தினம் ஒரு பாயசம்! பரங்கிக்காய் பாயசம் - 6

தினம் ஒரு பாயசம்! பரங்கிக்காய் பாயசம் - 6
nalam tharum Navarathiri
nalam tharum Navarathiri

தேவையான பொருட்கள்:

பரங்கிக்காய் – ½  கிலோ, நெய் - 3 டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் – ¼  கப், பாதாம் பருப்பு - 6, முந்திரிப் பருப்பு – 6 கசகசா - 1 ஸ்பூன்,  மில்க் மெய்ட் - 4 டேபிள் ஸ்பூன், ஏலப்பொடி 1 ஸ்பூன், திராட்சை - 2 டேபிள் ஸ்பூன், பால் - 3 கப், சர்க்கரை – ¼ கிலோ.

செய்முறை:

பரங்கிக்காயைத் தோல், விதை நீக்கி எடுத்துக் கொள்ளவும். பாதாம் பருப்பைச் சிறிது நேரம் வெந்நீரில் ஊறவைத்து) எடுத்து தோல் நீக்கி கசகசா, முந்திரி சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.) அடிகனமான கடாயில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு, காய்ந்ததும் துருவிய பரங்கிக்காயைச்  சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். பிறகு அதில் பால் சேர்த்து வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் சர்க்கரை, அரைத்த விழுது, ஏலப்பொடி சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பிறகு மில்க்மெய்டு சேர்த்து 2 நிமிடம் கொதித்ததும் இறக்கி வைத்து, மீதமுள்ள நெய்யில் திராட்சையை வதக்கி பாயசத்தில் சேர்த்துப் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com