கேள்வி ஒன்று; கோணங்கள் மூன்று. கர்ப்பிணிகள் கவனத்திற்கு!

Attention pregnant women
Attention pregnant women

கர்ப்பிணி தனக்கும், தன் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கும் உணவை உட் கொள்ள வேண்டுமா?

அல்லோபதி நிபுணர்: கர்ப்பிணிக்கு அதிக அளவு, புரோட்டீன்கள், கார்போஹைடிரேட்டுகள், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை தேவைப் படுகிறது. கலோரி அளவைவிட 20 சதவிகிதம் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதாவது, கர்ப்பிணி அல்லாத பெண்ணைவிட, கர்ப்பிணிக்கு இந்த அதிகரிப்பு தேவைப்படுகிறது.

கர்ப்பத்தின் பின்பகுதியில் 300 கலோரிகள் அதிகமாகத் தேவைப் படுகிறது. 50 கிலோ எடையுள்ள சராசரி இந்தியப் பெண்மணிக்குத் தேவையான கலோரிகள் 2500. கர்ப்ப ஆரம்ப நிலையில் அவளின் எடை அதிகமாக இருந்தால், அதிக கார்ப்போஹைட்ரேட்டுகள், கொழுப்புச்சத்துக்கள் உள்ள உணவை நீக்குவது நல்லது.

கர்ப்பகாலத்தில் நன்றாக ஓய்வு எடுத்து, வயிறார சாப்பிடவேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அளவுக்கதிகமான உணவு உட்கொண்டால், உடம்பு பருத்து, ப்ரீ எக்லாம்சியா (pre-eclampsia) எனும் கோளாறு ஏற்படும்போது அளவுக்கு அதிகமாக மனஇறுக்கம், சிறுநீரில் புரோட்டீன் சேருவது போன்றவை ஏற்படும்.

ஆயுர்வேத நிபுணர்: கர்ப்பிணி நல்ல தரமான உணவை உட்கொள்ளவேண்டுமே யொழிய அதிக உணவை உண்ணக் கூடாது. ஆகாரம் முழுமையானதாகவும் போஷாக்கு நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். கர்ப்பிணிக்கு புரோட்டீன் நிறைந்த அதிகக் கலோரிகள் தேவைப்படும்.

இதையும் படியுங்கள்:
உலர் கருப்பு திராட்சையில் உள்ளது ஓராயிரம் பலன்கள்!
Attention pregnant women

ஹோமியோபதி நிபுணர்: கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமாகவும் அதிக எடை போடாமலும் இருக்க வேண்டுமென்றால், கர்ப்பிணி, தன் கருவிலுள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்க எந்த அளவு உணவு கொள்ள வேண்டுமோ, சரியாக அந்த அளவு உட்கொண்டால் போதுமானது.

பின்குறிப்பு: கொடுக்கப்பட்ட கருத்துகளால் குழப்பம் ஏற்படலாம். அம்மா சொல்வதைக் கேட்பதா, மாமியார் சொல்வதைக் கேட்பதா, அல்லது, அல்லோபதி, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்கள் ஆலோசனையைக் கேட்பதா? இம்மாதிரியான சூழ்நிலையில், இக் கருத்துக்களை அப்படியே பின்பற்றுவதற்கு முன், நீங்கள் செக் அப்புக்காகச் செல்லும் மருத்துவரிடம் இது பற்றிக் கேட்டு, அவர் சொல்படி நடப்பது சிறந்தது.

-ராஜி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com