‘பாட்டி வைத்தியம்’ என்று என் பாட்டி எனக்கு சொல்லிக் கொடுத்த ‘இஞ்சி எலுமிச்சை சாறு’ ரெசிபி இதோ:
இஞ்சி எலுமிச்சைச்சாறு;
தேவையான பொருட்கள்: இஞ்சி - ஒரு துண்டு , எலுமிச்சம் பழம் – ஒன்று, நாட்டு சக்கரை - நான்கு டீஸ்பூன்
செய்முறை: இஞ்சியின் தோலை சீவி, சிறு சிறு துண்டங்களாக்கி மிக்ஸியில் அரைத்து அதனுடைய சாறினை எடுத்து, அதை இளம் சூடாக்கி அதில் நாட்டு சக்கரை போட்டு கலக்கவும். பிறகு அதில் எலுமிச்சம் பழத்தை சாறு எடுத்து கலந்து இளம் சூடாகக் குடித்தால் அஜீரணம், பித்த வாந்தி போன்றவை எல்லாம் நின்று நமக்கு பசியினைத் தூண்டும்.