

பெண்கள் அதிகம் பயன்படுத்தும் சாதனமான ஒன்று லிப்ஸ்டிக். பெண்கள் மேக்கப்பில் முக்கிய இடம் பெறுகிறது. ஆனால் இந்த சிவப்பு நிறம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது நம்மில் யாருக்கும் தெரியாது. இப்பதிவின் மூலம் அதை தெரிந்து கொள்ளுங்கள்.
இன்றைய காலக்கட்டத்தில் அழகு நிலையங்கள் தெருவுக்கு தெரு அழகு நிலையங்கள் வந்ததில் பெண்களும் அதிக அளவில் அழகு நிலையங்களில் சென்று தங்களை அலங்கரித்துக் கொள்வது சகஜமாகிவிட்டது சில பெண்கள் குறைந்த பட்ச மேக்கப்பை தாங்களே செய்வதுண்டு. அதிலும் பெண்கள் லிப்ஸ்டிக் பயன்பாடு தற்போது நாகரீக உலகில் அதிகமாகவே உள்ளது.
Cochineal என்றால் என்ன ?
Cochineal என்பது ஒரு சிறிய பூச்சி வகை. இந்த பூச்சி பெரும்பாலும் மெக்சிகோ, தென் அமெரிக்காவின் சில பகுதிகளில் காக்டஸ் செடிகளில் வாழ்கிறது. இந்த பூச்சியை உலர்த்தி நசுக்கும் போது காரமைன் என்ற சிவப்பு திரவம் கிடைக்கும். இந்த திரவம் பழங்காலத்திலிருந்து பல உணவுப் பொருட்களிலும், துணி வண்ணங்களிலும், அழகு சாதனங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
லிப்ஸ்டிக்கில் ஏன் இந்த பூச்சியின் திரவத்தைப் பயன்படுத்துகிறார்கள்?
சிவப்பு நிறத்தை உருவாக்க பல கெமிகல்கள் இருந்தாலும் இயற்கை நிறங்களில் மிகவும் திடமாக நீண்ட நேரம் நீடிக்கும் சிவப்பு காரமைன் தான். அதனால் பல ஆண்டுகளாய் பல பிராண்டுகள் இதை பயன்படுத்துகின்றன. இது நிறம் வெளிர்ந்து விடாது. உதட்டில் மென்மையாக பரவுகிறது. தோலுக்கு பாதிப்பு குறைவாக இருக்கும். இந்த காரணங்களால் அழகுசாதன நிறுவனங்கள் இதைத் தேர்வு செய்கின்றன.
உண்மையில் என்ன நடக்கிறது?
லட்சக்கணக்கான cochineal பூச்சிகளை சேகரித்து அவற்றை உலர்த்தி நசுக்கி சிவப்பு பிக்மெண்ட் எடுக்கப்படுகிறது. இப்படிக் கிடைக்கும் திரவமே காரமைன் E120 எனப்படும் சிவப்பு நிற பொதி. இதுவே சில பிராண்டுகளிலும் லிப்ஸ்டிக்(Red lipstick) மற்றும் கண் ஷேடோக்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது.
எல்லா லிப்ஸ்டிக்குகளுக்கும் இதே நிறம் இருக்குமா?
இல்லை. சில பிராண்டுகள் இதை முற்றிலும் தவிர்க்கின்றன. அவர்கள் செயற்கை நிறப்பொதிகள், செடிகளில் இருந்து பெறப்படும் வேறு இயற்கை நிறங்கள், மினரல் பிக்மெண்ட்ஸ் இவற்றைப் பயன்படுத்துகின்றன. ஆனால் பல பிராண்டுகள் இதையே நம்பிக்கையுடன் பயன்படுத்துகின்றன. ஏனெனில், இது காலங்காலமாக பாதுகாப்பான இயற்கை நிறம் என்று கருதப்படுகிறது.
இது உடலுக்கு பாதகமா?
விஞ்ஞானிகள் பாதுகாப்பானது என்று கூறுகிறார்கள். ஆனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதுண்டு. வீகன் வாழ்க்கையை பின்பற்றுகிறவர்கள், பூச்சி சார்ந்த பொருட்களை தவிர்க்க நினைப்பவர்கள் இதைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
லிப்ஸ்டிக் வாங்கும் போது கவனிக்க வேண்டியது
கீழே உள்ள வார்த்தைகள் இருந்தால் கார்மைன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
Carmine
Carminic acid
Cl 75470
E120
Natural red 4
இந்த வார்த்தைகள் இல்லாவிட்டால் அதே வேறுவகை நிறம் வைத்த தயாரிப்பு என்று புரிந்துக் கொள்ளலாம். அழகு சாதன விளம்பரங்கள் இந்த உண்மையை வெளிப்படையாகச் சொல்லாது. இந்தத் தகவலை பெண்கள் மேக்கப் ஆர்வலர்கள், அழகு சாதனப் பொருட்கள் வாங்குபவர்கள் தெரிந்து கொள்வது அவசியம். நாம் என்ன பயன்படுத்துகிறோம் என்ற விழிப்புணர்வு இருந்தால்தான் ஆரோக்கியமான முடிவுகளை எடுக்க முடியும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)