சென்ற வாரத் தொடர்ச்சி… திருமணச் சிக்கலால் பெரியோர் பாதிப்பு:தற்காலத்தில் திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் பெண் வீட்டார் பிள்ளையின் பெற்றோரையும் தாத்தா பாட்டியையும் ‘லக்கேஜ்’ என்ற சொல்லால் குறிப்பிட்டு, ‘உங்கள் வீட்டில் எத்தனை லக்கேஜ் இருக்கிறது?’என்பதாக ஏளனம் செய்வதைப் பார்க்கிறோம். பெற்றோரோடு சேர்ந்து ஒரே வீட்டில் வசிக்கும் பையனுக்கு பெண் கொடுக்கத் தயங்குகிறார்கள் பெண் வீட்டார். ‘தனி வீடு வாங்கிவிட்டான். திருமணத்திற்குப்பின் தனிக் குடித்தனம் வைப்போம்’என்று பையனின் ஜாதகத்திலேயே எழுதினால்தான் ஜாதகம் பார்க்கவே சம்மதிக்கும் பெண் வீட்டார் மிகுந்து விட்டனர். இதன் விளைவாக பெற்றோரைத் தெய்வமெனப் போற்றும் பல பையன்களுக்கு வயது நாற்பது தாண்டியும் மணமாகாத சூழ்நிலை உருவாகியுள்ளது. பெண்ணின் தாய் தந்தையர் இதுபோன்ற மன நிலையில் இருப்பது வருந்தத்தக்க விஷயம். பெண்களும் நன்கு படித்து, நல்ல வேலையில் அமர்ந்து எதிர்பாராத அளவு ஓகோவென்று சம்பாதிப்பதால், யாரையும் மதிக்காத சூழல் காணப்படுகிறது. இந்த நிலை மாறவேண்டும்.திருமண வயதைத் தாண்டிய பெண்களும் பையனின் சம்பளத்தையே முதல் தகுதியாகக்கொண்டு வரனைத் தேர்ந்தெடுக்க நினைக்கிறார்கள். இத்தகையச் சமுதாய சிக்கலால், வயது முதிர்ந்துக்கொண்டிருக்கும் தன் மகன்களைப் பார்த்து வயதான பெற்றோர் மனம் வெதும்பிப் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண் வீட்டாரின் இத்தகைய மனப்போக்கு கண்டிக்கத்தக்கது. இது ஒரு காலச் சுழற்சி என்று எடுத்துக் கொள்ளலாம். முற்காலத்தில் பிள்ளை வீட்டார் கொடுமைப்படுத்தினார்கள் என்று ஒரு கருத்து நிலவியது. 498ஏ போன்ற சட்டப் பிரிவுகளும் இதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டன. ஆனால், தற்போது அது மாற்றம்கொண்டு பெண் வீட்டார் கொடுமைப்படுத்துகிறார்கள் என்ற கருத்தில் நிற்கிறது சமுதாயம்..வானப்பிரஸ்தாஸ்ரமம்:முற்காலத்தில் வயதானவுடன் பெற்றோர் மகனிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தை கடைபிடிப்பதற்காக வனத்திற்குச் சென்று விடுவர் என்று புராணங்களில் படிக்கிறோம். அதேபோல் அரசர்கள்கூட காதருகில் நரை முடி தென்பட்டதும் மகனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைத்துவிட்டு அரச வேலைகளிலிருந்து ஒதுங்கி ஓய்வெடுத்துக் கொள்வதுண்டு என்று வரலாறுகள் தெரிவிக்கின்றன. அதுபோல் தற்காலத்தில் வானப்பிரஸ்த ஆஸ்ரமத்தின் இடத்தை வயோதிகர் விடுதிகள் பிடித்துள்ளன போலும்.பிள்ளைகள் தம்மை அவமதித்து விட்டார்கள் என்ற கோபம் ஒரு புறம் பிள்ளைகளை விட்டுப் பிரிந்திருக்க இயலாத பாசம் மறுபுறம் இந்தப் பெரியோர்களை அங்கும் நிம்மதியாக இருக்கவிடாமல் வாட்டி வதைக்கிறது. இதயத்தைக் கல்லாக்கிக்கொண்டு புது உலகில் வாழ்க்கையை அமைதியாகக் கழிக்கவேண்டும் என்ற மனப்பாங்கு சிலருக்கு இயற்கையாகவே அமைந்து விடுகிறது. பலருக்கு நிபுணர்களின் ஆலோசனை தேவையாயிருக்கிறது..முதியோரைத் தாக்கும் நோய்கள்:அல்ஜிமர்ஸ், டிமென்ஷியா, கான்சர் போன்ற முதியோரைத் தேடிப் பீடிக்கும் வியாதிகள் பெரியோரை உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாகவும் பாதிக்கின்றன. வயதாக வயதாகச் சிறிது சிறிதாக முதியோரிடம் காணப்படும் மனம் மற்றும் உடல் மாற்றங்களை அவர்கள் ஏற்று வாழப் பழக வேண்டும். மறந்து போதல், உடல் பலவீனம், அறிவாற்றல் மந்தமாதல், அதிகம் ஆலோசிக்க இயலாமை போன்றவற்றை பிரச்சனைகளாகப் பார்க்காமல் இயல்பான பரிணாமங்களாக ஏற்க வேண்டும்.தேஹோ தேவாலய ப்ரோக்தோஜீவோ தைவஸ் சனாதனஹஎன்று வேத ரிஷிகள் உடலை ஆலயமாகவும் உள்ளுரையும் ஜீவனை தெய்வமாகவும் உணர்ந்து போற்றினார்கள். இயற்கை அளித்த வரமான மனித உடலையும் அதன் மூலம் இயற்கை வழங்கியுள்ள சக்தி சாமர்த்தியங்களையும் மனிதன் நல்ல விதமாகப் பயன்படுத்த வேண்டும்.முதியோரை வாட்டும் தனிமை என்பது காலத்தின் கட்டாயம்.. வாழ்க்கைத் துணையையும் இழந்து பெற்ற பிள்ளைகளால் துரத்தப்பட்டு வருந்தும் முதியோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.யமன் அழைக்கும் போது எல்லோரும் உலகை உதறிச் செல்லத்தான் வேண்டும். இதையும் பெரியோர் இயற்கையின் நியதியாக ஏற்று அதற்கேற்ப வாழ்வைச் சந்திக்கத் தயாராக வேண்டும்.அனாயாசேன மரணம், விநா தைன்யேன ஜீவனம்,தேஹாந்த்தேன தவ சாயூஜ்யம், தேஹிமே பார்வதீ பதே!பார்வதியின் பதியே! பரமசிவா! ஆயாசம் இல்லாத மரணம், பரிதாபம் இல்லாத வாழ்க்கை, இறுதியில் உன் சாயூஜ்யம் அளிப்பாயாக! என்ற பிரார்த்தனையை வயதானவர்கள் செய்வதைப் பார்த்திருக்கிறோம்..முதியோர் தாமே உண்டாக்கிக் கொள்ளும் சிக்கல்கள்:முதுமை என்னும் இயலாமை இயல்பாக ஏற்படுத்தும் பிரச்சனைகளுக்குத் துணையாக, தாமே சில பிரச்னைகளை இழுத்து விட்டுக்கொள்வதும் உண்டு.வயது முதிர்ந்த பெற்றோர் கண நேர உத்வேகத்தில் தம் வீடுகளையும் சொத்துகளையும் அவசரப்பட்டு பிள்ளைகள் பெயரில் எழுதி வைத்துவிட்டு அவஸ்தைப்படுவதுண்டு. முதியோர் ‘தமக்குப்பின்’ என்ற சொல்லை உயிலில் சேர்க்கத் தவறக்கூடாது. முதியவளான மனைவி, கணவனை இழந்த பின் வீடின்றி வருந்தக்கூடாது. சொந்த வீடு என்று ஒன்று இருந்து அவ்வப்போது மகன் வீட்டிற்குச் சென்று வரும் மாமியாருக்கு இருக்கும் மரியாதை ஒரு விதமாகவும், சொந்த வீடு என்று ஒன்றுமில்லாமல் மகன் வீட்டிற்குச் சென்று அவர்களோடு சேர்ந்து வாழும்போது கிடைக்கும் மரியாதை வேறுவிதமாகவும் இருப்பதை நடைமுறையில் கண்கூடாகப் பார்க்கிறோம்.வீட்டில் அடைசல்:தனியாக வாழும் முதியோர் தம் வீட்டில் தேவைகளை அளவோடு நிறுத்திக்கொண்டு வீட்டு வேலைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இதர வேலைக்காரர்களைச் சார்ந்திருக்கும் தேவை குறைகிறது. தேவைக்கதிகமாக சாமான்களைச் சேர்க்காமல் பழையனவற்றை யாருக்காவது கொடுக்கவோ அல்லது தூக்கி போடவோ மனமுவந்து கற்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் வாங்கிய கதையும் வரலாறும் இருக்கத்தான் செய்யும். கடைசியில் எல்லாவற்றையும் துறந்து விட்டுத்தானே போகப் போகிறோம் என்ற வைராக்கியம் வர வேண்டும்.மன நிம்மதி:வயதானவர்கள் சிலர் இல்லாததையும் பொல்லாததையும் ஊகித்துக்கொண்டு தம் கஷ்டங்களுக்கு மற்றவர்களைப் பொறுப்பாக்கி அவர்கள் மேல் நிந்தைகளை அடுக்கி தம் வாழ்வையும் பாழாக்கிக் கொண்டு தம் குழந்தைகளின் வாழ்விலும் நிம்மதியில்லாமல் செய்கிறார்கள்.மற்றும் சில முதியோர், சோம்பேறிகளாக, வாழ்வில் எதிலும் பிடிப்பற்று குடும்பத்திற்கு பாரமாக நடந்து கொள்கிறார்கள். தற்கால விபரீத அரசியல் மற்றும் சமுதாயப் பிரச்சனைகளைப் பட்டியலிட்டு தம் சிறு வயதில் அனுகூலமாக இருந்தவற்றோடு ஒப்பிட்டு காலம் கழிப்பவர்களும் உண்டு.சில முதியோர் தம் வேலையைப் பார்த்துக்கொண்டு போகாமல் அடுத்தவர் காரியங்களில் தலையிட்டு வீண் சச்சரவுகளை வளர்த்து பெரும் பகை வரை எடுத்துச்செல்வார்கள்.சில முதியோர்கள் தம் வங்கிக் கணக்கிலேயே குறியாக இருப்பார்கள். பணத்தை எடுத்துச் செலவழிக்க அஞ்சுவார்கள். பிள்ளைகளுக்கோ பேரன் பேத்திகளுக்கோ கொடுத்து மகிழ்ந்து விட மாட்டார்கள். நாளை என்ன ஆகுமோ என்ற அதே திகிலில் நிகழ் காலத்தை நிம்மதியின்று கழிப்பார்கள்.ஆத்மார்த்தமாக பேரன் பேத்திகளிடம் அன்பு செலுத்தும் முதியோர்கூட, தம் சுயநலத்துக்காக தம்மை அண்டி உள்ளார்களோ என்ற ஐயம் அவர்களுக்கு ஏற்படாத வண்ணம் நடந்து கொள்வது அவசியம்.அயல் நாடுகளில் முதியோர் சலுகை:அயல் நாடுகளில் பெரும்பாலும் முதியோர் பென்ஷன் கட்டாயம் அளிக்கப்படுகிறது. மேலும் அங்குள்ள முதியோர் இல்லங்கள் அந்தப் பென்ஷன் தொகையில் ஒரு பகுதியை வாங்கிக்கொண்டு சிறப்பான சேவையை முதியோருக்கு அளிக்கின்றன. சீனியர்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோயின் தன்மைக்கேற்ப அமைந்துள்ள முதியோர் இல்லங்களில் சேர்ந்து தம் வாழ்வை நல்லபடி கழிக்கிறார்கள்.டெலி க்ராஸ் சேவை:தனிமையை விரும்பி வாழும் முதியோர் மற்றும் தனிமையில் தள்ளப்பட்ட வயதானோர், நடமாட இயலாமல் வீட்டில் முடங்கிக் கிடந்து வாழும் நிலையில் உள்ளவர்கள் – இது போன்றோருக்கு உதவும் வகையில் வெளிநாடுகளில் ரெட் கிராஸ் அமைப்பு டெலி கிராஸ் என்ற சேவையை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் தனிமையில் வாடுவோர் மற்றும் நோய் வாய்ப்பட்டவர்கள் ஒரு சமுதாயத் தொடர்பு பெறுவதை உணர்வதால் அவர்களுடைய மன நலமும் வாழ்க்கைத் தரமும் உயர வழி பிறக்கிறது.டெலி கிராஸ் அமைப்பினர் தன்னார்வுத் தொண்டர் குழுவின் உதவியோடு தனித்து வாழ்பவர்களுக்கு வெளி உலகத் தொடர்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள். அன்பான ஓரிரு ஆறுதல் வார்த்தைகள் மூலம் அவர்களின் தனிமையைப் போக்கி ஊக்கமளிக்கிறார்கள். இதன் மூலம் வயதான மற்றும் வீட்டில் முடங்கியுள்ளவர்களின் உடல் மற்றும் மன நலத்தின் பாதுகாப்பை அறிந்து உதவ முடிகிறது. தனிமையில் வாழும் பெரியோருக்கும் அவர்களைப் பல காரணங்களுக்காக பிரிந்து வாழும் குடும்பத்தாருக்கும் மன அமைதி கிடைக்கிறது.முடிவுரை:வயோதிகம் ஒரு சாபமல்ல. அது ஒரு வரம் என்று உணர வேண்டும். பிறருக்கும் உணர்த்த வேண்டும். இயற்கையோடு இயைந்த அமைதியான பிரசாந்தமான வாழ்க்கையை பெரியோர்களுக்கு அளிப்பதில் குடும்பத்தாருக்கு மட்டுமின்றி சமுதாயத்துக்கும் அரசாங்கத்துக்கும் மிகப் பெரியு பொறுப்பு உண்டு. விதவைப் பெண்களுக்கான பென்ஷன் அவர்களிடம் சேர்வது மிகவும் அவசியம். அதோடு முதியோரும் கொஞ்சம் முயற்சித்து தற்கால தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டு தம்மை மேம்படுத்திக் கொண்டு அப்டேட்டட் ஆக இருக்க வேண்டியது அவசியம். வங்கிக்குச் செல்லாமலும் கியூவில் கால் கடுக்க நிற்காமலும் ரயில் டிக்கெட் வாங்குவது, பில்கள் கட்டுவதும், ஆட்டோ, டாக்ஸி புக் செய்வது போன்றவற்றுக்கான ஆப்ஸ்களை மொபையில் பதிவிறக்கம் (டௌன்லோடு) செய்து கொள்வது போன்றவற்றை அறிந்துகொள்ள வேண்டும். பேரன் பேத்திகளிடம் கேட்டால் அவர்கள் பொறுமையாகச் சொல்லிக்கொடுப்பார்கள். எல்லாவற்றுக்கும் பிள்ளைகளைச் சார்ந்திருப்பது அவர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்தும். எப்போதும் பழங்கதை பேசிக் காலம் கழிக்காமல் தமக்கென்று ஒரு பொழுதுபோக்கு ஹாபியை வளர்த்துக்கொண்டு வயோதிக வாழ்க்கையை உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் கழிக்கலாமே!