தெலங்காணா மாநிலப் பெண்கள் நவராத்திரி பண்டிகையின்போது ஒன்பது நாட்களும் ‘பதுகம்மா’ என்ற திருவிழாவைக் கொண்டாடுவர். மாநில அரசு பதுகம்மா விழாவுக்காகப் பெண்களுக்கு புடைவையைப் பண்டிகைச் சீராக அன்புக் காணிக்கை அளிக்கிறது. இந்த ஆண்டு ஒரு கோடி புடைவைகளை விநியோகம் செய்கிறது.மாநிலம் முழுவதும் உள்ள பயனாளிகளுக்குப் பதுகம்மா சேலைகளை அரசு விநியோகம் செய்கிறது. நவராத்திரிக்கு மூன்று நாட்கள் முன்பிருந்தே புடைவை விநியோகத்தை அரசாங்கம் தொடங்கிவிட்டது. 2017 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வருடாந்திர விநியோகத் திட்டத்தின் கீழ், தசரா பண்டிகையின்போது மாநிலத்தில் சுமார் ஒரு கோடி பெண்கள் இந்த பதுகம்மா சேலைகளைப் பெறுவர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி நிதிகள் பதுகம்மா சேலைகளை விநியோகிப்பார்கள். இதற்காக மாநில அரசு பெருமளவில் செலவு செய்கிறது. இவ்வருடம், செப்டம்பர் மாதம் 25ம் தேதி முதல் பதுகம்மா திருவிழா ஆரம்பமாயிற்று. ஒன்பது நாட்களும் பெண்கள் அம்மனுக்கு வழிபாடு நடத்தி, நைவேத்தியம் தயாரித்து தாம்பாளங்களில் கௌரி தேவியை மஞ்சளால் பிடித்து வைத்து, பூவினால் அலங்காரம் செய்து கோயிலில் அல்லது அதற்கென்று அமைக்கப்பட்ட மண்டபங்களில் நடுவில் வைத்து சுற்றிலும் ஒன்றாகக் கூடி பாடல்கள் பாடி கும்மியும் கோலாட்டமுமாகக் கொண்டாடுவர். தெலங்காணா தனி மாநிலமாக உருவான பின்னர் பதுகம்மா பண்டிகைக்கு மேலும், அங்கீகாரம் கிடைத்தது. .தெலங்காணாவில் பல ஆண்டுகள் முன்பே வசதியுள்ளவர் களுக்கான பிங்க் ரேஷன் கார்டு ரத்து செய்யப் பட்டுவிட்டது. ஏழைகளுக்கான ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற ரேஷன் அட்டைகள் மட்டுமே நடைமுறையில் உள்ளன. ரேஷன் அட்டையில் பெயர் இருந்து 18 வயதுக்கு மேல் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் புடவை சீர் வழங்கப் படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ரேஷன் கார்டு உள்ள பெண்களுக்கு 5.81 கோடி சேலைகளை மாநில அரசு விநியோகித்துள்ளது. இந்த ஆண்டு சுமார் ரூ.339.71 கோடி இதற்காக செலவிட்டுள்ளது. தெலங்காணா மாநில முதல்வர் கே.சி.ஆர் பேசுகையில், “மாநில சகோதரி களுக்கு புடைவை சீர் கொடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.ஜவுளி மற்றும் கைத்தறி அமைச்சர் கே.டி. ராமாராவு கூறுகையில், “பண்டிகைக் காலங்களில் மாநில அரசின் சார்பாகப் பெண்களுக்குப் பரிசாகப் புடைவைகளை வழங்குவதை இந்தத் திட்டம் உறுதி செய்கிறது. அதோடு மாநிலத்தில் உள்ள நெசவாளர்களுக்கு வாழ்வாதாரத் தையும் வழங்குகிறது. இப்போது நெசவாளர்களின் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது. சேலைகள் அனைத்தும் ஏற்கனவே மாவட்டங்களைச் சென்றடைந்துவிட்டதால், அவற்றை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது” என்றார்.இந்தப் புடைவைகள் சிர்சில்லாவில் 20,000க்கும் மேற்பட்ட விசைத்தறி நெசவாளர்களால் தயாரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் சுமார் ஒரு லட்சம் புடைவைகள் தயாரிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் 3 லட்சம் புடைவைகள் பஃபர் ஸ்டாக் பராமரிக்கப்பட்டது..100 சதவீத பாலிஸ்டர் ஃபிலமென்ட் நூலைப் பயன்படுத்தி 24 டிசைன்களில் 10 வண்ணங்களிலும் 240 வகையான நூல் பார்டர்களிலும் புடைவைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மாநிலப் பெண்களின் கருத்துக்களை மனதில் கொண்டு இவை வடிவமைக்கப்பட்டன. ஒரு கோடி புடைவைகளில் 6 மீட்டர் நீளமுள்ள சுமார் 92 லட்சம் புடைவை கள் தெலங்காணா முழுவதும் பெண்களுக்கு விநியோகிக் கப்படும். மீதமுள்ள 9 மீட்டர் நீளமுள்ள எட்டு லட்சம் புடைவைகள் வயதான பெண்களுக்காக அவர்களின் விருப்பப்படி தயாரிக்கப்பட்டது.