுகள் என் மனதில் தோன்றும். என்றென்றும் நினைக்க வைக்கும் இனிமையான பசுமையான மலரும் நினைவுகள். - வெ. முத்துராமகிருஷ்ணன், மதுரை-------------------------------நினைக்க நினைக்க மகிழ்வூட்டும் நவராத்திரி நினைவலைகள்நான் பள்ளியில் படிக்கும்போது கால் பரீட்சை லீவில் நவராத்திரி கொண்டாட்டங்கள் வரும். எங்கள் வீட்டில் பத்து நாட்களும் கொலு வைப்பார்கள் என்பதால் முதல் நாளே அரிசி டப்பா ஸ்டூல் என்று எல்லாவற்றையும் வைத்து, அதன் மேல் அப்பாவின் வெள்ளை வேட்டியை விரித்து பொம்மைகளை அம்மா அழகாக அடுக்கி வைப்பார்கள். நானும் எங்க அண்ணன், தம்பி, தங்கை எல்லோரும் உதவி செய்வோம். சில நேரம் கீழே போட்டு உடைத்துவிடும்போது அம்மா திட்டுவாளே தவிர, அடிக்க மாட்டார். காலையில் சாப்பாடு முடிந்த உடனேயே ஒரு மணிக்கே என் அம்மா எனக்கு மாலை செல்வதற்குத் தேவையான எல்லா அலங்காரங்களும் செய்யத் தொடங்கி விடுவார். ஒரு நாள் கிருஷ்ணர் வேடம், குறத்தி வேடம், பட்டு மாமி வேடம் என்று விதவிதமாக என்னை ஒரு அலங்கார பொம்மை போல அலங்காரம் செய்து மாலை தெருவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் போகச் சொல்வார். அப்போது கூச்சம் என்பதெல்லாம் தெரியாது என்பதால் நான் எனக்குத் துணையாக என் தம்பி வர நாங்கள் இருவரும் கிளம்புவோம். என் தம்பியின் கையில் ஒரு மஞ்சள் பை இருக்கும். ஒரு வீடு விடாமல் எல்லார் வீட்டிற்கும் சென்று அவர்கள் வீட்டில் வைத்திருக்கும் கொலுவிற்குச் சென்று பாட்டு பாடுவேன். அதற்கு அவர்கள் கொடுக்கும் சுண்டலை என் தம்பி வைத்திருக்கும் மஞ்சள் பையில் சேகரித்து கொள்வோம். .தினமும் விதவிதமாக உடை அணிந்து கொள்ளும் நான் எல்லார் வீட்டிலும் தினமும் ஒரே பாடலையே பாடுவேன். அவர்களும் அதற்கு சந்தோஷமாக கேட்டு எனக்கு வெற்றிலை பாக்கு, சுண்டல் என்று கொடுப்பார்கள். இன்று அலைபேசியில் ஒரு நாளைக் குறிப்பிட்டு அந்த நாள் மட்டுமே நவராத்திரி கொலுவுக்கு வர வேண்டும் என்று சொல்லிவிடுகிறார்கள். அதனால் நாம் கண்டிப்பாக அந்த நாளுக்குப் போகவேண்டும் போகவில்லை என்றால் நான் அலைபேசியில் வரமுடியாது என்று சொல்லிவிட வேண்டும். இயந்திரத்தனமான இன்றைய நவராத்திரி கொலுவினைப் பார்க்கும்போது, அன்று நான் சின்னக் குழந்தையாக இருந்தபோது எல்லோரும் வீடுகளுக்கும் தினமும் விதவிதமான உடை அணிந்துகொண்டு சென்றது மலரும் நினைவாக நினைவுக்கு வர, அவற்றை நான் இங்கு பகிர்ந்து இருக்கிறேன் - உஷாமுத்துராமன், திருநகர்------------------------------- நவராத்திரி நினைவலைகள்ஸ்கூல் நாட்களில் கொலு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது விடுமுறைதான். க்வார்டர்லி பரீட்சை முடிந்து, நவராத்திரிக்கு ஒரு பத்து நாள் விடுவார்களே. எக்ஸாமை சுமாராகவோ சொதப்பலாகவோ எழுதி இருந்தாலும், லீவுக்கு அப்புறம்தானே மார்க் வரும் என்ற ஒரு குருட்டு தைரியம் வேறு. அதனால், சந்தோஷமாய் கொலுவுக்குத் தயாராவோம்..ஒரு மத்தியான பொழுதில், பரணிலிருந்து மரப்பெட்டி இறக்கப்படும். வீட்டிலுள்ள வாண்டுகள் சுற்றி உட்கார, துணிக்குள் பத்திரமாய் கட்டி வைக்கப்பட்ட பொம்மைகள் விடுதலை பெறும். துணியைப் பாதி பிரிக்கும்போதே, “இது செட்டியார், இது அனுமார், இது போலீஸ்” என்று பசங்க எல்லாரும் ஊகித்துச்சொல்ல, சுவாரஸ்யம் கூடும். அந்த நாளில், இப்போதுள்ள மாதிரி ரெடிமேட் கொலுப்படி கிடையாதே… சில மரப் பலகைகள் இருக்கும். அதனை வைத்துப் படி செய்வார்கள். இல்லாவிட்டால், பழைய இரும்புப் பெட்டி, மர பெஞ்ச் என்று வைத்து படி அமைப்பார்கள். அடுத்தது, மலை, பார்க் கட்டுவது. அதற்காகக் குட்டி குட்டி பொம்மைகள், டேபிள், சேர் எல்லாம் விற்கும். அந்த மலையைக் கட்டியபிறகு அதன் மேல் கேழ்வரகோ, கடுகோ தூவிவிட்டு, தினமும் காலை எழுந்தவுடன் முளை விட்டதா என்று ஆர்வத்துடன் பார்ப்போம்.கிளிஞ்சல்களைப் பார்டராய் வைத்து, கரித்தூள் எல்லாம் போட்டு ரோடு அமைத்து அதில் பொம்மை கார், சைக்கிள் எல்லாம் வைப்போம். பாட்டி, அத்தைகள் போட்ட மணி பொம்மைகள், விரிப்புகள் எல்லாம் பார்வையாய் வைக்கப்படும். நவராத்திரி நாட்களில் தெருக்களில் முருகன், வள்ளி, ராமர், ஆண்டாள் என்று குழந்தைகள் வேஷம் போட்டபடி உலா வருவார்கள். சின்ன பெண்களுக்குப் பட்டுப் பாவடை, ஜிமிக்கி, கொலுசு, கண்ணாடி வளையல்கள், மருதாணி என்று ஒரே கொண்டாட்டம்தான். சிலர் பின்னல் பின்னி குஞ்சலம் வைத்துக்கொண்டு , ராக்கோடி, தலைசாமான் எல்லாம் வைத்துக்கொண்டு ஜோராய் இருப்பார்கள். முக்கியமான மேட்டர்… சுண்டல். சுண்டல் கலெக்ஷனுக்கு ஒரு க்ரூப்பாய் கிளம்பி, ஒரே பாட்டை எல்லோரும் சேர்ந்து பாடி (கத்தி) சுண்டலை வெற்றிகரமாய் வாங்கிக் கொண்டு வரும்போது முகத்தில் ஒரு பெருமை பொங்கும் பாருங்க… சான்ஸே இல்லை. இரவு ஒன்பது மணி வரை கலெக்ஷன் நடக்கும். அப்போதெல்லாம் கொலு விஸிட்டுக்கு நோ இன்விடேஷன். தினமும் யாராவது கொலு பார்க்க வருவார்கள். வெற்றிலை, பாக்கு, மஞ்சள் குங்குமம், ஒரு வாழைப்பழம். இவ்வளவுதான். சிலர் சாத்துக்குடி தருவார்கள். வெகுசிலர் ப்ளவுஸ் பிட் தருவார்கள். இப்போது போல் ஸ்நாக்ஸ், கூல் ட்ரிங்க்ஸ் இதெல்லாம் மூச். போவோம், பார்ப்போம், பாடுவோம். ரிப்பீட்டு… அவ்வளவுதான். எல்லாமே சுலபமாய், சிம்பிளாய், நிறைவாய் இருந்தது. அடுத்தது சரஸ்வதி பூஜை. போதும், போதும் என்று சொல்லச் சொல்ல, ஸ்கூல் பையிலிருந்து எல்லா புத்தகங்களையும் கொண்டு ஸரஸ்வதி தேவிக்கு முன்னால் வைத்து விடுவோம். ஆஹா...அன்று படிப்பு என்ற வார்த்தையே யாரும் சொல்ல மாட்டார்கள். வடை, பாயசத்தோடு சாப்பாடு. சாயங்காலம் பொரி, வெல்லம்… அடுத்த நாள்தான் மேட்டரே.. விஜயதசமி பூஜை முடிந்தது, ஒரு மணி நேரம் படிக்க வேண்டும் என்று சொல்லி விடுவார்கள். பரிதாபமாய் முகத்தை வைத்துக்கொண்டு படிப்போம் (நடிப்போம்). அன்று இரவே ஜன்னி தொடங்கிவிடும். கண்ணை மூடினால், பெயரைக் கூப்பிட்டு டீச்சர் பேப்பர் தரும் காட்சி வந்து வந்துபோகும். பாஸ் மார்க் வருமா என்று மனம் கணக்கு போடும்.ஆனா, அதெல்லாமே ஒரு ஜாலிதானே. இப்போதும் கொலு, நவராத்திரி என்றால் ஒரு குதூகலம், புத்துணர்ச்சி வருகிறது. ஒ.. கொலு வந்துவிட்டதே. வேலை இருக்கு வாசகீஸ்… எல்லோருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள். - ப்ரஸன்னா வெங்கடேஷ், நவி மும்பை