நீங்களும் சிங்க நடைபோட்டு சிகரத்தில் ஏறணுமா? அதுக்குத் தோதா ஒரு கதை சொல்றேன் நட்புகளே!அது ஒரு பொன்காலைப் பொழுது! (ஹே... ஹும். ஹுல்.ல...லல்லா!)ஒரு சிங்கம் தன் குகைக்கு வெளியே மடக்கு நாற்காலிய போட்டுக்கிட்டு, ஜாலியா உட்கார்ந்திருந்தது. அந்த வழியே போன ஒரு ஓநாய், “டைம் ப்ளீஸ்!”னு கேட்டது.“ஏன் உன் வாட்ச் என்ன ஆச்சு?”“அது ஓடலை... ரிப்பேர் செய்ய டவுன் போயிட்டு இருக்கேன்!”“டவுனுக்குப் போவானேன்? என்கிட்ட குடு. நான் சரி செஞ்சு தர்றேன்!”ஓநாய் நமுட்டுச் சிரிப்பு சிரித்தது!“வாட்ச் ரொம்ப நுட்பமானக் கருவி... சின்னச் சின்ன பாகங்களைக் கொண்டது. உன்னோட பெரியப் பெரிய நகத்தால, வாட்சைப் பிரிக்கக்கூட முடியாது.”“முடியுமா... முடியாதான்னு நான் வாட்சை சரி செஞ்சபிறகு சொல்லு!”ன்னு வாட்சை வாங்கிக்கிட்டு சிங்கம் குகைக்குள்ளே போச்சு!அரை மணி நேரத்துல வாட்சை ஓநாயிடம் கொடுத்தது. “அட... பர்ஃபெக்டா ஓடுதே!” ஓநாய்க்கு ஆச்சர்யம். ரிப்பேருக்கானக் கட்டணத்தைக் கொடுத்துட்டு ஹாப்பியா “தேங்க்ஸ்”னு சொல்லிட்டுப் போச்சு! கொஞ்ச நேரத்துக்கெல்லாம் ஒரு கரடி வந்தது.“இன்னைக்கு டீ.வியில நல்ல சினிமா இருக்கு. நான் உன் கூட வந்து பார்க்கட்டுமா?”ன்னு நட்பா கேட்டது.“ஏன்... உங்க வீட்டு டீ.வி. என்னாச்சு?”“ ஒரு வாரமா ரிப்பேர்”. மெக்கானிக்கு ஃபோன் செஞ்சா, இதோ வர்றேன்... அதோ வர்றேன்ங்கிறான். வரக் காணோம்!”“டீ.வி.தானே? கொண்டு வா! நான் சரி பண்ணித் தர்றேன்!”“அதெல்லாம் கஷ்டமான வேலைப்பா! நீ ஒரு ஜாலியான ஆள்! சும்மா சேர் போட்டுக்கிட்டு, காலை ஆட்டிக்கிட்டு இருக்குற ஆசாமி!”“எதுக்குத் தேவையில்லாம பேசிக்கிட்டு? நீ மொதல்ல டீ.விய கொண்டு வா!” சிங்கம் அதட்டலாகச் சொல்லவே, கரடியும் டீ.வி.யைத் தூக்கிக் கொண்டுபோய் கொடுத்தது.“ஒரு மணி நேரம் கழிச்சு வா!” என்றது சிங்கம். சிறிது நேரம் கழிச்சு, “டீ.வி.யைச் சரி செஞ்சாச்சு!” என்றது.கரடியால் நம்பவே முடியலை. அங்கிருந்த பிளக்கில் போட்டு செக் பண்ணிப் பார்த்தால், ‘ஜம்’ என்று படம் ஓடுது.“ரொம்ப நன்றிப்பா!”ன்னு சொன்னதோடு, கேட்ட பணத்தைக் கொடுத்துட்டுப் போச்சு கரடி! மாலை ஐந்து! (மயக்கும் மாலைப் பொழுதே நீ போ... போ...!) சிங்கம் தன்னோட மடக்கு நாற்காலியைத் தூக்கி வெச்சுட்டு குகைக்குள்ள போச்சு!அங்கே கால் டஜன் முயல்களும், கால் டஜன் அணில்களும் சுறுசுறுப்பாக வேலை செஞ்சுக்கிட்டு இருந்தன. நாலா பக்கமும் மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், செல்ஃபோன்னு ஏகப்பட்ட கருவிகள் கிடக்க... தரையெங்கும் டூல்ஸ் சிதறிக் கிடந்தன.“ஊம்...ஊம்... எல்லாரும் வீட்டுக்குப் போகலாம்... நாளைக்குக் காலையில் டயத்துக்கு வந்துடுங்க... நிறைய ஆர்டர்கள் பாக்கி இருக்கு!”ன்னு சிங்கம் தோரணையா சொல்ல, “ஒ.கே. சார்”னு சல்யூட் அடிச்சுட்டு முயல்களும் அணில்களும் புறப்பட்டன..‘நிர்வாகத் திறமை என்றால் என்ன? என்ற ஒரு புத்தகத்தில் மேற்கண்ட ஒரு குட்டிக்கதையைப் படிச்சேன் வாசகீஸ்...ஒரு தொழில் அதிபரோ, அரசியல்வாதியோ, சினிமா இயக்குநரோ, பெயரும் புகழுமாக இருப்பது ஏன் என்று தெரியணுமா? அவருக்குக் கீழே வேலை பார்க்கும் பணியாட்களைக் கவனியுங்க... அவங்க சின்சியரா வேலை செஞ்சா, நிர்வாகம் நல்லபடி நடக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார் அந்தக் கட்டுரையாளர்!இந்த விஷயம், நம்ப குடும்பத்துக்கு ஒர்க்-அவுட் ஆகக் கூடியதுதான்!ஒரு கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ, வெற்றியாளராத் திகழறாங்கன்னா, அவங்க வீட்டுல இருக்குற மத்தவங்க... அவங்களுக்குச் சாதகமான சூழ்நிலைய உருவாக்கி, தேவையான பல உதவிகளை ஈடுபாட்டோட செஞ்சு, அவங்களோட முன்னேற்றதுக்கு உதவுறாங்கன்னு அர்த்தம்!அப்படி ஒரு கணவனா, மனைவியா அல்லது பெற்றோரா, பிள்ளைகளாய் நாமும் இருக்கோமான்னு ‘செக்’ பண்ணிக்கலாமா?என்ன ok தானே?