நானும் என் பெரிய அக்காவும் ஒருநாள் விட்டு ஒருநாள் ஒரு மணி நேரம் ஃபோனில் பேசிக்கொள்வோம்... குறைந்த பட்சம் 59 நிமிடங்களாவது ஃபிளாஷ்பேக் நாடா புலம்பல் மெட்டில் ஓடும்!61வது நிமிஷம், “சே! இந்தக் காலத்து கேர்ள்ஸ் லக்கிடி! நாம்ப அந்தக் காலத்துல பொறந்து தொலைச்சுட்டோம்”னு பெருமூச்சுடன் பேச்சை முடிப்போம்... அல்லது தொடருவோம்!(“பார்த்துக்கிட்டே இரு... ஒருநாள் ஃபோன் வெடிக்கப் போகுது!” – இது என் கணவர் – எச்சரிக்கையா? சாபமா?)இந்த வாரம் எங்களுடைய உரையாடலின் சுருக்ஸ் இதோ! மற்றவங்க பேச்சை ஒட்டுக் கேட்க விருப்பமில்லாதவங்க, ப்ளீஸ் மேலே படிக்க வேண்டாம்!அக்கா: நானெல்லாம் கொலு வெச்சபோது எவ்வளவு கஷ்டப்படுவேன் தெரியுமா?நான்: இங்க மட்டும் என்னவாம்? மகாளய அமாவாசைக்கே பெண்டு நிமிர்ந்துடும்.அக்கா: ‘நவராத்திரி’ படத்துல ‘நவராத்திரி சுபராத்திரி’னு சாவித்ரி பாடற பாட்டு ஹெள ஸ்வீட்? ஆனா, யாரோ ‘செட்’ பண்ண கொலுவுக்கு, அவங்க ஜாலியா வாயசைச்சா போதும். ஆனா நாம்ப அப்படியா?நான்: முன்னெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு புடைவை வாங்குவோம். இப்ப அந்த இன்ட்ரஸ்ட்கூட இல்ல!அக்கா: என்ன சலிச்சுக்குற! நம்ப மோடியைப் பாருடி... எப்பவும் மாப்பிள்ளை மாதிரி, ட்ரிம்மா... அவருக்கு ‘ஜேட் ப்ளு’ங்கிற நிறுவனம்தான் டிரஸ் டிஸைன் பண்ணுதாம். மன்னர் எப்படியோ மக்களும் அப்படியே இருக்க வேணாமோ? அவ்வளவு தோரணையா இல்லாவிட்டாலும், நாம் ‘பளிச்’னு டிரஸ் பண்ணி இருந்தால்தானே கெளரவம்?நான்: அதெல்லாம் நம்ப காலமா போச்சு! இப்ப ஆன்லைனில் பொம்மை, நகை, புடைவை, ஏன் ஒரே ஒரு கத்திரிக்காய் கூட (ரன்வீர் – தீபிகா விளம்பரம்) வாங்கிக்கலாங்கறதால, இந்தக் காலத்து பெண்களுக்கு எல்லாமே ஈஸி! தூசி!.அக்கா: ச்சே! நாம்ப இப்ப பொறந்திருக்கணும். ஜாலியா என்ஜாய் பண்ணியிருக்கலாம்! (இந்த டயலாக் அடிக்கடி வரும்!)நான்: மவுண்ட்ரோடுல பல்லவன் பஸ்ஸும், ‘ஆனந்த்’ தியேட்டர்ல ‘புன்னகை மன்னனும்’ ஓடிக்கிட்டிருந்த காலத்துலயே நவராத்திரி விழாவும் இருந்தா எப்படி? 2022 நவராத்திரி அதுக்கும் மேல ஒரு ஸ்டெப் போயிடுச்சுக்கா! இப்ப லீசுக்கே கொலுப்படி, பொம்மை எல்லாமே கிடைக்குது!அக்கா: அச்சா? வாடகைக்கா? (இவர் மும்பை வாசி!)நான்: ஆமா! ‘புட் ஆன் வீல்ஸ்’ங்கிற கம்பெனிக்கு, ஒரு மிஸ்ட் கால் கொடுத்தா போதும்! வீடு தேடி வந்து, நம்ப தேவைக்கு ஏற்ப கொலுப்படி வெச்சு, பொம்மை அலங்காரம், எல்லாமே செட் பண்ணிக் கொடுத்துட்டு போவாங்க... ஒன்பது நாள் கழிச்சு, மறுபடி வீட்டுக்கு வந்து படியையும். பொம்மைகளையும் எடுத்துட்டுப் போயிடுவாங்க.. வேலையும் மிச்சம்! இடமும் அடையாது!அக்கா: போன முறை யாரோ வெச்ச கடவுள் சிலைகளை நாம்ப பூஜையில வைக்கிறது நல்லதுதானான்னு தெரியலை. நம்ப வீட்டுல வழிவழியா வந்த பெரியவங்க கொலுவுல வெச்ச சாமி சிலைகளை வைக்கிறதுதானே முறை?நான்: அக்கா நீ ஒரு பூமர் ஆன்ட்டி! அந்த சென்டிமென்ட்டுக்கெல்லாம் எப்பவோ எக் ஷாம்பூ போட்டு தலை முழுகியாச்சு!அக்கா: அப்ப வீட்டுல இருக்குற பொண்ணுங்களுக்கு என்னதான் வேலை?நான்: ‘ஜானகி... ஒரு கிராதகி’, ‘க்க்கூஜா’, ‘சித்த்த்ர லேக்கா’ போன்ற டீ.வி. சீரியல்களை மிஸ் பண்ணாம என்ஜாய் பண்றதுதான்!அக்கா: எவ்வளவு ஜாலி லைஃப்! நாம்ப தெரியாம அந்தக் காலத்துல பொறந்துட்டோம்!(வாழ்க்கை ஒரு வட்டம்! எங்கப் பேச்சும் அங்கதான் வழக்கப்படி நிற்கும்?)நான்: சரி, வச்சுடறேன் அக்கா... நவராத்திரி வாழ்த்து!அக்கா: ஸேம் டு யூ! ரொம்ப சிரமப்படாதே! பதினொரு படி வை போதும்”(இவ எனக்கு இன்னொரு மாமியார்!)