எல்லையின்றி போகும் மனிதனின் செயல்களில்,
பிறர் வீசும் விச வார்த்தைகளில்,
துரோகத்தின் துர்சமயங்களில்...
ஏமாற்றத்தின் ஏளனச் சிரிப்பில்,
எதிரிகளின் எகத்தாள வார்த்தைகளில்
என் எண்ணங்களை மண்ணாக்கும்
தருணங்களில்...
சொந்தமாக இருந்து கொண்டு சோதிக்கும்
நிமிடங்களில்...
பணமில்லா நிலையில் எமைப் பள்ளத்தில்
தள்ளும் பொழுதினில்...
பந்தங்களின் அரிதாரச் சாயம் அற்றுவிடும்
வேளையில்...
நடிப்புக்காகச் சிரிக்கும் நமட்டுச் சிரிப்பினில்....
எங்கே செல்கின்றாய் “ நீ ”
இளம்வயதில் நின்னை அறியாத நான்
இப்பொழுது உன்னையன்றி ஒரு நிமிடம்
வாழ்ந்தாலும் சூழ்ச்சியை தாங்காது
சுக்கு நூறாக்குவேன்...
இந்த மையையே தினமும் தீட்டுகிறேன்...
பொறுமையைக் கவசமாக...