kavithai
kavithaiImage credit - pixabay

கவிதை - இலக்கினை நோக்கு!

Published on

வாழ்ந்திடப் பிறந்தோம்.

வாழ்வோம் ஏற்றமாய்.

சீலமுடன் வாழ்ந்தால்

சிறப்பாய் நிலைக்கலாம்.

நிலையாமை  நிலைத்த

நில்லா உலகிது.

இலக்கில்லா வாழ்க்கை

இனிமை தராது.

எப்படியும் வாழலாம்

என்பதே தவறு.

பிறரின் பின்னால்

போவதை நிறுத்து.

உனக்கென ஒருபாதை

உழைத்தே உருவாக்கிடு.

இன்னல் வந்துறுத்தும்

இடிந்து போகாதே.

உயர் இலக்கினை

மனதில்

உவந்தே கனவாக்கு.

இலக்கினை யடைந்திட

இரவுபகலாய் முயன்றிடு.

உச்சம் தொட்டிட

உடனே முடியாது.

தடையைப் படியாக்கி

தாண்டியே ஏறிடு.

வழக்கலும் சறுக்கலும்

வாகைசூட வழிகாட்டும்.

தன்னலம் பேணாதே

துவண்டே நிற்காதே.

நாட்டை உயர்த்திட

நாளும் பாடுபடு.

இலக்கினையடைந்தே

இன்பமாய் வாழ்ந்திடு.

பலரின் நினைவில்

பாங்காய்  நிலைத்திடு.

logo
Kalki Online
kalkionline.com