கவிதை - இளமை சொன்னதும் முதுமை மறுத்ததும்!

கவிதை...
கவிதை...

இளமை சொன்னது

கடற்கரையில் கரம் கோர்த்து

கடைக்கண் பார்வை பார்த்து. 

கைபிடித்த ஸ்பரிசம் தந்த

மின்சாரம் தான் காதல் என்று

விண்ணை வளைத்து

அந்த வெண்ணிலவைப் பிடித்து

நிலவில் நின்று நீல வானம் தரும்

கனவு தான் காதல் என்று

மறுத்தது முதுமை

அதுமட்டுமல்ல காதல் என்று 

முதுமை எட்டிப் பார்க்கும்

முதல் அனுபவம் கூட காதல் தான் 

நிபந்தனை ஏதுமில்லா

நிரந்தர அன்பும் காதல் தான் 

இளமை தந்த கசப்பான அனுபவங்கள்

கற்றுத் தந்த பாடமும் கூட காதல் தான் 

கசப்பை கைக்குள் அடக்காது

காற்றில் பறக்க விட்டு 

துவண்டு விடாமல் துணை நிற்பதும்

முதிர்ந்த காதல் தான்

இளமைக் காதல் இனிக்கும் ஸ்பரிசம் என்றால்

முதுமைக்காதல் 

மனதுக்கு தரும் மருந்தும்

காதல் தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com