

பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி, பி6, ஃபோலேட், நியாசின், பான்டோதெனிக் அமிலம், தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் உண்டு.
பரங்கிக்காயில் வைட்டமின் ஏ அதிகளவில் காணப்படுகிறது, இது கண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
பரங்கிச் சாறு ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பைப் போக்கக்கூடியது. இதனால் மாரடைப்பு உட்பட பல இதய நோய்கள் தடுக்கப்படுகிறது.
பரங்கிச் சாற்றோடு சிறிது தேன் கலந்து சாப்பிடுவதால் வெப்பம் தணிந்து, உடலுக்குக் குளிர்ச்சி தரும்.
பரங்கிக்காய் சாறு கல்லீரல் மற்றும் சிறுநீரகத்துக்கு பலம் சேர்க்கிறது.
பரங்கிக்காய் உடலில் உள்ள இரும்புச்சத்து குறைபாட்டை போக்கி ரத்த சோகையை குணப்படுத்துகிறது .
பரங்கிக்காய் உடம்புக்கு வலிமையும், சக்தியும் அளிக்க வல்லது. அயர்ச்சி, பித்தம் நீக்கும், கபத்தை வெளியேற்றும். உடல் பருமனைக் குறைக்கும்.
பரங்கி விதையை பொடி செய்து வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி இருவேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும்.
பரங்கிக்காய் சாறு 30 மில்லியளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வர வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.
மூல நோய், எரிச்சல், தாகம், வயிற்றுப் பொருமல் ஆகியவற்றிற்கு பரங்கிக்காய் அருமருந்து.
பரங்கிச்சாற்றைக் கொண்டு வாய்கொப்பளித்து வந்தால் பல்லின் வேரை பலப்படுத்தி பல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்.