அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன், ப்ரோடீன், நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பீட்டா- கரோட்டின், தையாமின், வைட்டமின் பி-5, பொட்டாசியம், கால்சியம், காப்பர், மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது.
அன்னாசிப் பழத்தில் அதிக அளவில் வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளதால் பார்வை கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்.
அன்னாசிப் பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.
அன்னாசிப்பழத்தில் வைட்டமின் 'சி' சத்து நிறைய இருப்பதால், நீரிழிவால் ஏற்படும் இருதய பாதிப்பு, ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சுத் திணறல், ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோய் ஆகியவை நிகழாமல் தடுக்கும்.
சிலருக்கு திடீரென்று தொடர்ந்து விக்கல் வந்துகொண்டே இருக்கும். அச்சமயத்தில், ஒரு தம்ளர் அன்னாசிப்பழச் சாற்றில் சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும். உடனே பலன் கிடைக்கும்.
இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடென்ட்களின் சக்தியை அதிகரிக்கும். இது இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது.
அன்னாசிப் பழத்தில் அதிக அளவில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் உங்கள் எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது.
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது. அன்னாசிப்பழ சாறுடன் தேன் சேர்த்து தொடர்ந்து நாற்பது நாள் சாப்பிட்டால் ஒற்றைத் தலைவலி, வாய்ப்புண், ஞாபகமறதி போன்ற நோய்கள் குணமடையும்.
அன்னாசிப் பழவில்லைகளின் நடுப்பாகத்தை, கட்டையாக உள்ளது என்று சாப்பிடாமல் எறிந்து விடாதீர்கள். அந்த நடுப்பகுதியில்தான் அதிக அளவில் 'ப்ரோமிலைன்' உள்ளது. 'ப்ரோமிலைன்' உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடியது. அதோடு உடலில் ஏதேனும் இரத்தக்கட்டு, வீக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை சீர் செய்யும் தன்மை 'ப்ரோமிலைனு'க்கு உண்டு.
அன்னாசிப்பழம் அடிக்கடி சாப்பிட்டு வர, சிறுநீரகக் கற்கள் கரையும்.
உயர் இரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம் நிறைந்த உணவுகள் மிக மிக முக்கியம். அன்னாசியில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து உள்ளது.
ஓர் அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்மளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.
அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிடலாம். கர்ப்பிணிப் பெண்களும், மூலநோய் உள்ளவர்களும் இப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.