ரத்த சோகை வராமல் தடுக்க...

ரத்த சோகை வராமல் தடுக்க...

சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, அதனால் ஹீமோகுளோபினின் செயல்பாடும் குறைந்து, அதனால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் தடைபடும் நிலையையே ரத்தசோகை என்கிறோம். வழக்கமாக ஹீமோகுளோபின் அளவு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மூன்று தரப்புக்கும் சிறிது வித்தியாசப்படும்.

ஹீமோகுளோபின் பெண்களுக்கு 100 மி.லி. ரத்தத்தில் 12.1 முதல் 15.1 கிராமும், கர்ப்பிணிகளுக்கு 100 மி.லி. ரத்தத்தில் 11  முதல் 12 கிராமும் இயல்பாக ரத்தத்தில் இருக்க வேண்டும்.

* பெண்களுக்கு 12 கிராமுக்குக் குறைவாக, கர்ப்பிணிகளுக்கு 11 கிராமுக்கு குறைந்தால் ரத்த சோகை ஏற்படும். இதற்கு இளம்பெண்கள் மருத்துவரிடம் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் பெற்று உட்கொள்ள வேண்டும்.

ரத்தசோகை ஏற்படக் காரணங்கள்:

* பெண்கள் பூப்பெய்திய காலம் முதல் தங்கள் மாதவிலக்கு காலங்களில் அதிக அளவு ரத்தப் போக்கினால் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இழப்பதால்...

* பேறுகாலத்தின்போது ரத்தபோக்கு ஏற்படுவதால்...

* அடிக்கடி குழந்தை பெறுவதால்

* தேவைக்கு ஏற்பட உணவு உண்ணாமை

உங்களுக்குத் தெரியுமா?

தமிழ்நாட்டில் 70 சதவிகிதம் வளர் இளம்பெண்களுக்கு ரத்தசோகை நோய் காணப்படுகிறது.

இதன் பாதிப்பு:

பள்ளிப் படிப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் குறைவான பங்கேற்பு, ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் சக்தி குறைவு,, தொடர்ந்து அசதி.

இதன் ஆரம்ப அறிகுறிகள்:

சோர்வு ; மூச்சு வாங்குதல், கற்றலில் கவனக்குறைவு, அன்றாடம் வேலைகளைச் செய்ய முடியாமை, வெளிறிய முகம் மற்றும் கண்கள், மார்பு படபடத்தல்

தடுக்க என்ன செய்ய வேண்டும்?

* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடல் பூச்சி நீக்க மருந்து எடுத்துக்கொள்ளுதல்

* இரும்புச் சத்து மாத்திரை சாப்பாட்டுக்குப் பின் உட்கொள்ளுதல்.

* இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு சேர்த்துக் கொள்ளுதல்.

* சுகாதாரக் கழிப்பறையை உபயோகித்தல்

*வெளியில் செல்லும்போது காலணிகள் அணிதல்

* மலம் கழித்தபின், சமைக்கும் முன், குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முன் சோப்பு போட்டுக் கைகளைக் கழுவுதல்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com