பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் ஸ்ட்ரெச் மார்க்ஸ்! சரி செய்ய 4 டிப்ஸ்!

Stretch Marks
Stretch Marks
Published on

பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்பு வயிற்றில் ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்படலாம். ஏனெனில் கர்ப்பகாலத்தில், குழந்தை வளர வளர சருமத்தின் எலாஸ்டிக் தன்மை அதிகரித்து வயிறானது விரிவடைந்து, குழந்தை பிறந்த பின்பு மீண்டும் பழைய நிலைக்கு வரும். எனவே பெண்களின் சருமம் விரிவடைந்து சுருங்கும் போது வயிற்றைச் சுற்றி ஆங்காங்கு ஸ்ட்ரெச்மார்க்ஸ் என கூறப்படும் கோடுகள் உருவாகும்.

ஸ்ட்ரெச் மார்க்ஸ் ஏற்பட காரணம்?

சருமத்தில் கொலஜன் மற்றும் எலாஸ்டின் என்ற புரதங்கள் உள்ளன. இவைதான் சருமத்தைப் பாதுகாத்து வருகின்றன. கர்ப்பகாலத்தில் பெண்களின் வயிறு விரிவடைந்து மீண்டும் சுருங்கும்போது, டெர்மிஸ் (Dermis) படிமம் உடைக்கப்படுவதால், ஸ்ட்ரெச் மார்க்ஸ் விழுகிறது.

இதையும் படியுங்கள்:
பெண்களே! உங்க கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்க இத பண்ணுங்க!
Stretch Marks

அதேபோல், நீண்ட காலமாக உடல் எடை அதிகம் இருந்து, திடீரென குறையும்போதும் சருமத்தில் உள்ள டெர்மிஸ் படிமம், எலாஸ்டின், கொலஜன் போன்றவை உடைக்கப்பட்டு தழும்பாக மாறலாம். இந்த ஸ்ட்ரெச் மார்க் மற்றும் தழும்புகள் மறைய நாம் என்ன செய்ய வேண்டும்? இதை வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே எளிதில் சரி செய்ய முடியும்.

ஸ்ட்ரெச் மார்க்ஸ் மற்றும் தழும்புகளை சரி செய்ய சில டிப்ஸ்!

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயை சருமத்திற்கு அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். தேங்காய் எண்ணெயை தழும்புகள் மற்றும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் உள்ள இடத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து பின்னர் தண்ணீரால் கழுவினால் தழும்புகள் மறையும்.

பாதாம் எண்ணெய்

சர்க்கரையுடன் சமஅளவு பாதாம் எண்ணெய் எடுத்து இரண்டையும் ஒன்றாக கலக்கி கொள்ள வேண்டும். அதை தழும்புகள் மற்றும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் உள்ள இடத்தில் தேய்த்த பிறகு சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் தழும்புகள் மெல்ல மெல்ல மறைய கூடும். இதை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்ய வேண்டும்.

கற்றாழை

சரும பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் கற்றாழை செல்லை, குளித்த பின்னர் தழும்புகள் மற்றும் ஸ்ட்ரெச் மார்க்ஸ் உள்ள இடத்தில் தடவி வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக மறையும்.

விளக்கெண்ணெய்

ஸ்ட்ரெச் மார்க் மற்றும் தசை விரிவு கோடுகளை நீக்கும் தன்மை கொண்டது விளக்கெண்ணெய். இதை தழும்புகள் மற்றும் ஸ்ட்ரெச்மார்க்ஸ் உள்ள இடங்களில் தடவி மசாஜ் செய்து வந்தால் எளிதில் மறைந்து விடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com