ஒரு வார்த்தை

ஒரு வார்த்தை
Published on

“அனுஷா, ஒருநாள் எங்க வீட்டுல டிபன் சாப்பிட வாயேன்!” என்று அழைத்திருந்தாள் என்னுடைய த.ந.தோழி ‘ஞானம்’ என்கிற ஞானாம்பாள்! விர்க்க முடியாத ல்ல தோழி, லை ரைச்ச தோழி! சும்மா ஒரு மார்னிங், ‘சர்ப்ரைஸ்’ விஸிட் அடிச்ச போது, ‘சன்ரைஸ்’ விளம்பரம் டீ.வி.யில ஓடிக்கிட்டிருந்தது.

என்னடா இது? நமக்குப் பசிக்கும்போது, அதை இன்னும் கிளப்புற மாதிரி, முதல் மந்திரி பேசும்போது, மேஜை தட்டும் எம்.எல்.ஏ.க்கள் மாதிரி, டீ.வி.யில சாப்பாட்டு விளம்பரமா வருதேன்னு யோசிக்கிறேன்.

“வெண்டைக்காய ஒடைச்சு வாங்கணும்.  
முருங்கைக்காயை முறிச்சு வாங்கணும்.
தேங்காயைத் தட்டிப் பார்த்து வாங்கணும்”னு ‘சோ’ தலையுடன் கேட்டரிங்காரர் ரேஞ்சில் நகைக் கடைக்காரர் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்.

நானும் ஞானமும் பரஸ்பரம் ஷுகர் லெவல் எவ்வளவு என்று விசாரித்துக்கொண்ட, இனிய வேளையில்... “அத்தே... எனக்குப் பசிக்குது... தட்டு எடுத்து வையுங்க!” என்று மாடிப்படி இறங்கி வந்தாள் ஞானத்தின் மருமகள் பவித்ரா!

“இனி டீ.வி. பார்க்க முடியாது” என்பதை ஈ.எஸ்.பி என்னும் எக்ஸ்டரா சென்ஸரி பர்செப்ஷன் மூலம் உணர்ந்து டைனிங்டேபிளுக்கு விரைந்தாள் ஞானம்!

“நாம்ப அப்புறம் சாப்பிடலாம்!” என்று கண்ஜாடை வேறு!

‘சுத்தம் சோறு போடும்’ என்ற பழமொழியின் செயல் வீராங்கனையாகத் தெரிந்த பவித்ரா, கொரோனா டயத்தில் வாங்கிய இரண்டடி சானிடைஸர் பாட்டிலில் கைகளைச் சுத்தம் செய்துகொண்டு சாப்பிட அமர்ந்தாள்.

“வாங்க... ஆன்ட்டி... சாப்பிடலாம்” என்று பவித்ரா அழைத்ததும், ஞானம், குமாரி கமலா போல அபிநயம் பிடித்து ரகசியமாக “நோ” என்றாள்.

பவித்ரா உதயம் தியேட்டர் ஓரமாக அமர்ந்திருக்கும் கிளி ஜோசியக்காரியின் பச்சைக் கிளி போல, ஒவ்வொரு கிண்ணமாகத் திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள்.

இட்லி, முருங்கை சாம்பார், மினி தோசை, தேங்காய் சட்னி, ரவாகேசரி... எல்லாமே இருக்க, நல்லெண்ணெயில் முங்கிக் குளித்த எள்ளுப்பொடி தனியாக அதற்குண்டான ரிஸர்வ்ட் தொகுதியில் இருந்தது.

“நெய்? உருக்கலையே அத்தே! மறந்தாச்சு!”

ஞானம் மெளனமாகத் தலையை ஆட்டினாள்.

“வயசானா இதான் பிராப்ளம்!” தனக்குத்தானே முனகிவிட்டு, பரவலாக ஊற்றப்பட்ட சாம்பாரில் இட்லியைத் தோய்த்து, ‘மேக்’ ஃபவுன்டேஷனில் பிரஷ்ஷைப் புரட்டுவது போல மெள்ள புரட்டி, வாய்க்குள் அனுப்பினாள் பவித்ரா.

“சாம்பார் அவுட்! பருப்பே வேகலை! பிக்பாஸ் சீஸன் – 6 புது என்ட்ரீஸ் மாதிரி அப்படியே முழிச்சுகிட்டு நிக்குது!”

ஞானம் பரிதாபமாக நின்றாள்.

“தோசை பரவாயில்லை! மெத்துன்னு இருக்கு. ஆனா, ஜோதிகா வந்து ஊத்துவாங்களே நல்லெண்ணெய்... அதுமாதிரி ஒரு கரண்டி ஊத்தியிருக்கு!”

“சட்னியில இஞ்சி அரையவே இல்ல! அவ்வளவு அவசரம்! சமையல்ங்கிறது ஒரு தியானம், தவம் மாதிரி! பொறுமை வேணும்!”

“ரவா கேசரி வைக்கட்டுமா?”

“அப்பாடா! பொழைச்சது போ! இது கொஞ்சம் தேவலை!”

ஞானம் சிரித்துக்கொண்டே பரிமாற, எனக்கோ உள்ளுக்குள் எரிச்சல் மேக்ஸ்!

“எதுக்கு அத்தை சிரிக்கிறீங்க?”

“இல்ல பவித்ரா... உன்னை நினைச்சா எனக்குப் பாவமாவும் இருக்கு; பெருமையாவும் இருக்கு!

“எவ்வளவு வருஷமா நீங்களே சமைப்பீங்க... ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளாவது நான் செய்றேன்”னு சொல்லிட்டு, நீ சமைச்சதை, நீயே ப்ளு சட்டை மாறன் மாதிரி விமர்சனம் செய்யறியே... அதை நினைச்சேன். சிரிச்சேன்!”

என்னது? ‘நானே வருவேன்’ ரீதியில தானே சமைச்சது பவித்ராவா? சமையலும் அவளே! விமர்சனமும் அவளே!

பாசக்கார மாமியரா் Vs  எல் போர்ட் பவித்ரா இரண்டு பேரும் இதுவரையில் ஆக்ட் குடுத்தாங்களா?

அதுக்கு நான்தான் சிக்கினேனா...?

பை தி வே, கண்மணிஸ்... இப்படியே எல்லா குடும்பங்களும் இருந்தா நல்லாதான் இருக்கும்! எனக்கும் ஓ.சி.டிபனோட (ஸாரி... ஓ.சி... என்ற வார்த்தை ஒரு ஃப்ளோவுல வந்துவிட்டது. அமைச்சர் பொன்முடி அவர்களே!) வாரா வாரம் கன்டென்ட்டும் இலவசமா கிடைக்குமே!

சரி, மதுரைக்கு எய்ம்ஸ் வருமா? வராதா?

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com