பீரியட்ஸ்: தொட்டால் தீட்டு... பட்டால் பாடு! மூடநம்பிக்கையா?

periods  images
periods imagesImages credit- pixabay.com

-       சுடர்லெட்சுமி மாரியப்பன்

ரவு பதினோரு மணி. சரியாக உறங்க சென்ற வானதிக்கு அடிவயிறு கசக்கி பிழிந்து உன்னை தூங்க விட மாட்டேன் என்றது. என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கையில் சுருண்டு கொண்டிருந்தாள். இரவு முழுவதும் வயிற்று வலியில் இருந்த வானதி விடியும் போது நன்கு உறங்கிக் கொண்டிருக்க, வானதி அம்மா அவளை எழுப்பினார். எவ்வளவு நேரம் தூங்குற... மணி எத்தன ஆச்சு எழுந்திரு வானதி...  அம்மா எனக்கு பீரியட்ஸ் மா. நான் நைட் ஃபுல்லா தூங்கவே  இல்ல மா... அம்மா உடனே கத்த தொடங்கிவிட்டாள்... என்னது பீரியட்ஸ் ஆ... அப்ப ஏன் டி குளிகாம வீட்டுக்குளே வந்த? ஏன் அதை தொட்ட? என கடிந்துக்கொள்ள... அம்மா அதுக்காக மிட்நைட்லயா குளிக்க முடியும்.. என பதிலுக்கு வானதி பேச தாய்க்கும் மகளுக்கும் இடையில் வாக்கு வாதம் தான்...

கோவில் சம்பிரதாயம் என வாழும் வானதியின் குடும்பத்தில் இவள் மட்டும் மூட நம்பிக்கைகளையும், சம்பிரதாயங்களையும் ஏற்காதவள்.. பின் எப்படி வாக்கு வாதம் நடந்திருக்கும் என்று நீங்களே புரிந்துக் கொண்டிருப்பீர்கள்!

ஆனால் வாக்குவாத இறுதியில் வென்றவள் வானதியின் தாய் தான். தாய் கூறியபடி வானதிதான் படுத்த அனைத்து படுக்கை  விரிப்புகளையும் துவைத்து  சுத்தம் செய்து குளித்து விட்டு தான் மீண்டும் வீட்டிற்குள் வந்தாள். ஆனால் அவள் மனதில் அத்தனை கேள்விகள் குமுறிக்கொண்டு எழுந்தன... கண்ணில் அத்தனை கோபம்! இந்த 2024- ல் கூடவா மாதவிடாயை தீட்டாக பார்க்கிறார்கள்?  மாதவிடாய் ஏற்பட்ட உடனே குளித்தால் தான் தீட்டு போகுமா? ஏற்கனவே கோவிலுக்கு செல்ல கூடாது. திருநீர் பூசக் கூடாது என்றெல்லாம் கதைக் கட்டுகின்றனர். இதில் அதை தொடாதே இதை தொடாதே என்று  கட்டுப்பாடு வேறு...

பெண்ணாக பிறந்தாலே பிரச்சனையா? என்ற கேள்வி ஒருமுறையேனும் ஒவ்வொரு பெண் மனதிலும் தோன்றும் ஒன்றுதான். அம்மா,  பாட்டி, சித்தி, அத்தை இவர்களும் பெண்தானே பின் ஏன்?  இவர்களால் ஏற்றுக் கொள்ளும் விஷயங்களை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு வேளை இந்த சமூகமா? இல்ல இந்த காலசார மாற்றமா? நாம் பார்க்கும் ஊடகங்களில் மாதவிடாய் தீட்டு அல்ல, தீட்டு என்பது மூட நம்பிக்கை என்றுதானே கூறுகின்றனர்?  யார் மாற வேண்டும்?  என யோசித்துக் கொண்டிருக்க சற்று நேரத்தில் பெண் அவள் குழம்பிதான் போனாள்.

இதை பற்றி தெரிந்துகொள்ள பல கட்டுரைகளும் விளக்கங்களும் வந்தாலும் இன்றும் இந்த தீட்டு என்ற பிரச்சனை கிராமங்களிலும் சில நகரங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. உண்மையில் மாதவிடாய் என்பது தீட்டு அல்ல. இது குறித்த முன்னோர்களின் மூட நம்பிக்கைகளுக்கு பின் அறிவியல் ரீதியாக அர்த்தம் இருப்பதை நாம் உணர வேண்டும்.

periods  images
periods imagesImages credit- pixabay.com

அதாவது பொதுவாக மாதவிடாய் சமயங்களில் பெண்களுக்கு அதிகமான இரத்த கசிவு ஏற்படுவதால்  உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்வுடன் காணப்படுவார்கள். அதனால் அவர்களுக்கு ஓய்வு தேவை. மேலும் அந்த சமங்களில் அவர்கள் மீது இரத்த வாசனை வரும் என்பதால் அவர்களை எந்த துஷட சக்திகளும், மிருகங்களும், விஷமுள்ள பூச்சிகளும்  அண்டகூடாது என்று தனிமையில் பாதுகாப்பாக இருக்க வைப்பதற்காக வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம், கோவிலுக்கு செல்லக் கூடாது என்றெல்லாம் கூறியுள்ளனர். அதோடு, மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல் அதிக  உஷ்ணமாக இருப்பதால் குறிபிட்ட பொருட்களை தொடும்போது அது கெட்டுபோகக்கூடும். எனவே  சமையலறைக்குள் நுழையக்கூடாது என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
பேச்சு போட்டிகளில் வெற்றி பெறுவது எப்படி?
periods  images

எனவே இந்த தீட்டு என்பது இறைவன் கொடுத்த வரம்.  இது போன்ற விஷயங்களை நாம் மரபு ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பார்க்க வேண்டுமே தவிர பெண்ணை அடிமைபடுத்துதல், ஒதுக்குதல் என்று அவர்கள் மனம் காயப்படும்படி நடந்துகொள்வது உத்தமம் அன்று. அறிவியல் ரீதியாக பார்க்கும் போது நம் முன்னோர்கள் பெண்களை ஒதுக்கி வைக்கவில்லை அவர்களை பாதுகாத்துள்ளனர் என்பதை நாம் புரிந்து நடந்துக்கொள்ள வேண்டும்.

ஆனால் அந்த பாதுகாப்பு உணர்வு பகுத்தறிவற்று போகும்போது, அடிப்படை காரணங்களை விட்டு அநாவசிய கட்டளைகள் பிறப்பிக்கப்படும்போதும் பாதிக்கப்படும் இளம்பெண்கள் கேள்விகள் கேட்பார்கள்தானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com