பேராசிரியை சிலுகூரி சாந்தம்மாசிலர் இளம் வயதிலேயே வயதானவர் போல் சோர்ந்துபோய் வாழ்வில் ஊக்கமற்று இருப்பதைப் பார்க்கிறோம். முப்பது வயதிலேயே ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய் போன்றவை வருகின்ற நாட்கள் இவை. ஐம்பத்தைந்து வயதைத் தாண்டி விட்டாலே, சுவிட்ச் அணைக்கப்பட்ட மின்விசிறி மேலும் சற்று நேரம் சுழலுவது போன்றது மீதியுள்ள தம் வாழ்நாள் என்று எண்ணி போனஸ் ஆயுளை நினைத்து மகிழும் காலமாக இது உள்ளது. ஆனால், புரொபசர் சாந்தம்மா இவை அனைத்திலிருந்தும் முற்றிலும் வேறுபட்டவர். தொண்ணுற்றைந்து வயதிலும் இந்த பேராசிரியர் இடைவிடாமல் பாடம் சொல்லித் தருகிறார். கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெறப் போகிறார். யார் அவர்? அப்படி என்ன சாதித்தார்? பார்க்கலாம் வாருங்கள்.இவர் பெயர் சிலுகூரி சாந்தம்மா. முதிய வயதில் முழங்கால் வலி வருவது இயல்பு. இவருக்கும் இரு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை நடந்தது. ஆனாலும் இவர் சோர்ந்துவிடாமல் இரண்டு கைகளில் இரண்டு கைத்தடிகள் பிடித்து நடந்து வருகிறார். எங்கே செல்கிறார் என்று யோசிக்கிறீர்களா? ஏதாவது மருத்துவமனைக்கு செல்கிறார் போலும் என்று நினைக்கிறீர்களா? தவறு. இந்த வயதிலும் சாந்தம்மா தினமும் செல்வது வகுப்பறைக்கு. இது விஜய நகரத்தில் இருக்கும் சென்சூரியன் யூனிவர்சிட்டி. இங்கு சாந்தம்மா பேராசிரியராக பணிபுரிகிறார். மெடிகல் பிசிக்ஸ், ரேடியோலஜி, அனெஸ்தீஷியா போன்ற பாடங்களை கற்றுத் தருகிறார். “பகிர்ந்து கொண்டால்தான் அறிவு வளரும் என்று அழுத்தமாகக் கூறுகிறார் சாந்தம்மா..தான் படித்த ஆந்திரா பல்கலைக்கழகத்திலேயே இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரிந்து 1989ல் ஓய்வு பெற்ற சாந்தம்மா கற்பிக்கும் பணியிலிருந்து இன்னும் ஓய்வு பெறவில்லை. அப்போதைய ஆந்திரா வார்சிட்டி வைஸ் சான்சிலர், சாந்தம்மாவை கௌரவ பேராசிரியராகத் தொடரும்படி கேட்டுக்கொண்டார். அவருக்கு பின் பொறுப்பேற்ற ஜி எஸ் என் ராஜு கூட சாந்தம்மாவைப் பேராசிரியர் பணியில் தொடரும்படி வேண்டினார். இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் ராஜு சாந்தம்மாவின் முன்னாள் மாணவர்.தற்போது சாந்தம்மா வாரத்தில் நான்கு நாட்கள் வகுப்பெடுக்கிறார். தினமும் விசாகப்பட்டினத்திலிருந்து 60 கிலோமீட்டர் பஸ்ஸில் பயணம் செய்து விஜயநகரம் யுனிவர்சிட்டிக்கு சென்றுவருகிறார். போதனையும் பரிசோதனையும் மட்டுமே அல்ல. சாந்தம்மாவுக்கு ஆன்மீக ஈடுபாடும் அதிகம். அந்த ஆர்வத்தோடு பகவத்கீதையை ஆழ்ந்து படித்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். வேத கணிதத்தில் 29 சூத்திரங்களின் மீது ஆய்வு செய்து ஐந்து வால்யூம்கள் வெளியிட்டுள்ளார். கேன்சர் நோயாளிகள் நலமாவதற்கு தற்சமயம் இவர் பரிசோதனை செய்து வருகிறார்.ரிடையர் ஆகி 34 ஆண்டுகளுக்கு பின்னரும் சாந்தம்மா கல்வி கற்பிக்கிறார். ஆய்வு செய்கிறார். வியந்து போய் யாராவது, “95 வயதில் உங்களுக்கு எதற்கு இத்தனை சிரமம்?” என்று கேட்டால் அவருடைய பதில் ஆணித்தரமாக வருகிறது. “ஒவ்வொருவரும் நேரத்தையும் சக்தியையும், டைம் அண்ட் எனர்ஜி இரண்டின் மதிப்பையும் உணர்ந்து, அவற்றை வீணடிக்காமல் நடந்துகொள்ள வேண்டும். அப்போதைக்கப்போது சுயபரிசோதனை செய்துகொண்டு செல்ஃப் இன்ட்ராஸ்பெக்ஷனில் இறங்கவேண்டும்” என்று பதில் அளிக்கிறார். “இன்னும் எத்தனையோ சாதிக்க வேண்டும். தேச சேவைக்கு என் பங்களிப்பு இருக்கவேண்டும். இறுதி வரை உழைப்பேன்” என்கிறார் லீவு நாட்களிலும் கல்லூரிக்கு வரும் இந்த பேராசிரியர். இவர் இன்றுவரை முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. பாடங்களோடுகூட தன வாழ்க்கை அனுபவங்களையும் மாணவர்களிடம் பகிர்ந்துகொண்டு சுவைபட பாடம் எடுப்பது இவருடைய வழிமுறை. உலகிலேயே மிக அதிக வயதுள்ள புரொபசராக கின்னஸ் புக்கில் இடம்பெறப் போகிறார் சாந்தம்மா..அவருடைய சொற்களிலேயே அவரைப் பற்றி கேட்போம். “என் பிறந்த ஊர் கிருஷ்ணா மாவட்டம் மச்சிலிப்பட்டினம். 1929 மார்ச் எட்டாம் தேதி பிறந்தேன். என் தந்தையார் சீதாராமய்யா நீதித்துறையில் பணிபுரிந்தார். நான் ஐந்து மாத குழந்தையாக இருந்தபோதே அவர் தவறி விட்டார். என் தாயார் வனஜாட்சம்மா 104 ஆண்டுகள் வாழ்ந்தார். ராஜமகேந்திரவரம், மதனப்பள்ளி ஆகிய இடங்களில் என் பள்ளிக் கல்வி நடந்தது. விசாகப்பட்டினம் மதராசு மாநிலத்தில் இருந்தபோது ஏவிஎன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்து, மகாராஜா விக்ரம்தேவ் வர்மாவிடமிருந்து பௌதீகத்தில் தங்கப் பதக்கம் பெற்றேன். பிசிக்ஸ் என்றால் அத்தனை பிரியம் எனக்கு. அதிலேயே பிஎஸ்சி ஆனர்ஸ் படித்தேன். ஆந்திரா யூனிவர்சிட்டியில் இருந்து மைக்ரோவேவ் ஸ்பெக்ட்ரோஸ்கோபியில் பிஹெச்டிக்குச் சமமான டிஎஸ்சி படித்து. அதன் பின் 1956இல் ஆந்திரா யுனிவர்சிட்டியில் இருக்கும் காலேஜ் ஆப் சயின்ஸில் பிசிக்ஸ் லெக்சரராகச் சேர்ந்தேன். லெக்சரரிலிருந்து ப்ரொபசர், இன்வெஸ்டிகேட்டர், ரீடர் வரை பல பொறுப்புகளை வகித்தேன். அவை அனைத்தையும் செய்தபின் எனக்குத் தெரியாமலேயே எனக்கு 60 வயது முடிந்துவிட்டது. 1989ல் வேறுவழியில்லாமல் ஓய்வு பெற்றேன். இருப்பினும், மாணவர்களுக்கு இன்னும் பாடம் சொல்லித் தர வேண்டும் என்று ஆர்வம் என்னிடம் குறையவில்லை. மீண்டும் ஆந்திரா யுனிவர்சிட்டியில் கௌரவ ஆசிரியராகச் சேர்ந்தேன். அங்கு ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தேன். பல்வேறு மத்திய அரசின் பிரிவுகளில் பரிசோதனை இன்சார்ஜாகப் பணியிலி ருந்தேன். யுஎஸ், பிரிட்டன், கனடா, ஸ்பெயின் போன்ற பல நாடுகளில் நடந்த கல்வி அரங்குகளில் பங்கு கொண்டேன். அட்டாமிக் ஸ்பெக்ட்ரோஸ், மாலிக்குலர் ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் ஆகியவை மீது நான் செய்த ஆய்வு 2016 ல் வெட்டரன் சயின்டிஸ்ட் கிளாஸில் பல விருதுகளோடுகூட தங்கப் பதக்கத்தையும் எனக்கு பெற்றுத் தந்தன. பன்னிரண்டு மாணவர்கள் என் மேற்பார்வையில் பிஹெச்டி பூர்த்தி செய்துள்ளார்கள்.என் கணவர் சிலுகூரு சுப்பிரமணிய சாஸ்திரி சில ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்தார். மூன்று ஆண்டுகள் அவர் படுக்கையிலேயே இருந்தார் அதற்கு முன்பு வரை நான் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் அவர்தான் அழைத்துச் செல்வார். அவர் தெலுங்கு புரொபசராக இருந்தார். எனக்கு உபநிஷத்துகள் குறித்து சொல்லித் தருவார். அவர் மூலம்தான் புராணங்கள், வேதங்கள், உபநிஷத்துக்கள் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. பகவத்கீதை ஸ்லோகங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ‘பகவத் கீதா தி டிவைன் டைரக்ஷன்’ என்ற புத்தகத்தை எழுதினேன். முதுமையோடு வரும் பிரச்னைகள் என்னைத் துளியும் பாதிக்கவில்லை. இரண்டு முழங்கால்களிலும் அறுவை சிகிச்சை நடந்து 20 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றேன். இறக்கும் வரை படிப்பு சொல்லித்தர வேண்டும் என்பதே என் சங்கல்பம். காலையில் 4:00 மணிக்கு எழுந்து விடுவேன். விசாகப் பட்டினத்தில் இருந்து கிளம்பி விஜயநகரம் வந்து சேர்வேன். இங்கு செஞ்சூரியன் யுனிவர்சிட்டியில் தினமும் குறைந்தபட்சம் ஆறு வகுப்புகளை எடுப்பேன். எங்களுடையது ஆர் எஸ் எஸ் பின்னணி உள்ள குடும்பம். பணம் சொத்து சுகம் மீது எங்களுக்கு ஆர்வம் கிடையாது. எங்கள் வீட்டைக் கூட விவேகானந்தா மெடிக்கல் டிரஸ்டுக்கு நன்கொடையாக அளிக்கப் போவதாக என் கணவர் சொன்னபோது உடனே சரி என்றேன். இப்போது வாடகை வீட்டில்தான் இருக்கிறேன். என் கணவருக்கு உடல் நிலை சரி இல்லாமல் இருந்தபோது ஒரு சிறுவன் எங்களுக்குத் துணையாக இருந்தான். அவனுக்கு கல்வி கற்பித்து திருமணம் செய்து வைத்தேன். அவனுக்கு இப்போது மூன்று பிள்ளைகள். அவனோடுகூட அவன் மனைவியும் குழந்தைகளும் சேர்ந்து வீட்டில் மொத்தம் ஆறு பேர். அனைவரும் அதே வாடகை வீட்டிலேயே வசிக்கிறோம்” என்கிறார் சாந்தம்மா முதுமை அவருடைய ஊக்கத்தையும் உழைப்பையும் குறைக்கவில்லை என்பது கண்கூடு.