டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்நரம்பியல் நிபுணர்.நீரிழிவு உள்ளவர்களுக்கு வரக்கூடிய, ஏற்படக்கூடிய நரம்பியல் பிரச்னைகள் சிலவற்றை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நரம்பியல் நிபுணரான (Consultant Neurology, Neurophysiology) டாக்டர் புவனேஸ்வரி ராஜேந்திரன்.சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நரம்பியல் தொடர்பாக என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது டாக்டர்?பொதுவாக, விட்டமின் குறைபாடு, தைராய்ட் பிரச்னை உள்ளவர்கள், கேன்சருக்காக கீமோ சிகிச்சை செய்து கொண்டவர்கள் ஆகியோருக்கு நரம்பியல் பாதிப்பு வரக் கூடிய வாய்ப்பு உண்டு. சர்க்கரை நோய் - (நீரிழிவு நோய்) உள்ளவர்களில் சிலருக்கு வரக்கூடிய நரம்பியல் பிரச்னைகளை டயபடிக் நியூரோபதி (Diabetic neuropathy) என்கிறோம்.நம் உடலில் உள்ள நரம்புகளில் முக்கியமானவை பெரிஃபெரல், ஆட்டோனமிக், மற்றும் க்ரேனியல் நரம்புகள். இவற்றில் பெரிஃபெரல் (Peripheral) நரம்புகள், கைகள், கால்கள் போன்ற நம்மால் அசைக்கப்படும் உறுப்புக் களை இயக்குபவை.ரத்த ஓட்டம், இதயத்துடிப்பு, ஜீரணம், மூச்சு விடுதல், சிறுநீரகம் போன்ற, தானே இயங்கும் உறுப்புக்களை இயக்குவது, ஆட்டோனமிக் நரம்புகள் (Autonomic).மூளையிலிருந்து நேரடியாக முகம், கண்கள், கழுத்து, தலை, காது போன்றவற்றுக்கான பார்வை, வாசனை, சுவை, கேட்டல் போன்றவையெல்லாம் நிகழ்வது க்ரேனியல் நரம்புகளால்தான்.சர்க்கரை உள்ளவர்களுக்கு இவற்றில் எந்த நரம்புகளிலும் பாதிப்பு வரலாம் என்றாலும், குறிப்பாக, கால்களில் ஓடும் பெரிஃபெரல் நரம்புகளைத்தான் அதிகமாகப் பாதிக்கிறது..இது எத்தகைய அறிகுறிகளால் வெளிப்படுகிறது?கைகளில் கால்களில், இறுக்கமாக கையுறை அல்லது சாக்ஸ் அணிந்தால் வரக்கூடிய மரத்த உணர்ச்சி (Glove-stocking distribution of numbness), குறுகுறுப்பு, கால் வலி, குறிப்பாக இரவு நேரங்களில் வரும் அதிக வலி, ஊசி குத்துவது போல் வலி, தசைகளில் இறுக்கம், வயிற்றில் எரிச்சல், எலும்பு மூட்டுக்களில் வலி என்பது போன்ற அறிகுறிகள் வரலாம்.ஆனால், எது வந்தாலும் தகுந்த மருத்துவச் சிகிச்சை மூலம் கட்டுப்படுத்த முடியும்.இவையெல்லாம் ஏன் ஏற்படுகின்றன?ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்போது நரம்புகளைப் பாதிக்கிறது. தவிர, உடலில் சர்க்கரை சரியானபடி எடுத்துக்கொள்ளப்படாமல், (Metabolism) அவை நச்சுப் பொருளாக மாறிவிடும். அதனாலும் பெரிஃபெரல் நரம்புகள் பாதிப்புள்ளாகி கால்களில் வலிகொடுக்கும்.நரம்புகளிலிருந்து செல்லும் ஃபைபர்கள் எனப்படும் கிளைகள் பாதிக்கப்பட்டால், ஃபைப்ரல் நியூரோபதி என்னும் பிரச்னை வர வாய்ப்பு உண்டு.இவை எல்லாவற்றுக்குமே பொதுவான அறிகுறிகள் கை கால்களில் ஏற்படும் வலி, குறிப்பாக இரவு நேரங்களில் வலி அதிகரித்தல், குறுகுறுப்பு, மரத்துப் போதல் போன்றவையே.வேறு விதமான அறிகுறிகள் ஏற்படுமா டாக்டர்?டயபடிக் நியூரோபதியிலேயே ஆட்டோனமிக் நியூரோபதி என்பது ஒரு வகை. இந்த வகை பாதிப்பு வரும்போது, ரத்த அழுத்தம் குறைவதால் மயக்கம் வரக்கூடும்.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னகளான வயிற்றுப் போக்கு, வாந்தி, மலச்சிக்கல், செரிமானமின்மை இவையும் ஏற்படலாம். அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு, தொற்று, கட்டுப்பாடற்ற சிறு நீர்க்கசிவு, அதிகவியர்வை, இப்படியான சில அறிகுறிகளும் ஏற்படலாம். இவற்றில் எது வந்தாலும் உடனே மருத்துவரை அணுகி தகுந்த பரிசோதனைகள் மூலம் காரணத்தைக் கண்டுபிடிப்பது அவசியம்.இதற்கான சிகிச்சைகள் என்ன?முதலில் உடலில் க்ளைசிமிக் இண்டெக்ஸ் (glycemic index) எனப்படும் ரத்த சர்க்கரை அளவின் குறியீட்டைக் கட்டுப்படுத்துதல் அவசியம்.அல்ட்ரா சவுண்ட் டெஸ்ட் மற்றும் ஃபிசியோதெரபி சிகிச்சைகள், பிரச்னைக்கான அறிகுறிகள் தெரிந்தபின் அவற்றுக்கான மருந்துகள் தரப்படுகின்றன. நியூரோபதிக் கென்றே தயாரிக்கப்பட்ட சிறப்பு வலி நிவாரணி மருந்துகள் உள்ளன.இவை, நரம்புகளை அமைதிப்படுத்தி, நியூரோபதியால் ஏற்படும் அறிகுறிகள், மற்றும் அடையாளங்களினால் (Symptoms and signs) உண்டாகும் பாதிப்புக்களைக் குறைக்கும். விட்டமின் பி 12, ஸிங்க் சல்ஃபைட் போன்ற மருந்துகள் க்ளைசிமிக் அளவைக் கட்டுப்படுத்துகின்றன.கால்களை பாதிப்பதால், பாதங்களின் பராமரிப்பு மிக மிக அவசியம். வீட்டில் மற்றும் வெளியில் பயன்படுத்தும் சரியான காலணிகள் தேர்வு இவையெல்லாம் டையபடிக் நியூரோபதி பாதிப்பு வந்தால் தேவைப்படுபவை..அறுவைச் சிகிச்சை தேவைப்படுமா?சர்க்கரை உள்ளவர்களில் ஒரு சிலருக்கு, காலில் புண் ஏற்பட்டு ஆறாமல் இருந்தாலோ, கைகளில் கார்பல் டனல் சின் ட்ரோம் (முன்பே நாம் இதைப் பற்றி எழுதியுள்ளோம்)அதிகமானாலோதான் அறுவை செய்ய வேண்டி வரும். மற்றபடி தேவையில்லை.வயிறு, சிறுநீரகம் இவற்றில் வரும் ஆட்டோனமிக் நியூரோபதிக்கும், அவற்றுக்கான தீர்வாய் மருந்துகள் தரப்படுகின்றன.பொதுவாக டயபடிக் நியூரோபதி சர்க்கரை உள்ளவர் களுக்கு வரும் வாய்ப்பு அதிகம் என்றாலும் இது குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை. எந்த அறிகுறி தோன்றினாலும் மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்கை எடுத்து கட்டுப்பாட்டுக்குள் வைக்கமுடியும்.