கேள்வி ஒன்று; கோணங்கள் மூன்று. கர்ப்பிணிகள் கவனத்திற்கு!

Pregnant woman
Pregnant woman

கர்ப்பிணிக்கு அதிகமான இனிப்புகள் சாப்பிட வேண்டும் என்று ஆசை ஏற்பட்டால், பிறக்கும் குழந்தை ஆணாகவும், காரசாரமான உணவு சாப்பிட ஆசை ஏற்பட்டால், பெண்ணாகவும் இருக்குமா?

அலோபதி நிபுணர்: மருத்துவரீதியாக இக்கருத்தில் எந்த உண்மையுமில்லை. ஆனாலும் பலருக்கு இக்கருத்தில் நம்பிக்கை இருக்கிறது. மேலும், பிறக்கப் போகும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை, கர்ப்பிணியின் வயிற்றின் வடிவத்தைக் கொண்டும் தெரிந்துகொள்ள முடியும் என்ற கருத்தும் நிலவுகிறது. வயிறு மேடு பள்ளமாக இல்லாமல், உருட்டி விட்டாற்போல நல்ல உருண்டை வடிவமுடையதாக இருந்தால், பெண் குழந்தை என்றும்,  வயிறு முன்னே தள்ளிக்கொண்டு, கரடுமுரடாக இருந்தால், ஆண் குழந்தை என்றும் கருத்து இருக்கிறது. மருத்துவரீதியில் இக்கருத்துக்கு எந்த ஆதாரமுமில்லை. கர்ப்பிணி எப்போதும் அமைதியாகவும், மகிழ்ச்சிகரமாகவும் இருக்க வேண்டும். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் குழந்தை ஆரோக்கியமானதாக,  குறை எதுவும் இல்லாததாக இருக்க வேண்டும் என்று பிராத்திப்பதுதான் சரியான முறை.

ஆயுர்வேத நிபுணர்: மிகவும் தவறான கருத்து. ஒரு குறிப்பிட்ட விதமான உணவைத் தின்ன வேண்டும் என்ற கர்ப்பிணியின் அவாவிற்கும், குழந்தை, ஆணா பெண்ணா என்பதற்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால், கர்ப்பிணிக்கு ஒரு குறிப்பிட்ட உணவை அதிகமான அளவில் தின்ன வேண்டும் என்ற அவா எழுந்தால், அவள் உடம்பில் அந்த வித உணவின் பற்றாக்குறை இருக்கிறது என்பதுதான் பொருள். எனவே, கர்ப்பிணியின் ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டும். நிராகரிக்கக் கூடாது. கர்ப்பிணிக்குப் போஷாக்கான உணவு கிடைக்கும்படிச் செய்ய வேண்டும்.

­ஹோமியோபதி நிபுணர்: தவறான கருத்து.

பின்குறிப்பு: கொடுக்கப்பட்ட கருத்துகளால் குழப்பம் ஏற்படலாம். அம்மா சொல்வதைக் கேட்பதா, மாமியார் சொல்வதைக் கேட்பதா, அல்லது, அல்லோபதி, ஆயுர்வேத, ஹோமியோபதி மருத்துவர்கள் ஆலோசனையைக் கேட்பதா? இம்மாதிரியான சூழ்நிலையில், இக்கருத்துக்களை அப்படியே பின்பற்றுவதற்கு முன், நீங்கள் செக் அப்புக்காகச் செல்லும் மருத்துவரிடம் இது பற்றிக் கேட்டு, அவர் சொல்படி நடப்பது சிறந்தது.

-ராஜி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com