தினம் ஒரு பாயசம் - 4 நேந்திரப்பழ பாயசம்!

தினம் ஒரு பாயசம் - 4 நேந்திரப்பழ பாயசம்!
Published on
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

தேவையான பொருட்கள்:

நேந்திரம் பழம் – 4, நெய் - 5 ஸ்பூன்,  வெல்லம் - 300 கிராம், தேங்காய்த் துருவல் – 1 கப், பால் – 1 கப்,  ஏலப்பொடி – ½  ஸ்பூன்,  முந்திரி - 10.

செய்முறை:

நேந்திரப் பழத்தைப் பெரிய துண்டுகளாக்கிக் கொதிநீரில் போட்டு வேகவைத்து எடுத்துத் தோல் நீக்கி நன்கு மசித்துக்கொள்ளவும். கடாயில் 4 ஸ்பூன் நெய் விட்டுக் காய்ந்ததும் மசித்த பழத்தைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு இத்துடன் துருவிய தேங்காய், வெல்லம், பால் சேர்த்து நன்கு கிளறி கொதிக்கவிடவும். தேவையானால் ¼  கப் தண்ணீர் சேர்க்கவும் அல்லது பால். மேலும் ½ கப் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி விடவும். ஏலப்பொடியையும்  கொதிக்கும்போதே சேர்த்து விடவும். பிறகு நெய்யில் முந்திரியைத் துண்டுகளாக்கி வறுத்துச் சேர்த்துச் சூடாகப் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com