‘ரிஷப ராசி நேயர்களே’னு நூடுல்ஸ் ஹேர் ஸ்டைல் ஜோசியர் டீ.வி.யில் தோன்றிய அதேவேளை... அதிகாலை... சுபவேளை... மேல்வீட்டு நந்தீஸ்வரனே அரக்கப் பரக்க ஓடிவந்து நின்றார்.“அனுஷா மேடம்... நந்தினி... நந்தினிக்கு... என்னவோ ஆயிடுச்சு! ப்ளீஸ் கொஞ்சம் வாங்களேன்!” மூச்சு வாங்கியது.இது P.S.1 நந்தினி அல்ல; S.1 நந்தினி! செகன்ட் ஃப்ளோர் நந்தினி!நானும் என்னாச்சோ, ஏதாச்சோ என்று அவர் பின்னாலேயே ‘வந்தே பாரத்’ ரயிலைவிட வேகமாக ஓடினேன்!‘மதுரை வீரன் அழகுல’ பாட்டுல, அதிதி ஷங்கர், கார்த்தியோட பைக்குல மல்லாந்து படுத்துக்கிட்டே வருவாங்க இல்ல? அதே தினசுல, நந்தினியும் சொஃபாவுல ‘வானத்தைப் பார்த்தேன். பூமியைப் பார்த்தேன்’ போஸ்ல படுத்திருந்தாள்! பேச்சும் நஹி! மூச்சும் நஹி! (அவ்வளவுதான் ஹிந்தி தெரியும்... போடா!)“என்னாச்சு?”“தெரியலையே மேடம்! யார் கூடவோ ஃபோன்ல பேசிக்கிட்டு இருந்தா... திடீர்னு இப்படி ஆயிட்டா?” நான் சுற்றும் முற்றும் நோட்டம் விட்டேன்... அரிசி மாவு, கடலை மாவு, வெல்லம், வேர்க்கடலை, தேங்காய், எண்ணெய், சர்க்கரைனு இறைஞ்சு கிடந்தது. உக்ரைன் – ரஷ்யா போரின் மிச்சம் மீதி இங்கேதான் நடந்ததோங்கிற மாதிரி சமையலறை கன்டிஷன் படு களேபரம்!துணி ஒருபுறம் பக்கெட்டில் ஊறிக் கொண்டிருக்க, பாத்திரக் குவியலில் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சசன்கள்... (அதாங்க... கரப்பான் பூச்சி!) “என்னதான் ஆச்சு நம்ப ஊருக்கு?” ன்னு ஒரு கரகர குரல் சிகரெட் விளம்பரத்துல வருமே... அது மாதிரி நானும் கேட்டேன்.“யூ-ட்யூப்லே கமல், சீமான், அண்ணாமலை, உதய்நிதி, திருமா, வெற்றிமாறன்னு யாருடைய ஸ்பீச்சாவது கேட்டாங்களா ஸார்?”“அதெல்லாம் பார்க்க மாட்டாங்களே!”“‘நீயா – நானா’, ‘தமிழா – தமிழா’”“தெரியலையே மேடம்!”“நந்தினி... நந்தினி” னு நான் குரல் கொடுத்தபடியே பூக்காரி, ஜாதிமல்லி மீது தெளிப்பதுபோல லேசாகத் தண்ணீர் தெளித்தேன்!சிவன் கோயில் சண்டிகேஸ்வரருக்குப் போடுவது போல ‘ட்ரிக்... ட்ரிக்’ என்று அவளது முகத்துக்கு எதிரே சொடுக்குப் போட்டதும், மெள்ள கண் விழித்தாள் நந்தினி!“என்னாச்சும்மா? பி.பி.ஹை ஆயிடுச்சா?” “ராத்திரி நல்லா தூங்கலையாம்மா?” பூர்ணம் விஸ்வநாதனுக்கு டப்பிங் பேசுவதுபோல உணர்ச்சிக் குவியலாகத்தான் நந்திஸ்வரன் கேட்டார்...!“ஆமா! தூங்கிறதைத் தவிர எனக்கு வேற வேலையே கிடையாது பாருங்க! சரி, அப்படியே நான் ஹாய்யா படுத்துட்டாலும், இங்கே எனக்குப் பதிலா யார் வீட்டு வேலை எல்லாம் செய்யறது? நல்லா கேட்டாரு... தூங்கலையான்னு!”“நந்தினி, ஆர் யூ ஆல்ரைட்?” – இது நான்!“என்ன மேடம் ஆல் ரைட்? எல்லாமே தப்பா நடக்கும்போது!” என் தோளில் சாய்ந்து விசும்பினாள்.“அம்மா... தாயே, காலங்காத்தாலே ஆரம்பிச்சுடாதே!”“ஆமா! எல்லா பழியும் என் மேலதான்! நான் ராட்சசி! மண்டோதரி, கண்டோதரி, பத்ரகாளி! இவங்க அம்மா, அக்கா, தங்கை மட்டும் பரதேவதைகள்! தெய்விப் பிறவிகள்!”“இப்ப எதுக்கு அவங்கள இழுக்கற?”“ஏன்... பாசம் அப்படியே கொட்டுதோ? அவங்கள சொன்னா பொறுக்காதே! எனக்கு என்ன கேடு வந்தா என்ன? என்ன பெண் ஜென்மமோ...? அப்படி ஒரு ட்ரை வாஷ் பண்ணியிருக்காங்க!”“அது ட்ரை வாஷ் இல்லம்மா... ப்ரெயின் வாஷ்!”“ஏதோ ஒரு வாஷ்!”அப்போது வாசல் மணி அடிக்கவும், பாய்ந்தோடினார் நந்திஸ்வரன்!.வாசலில் வீட்டு வேலைக்கு உதவும் மகேஸ்வரி, கூடவே ஒரு மாமி! அப்பாடி!நந்தினியின் முகத்தில் புஸ்வானச் சிரிப்பு!மத்தாப்பின் பூரிப்பு!“எங்க வேலைக்கு மட்டம் போட்டுட்டியோன்னு நினைச்சேன்!” நிம்மதிப் பரவச் சொன்னாள் நந்தினி!“மாமி, உங்களுக்கு ஃபோன் போட்டேன்... ஸ்விச் ஆஃப்னே வந்தது! செம டென்ஷன் ஆயிட்டேன் போங்கோ!”“ஃபோனில சார்ஜ் இறங்கிடுச்சு!” பட்சணம் மாமி ஏதோ சமாதானம் சொன்னாள்.“தீபாவளிக்கு முறுக்கு, அதிரசம், மைசூர் பாகு எல்லாம் ரொம்ப நல்லா பண்ணுவா மாமி!”கண்கள், பொரித்த இலை வடாம் போல விரிய, நந்தினி உற்சாகமாக எழுந்து சமையலறைக்குள் போனாள்!இந்த S1 நந்தினி – நந்திஸ்வரன் எபிஸோடுக்கெல்லாம் ஏதாவது நீதிக் கருத்து சொல்வேன்னு எதிர்பார்க்க மாட்டீங்கன்னு தெரியும் கண்மணீஸ்.2 இருந்தாலும் கடேசியா ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன்!“தீபாவளி நல்வாழ்த்து!’