அன்பார்ந்த கல்கி குழும வாசகர்களே !உங்களுடன் பகிர்ந்து கொள்ள இதோ… அடுத்தடுத்து இரண்டு தித்திக்கும் தகவல்கள்…• 2022 வருட ‘கல்கி தீபாவளி மலர் ’மின்’ மலராக வெளியிடப்பட்டுள்ளது என்பதை பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கிறோம்.80 வருட கல்கி தீபாவளி மலர் களஞ்சியத்திலிருந்து கதைகள், கவிதைகள், கட்டுரைகள், பயண அனுபவங்கள், ஆன்மிகத் தகவல்கள், சினிமா என்று… வாசமிகு கதம்ப மலர் மாலையாக மிளிரும் இந்த டிஜிட்டல் தீபாவளி மலர் 2022, கல்கி குழுமத்தின் முதல் டிஜிட்டல் மலர் மட்டுமன்று ; தமிழ் பத்திரிகையுலகின் முதல் டிஜிட்டல் மலரும் கூட என்பது கூடுதல் பெருமை. இந்த மின் மலர் .Pustaka.மற்றும்.Amazon.தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா வலைதள முகவரி மட்டும் கொடுத்துள்ளோம். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அவரவர்களின் அமேசான் இணைய தளத்திற்குச் சென்று (உ.தா. amazon.com, amazon.co.uk, amazon.co.jp etc.,) kalki digital Deepavali malar என்று தேடி தரவிறக்கிக்கொள்ளலாம். விலை மிக மிகக் குறைவு ; அறியும் செய்திகளின் மதிப்போ மிக மிக உயர்வுகல்கி குழுமத்தின் பொக்கிஷப் பெட்டகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இம்மலரைப் படித்து மகிழுங்கள் !******• நமது kalkionline.com இணையதளத்தில் நவம்பர் 1, 2022 முதல் தினசரி பதிவேற்றங்களின் எண்ணிக்கைக் கூடும்.இதுவரை கல்கி மற்றும் மங்கையர் மலர் வார இதழ்களாகவும், தீபம் மாத இதழாகவும், நமது www.kalkionline.com இணையதளத்தில் வெளியிடப்பட்டன. வரும் நவம்பர் 1, 2022 முதல் நமது இதழ்களில் பிரசுரிக்கக்கூடிய படைப்புகள் தினசரி பதிவேற்றங்களாக அமையும். அதிதுரித காலத்தின் கட்டாயத்திற்கு ஏற்ப நாமும் தினம், தினம், மணிக்கு மணி சிறப்புச் செய்திகளையும், கட்டுரைகளையும், விசேஷ நிகழ்வுகளையும் வெளியிட வேண்டியது அவசியமாகிறது.எனவே, குறிப்பிட்ட தேதியில்/ நாளில் வெளிவரக்கூடிய நிலை (‘Periodical’) இனி இருக்காது. ஒவ்வொரு படைப்பும் அதற்கான வகைப்படுத்தப்பட்ட பிரிவில் பதிவேற்றப் பட்டு, கல்கி, மங்கையர் மலர், தீபம் இதழ்களின் அடிப்படையில் Tag செய்யப்படும். கல்கி குழும வாசகர்கள் இனி கல்கி, மங்கையர் மலர், தீபம் இதழ்களுக்கான பதிவுகளை தினம் தினம் படித்து மகிழலாம்.வாசகர்கள் தங்கள் படைப்புகளை ‘மென்பேனா’ வழியாக பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு செய்யும்போது, படைப்புகளை ஒரே இடத்தில் இருந்து எடுத்து கையாள்வது எங்களுக்கு எளிதாக இருக்கும்..மென்பேனா.அன்பு வாசகர்களே! தங்களுடைய ஊக்கத்தையும் பேராதரவையும் கல்கி குழுமத்துக்கு இன்று போல் என்றும் வழங்கவும்.- லக்ஷ்மி நடராஜன்ஆசிரியர் கல்கி குழுமம்.