நதிகளும் அதன் பெருமைகளும்!

நதிகளும் அதன் பெருமைகளும்!
Published on

ரிக் வேதத்தின்படி முக்கிய நதிகளாக கங்கை, யமுனை , சரஸ்வதி, சுத்தி, ப்ருஷ்ணி, மருத்விருதா, அசிக்னி, அர்ஜிக்யா, விதஸ்தா மற்றும் சுஹோமா ஆகியவை கூறப்படுகிறது.

இதில் அசிக்னியை சேனாப் நதி எனவும், சந்திரபாகா எனவும் மாற்றுப் பெயர்களில் அழைக்கின்றனர். இதே போல் அர்ஜிக்யாவின் மற்ற பெயர்கள் விபாஸ் மற்றும் விபஸ்.

ப்ருஷ்ணி நதிக்கு ராவி எனவும், ஐராவதி நதி எனவும் பெயருண்டு. சேனாப் நதியில் ஏழு நாட்கள் விரதம் இருந்து யார் ஸ்நானம் செய்கிறார்களோ அவர்கள் முனிவர்கள் ஆகிவிடுவார்கள் என மகாபாரதத்திலும், தருமருக்கு பீஷ்மர் கூறியதாக வருகிறது. பாண்டுவின் மனைவி மாத்ரி பிறந்த பூமி.

ஐராவதியின் கரையில் சிரார்த்தம் செய்வது சிறப்பு என்பர். விபஸ் நதியின் கரையில் வசிஷ்டர் ஆசிரமம் இருந்தது. சுதுத்ரி என்பதுதான் சட்லெஜ் நதி.

கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் இணைந்து அலகாபாத்தில் திரிவேணி சங்கமமாகிறது. வேதங்களில் இல்லாத நதி கோதாவரி. இது விஷ்ணுவின் வராக அவதாரத்தின் போது தோன்றிய நதி.

துங்கபத்ராவின் ராமாயணக் காலப் பெயர் பம்பா. அமர காண்டத்தில் இருந்து மூன்று பெரிய நதிகள் துவங்குகின்றன. அவை மகாநதி, சோனா மற்றும் நர்மதை. இவற்றில் சோனபத்ரா பல ரிஷி முனிவர்கள் காலம் செய்த நதி தீரம். இதன் கரையில் உள்ள பிரபல ஊர்கள் ஜபல்பூர் மற்றும் மிர்சாபூர், ஷாஹாபாத் போன்றவை. இதன் கரையில் உள்ள ஷோன்பூரில்தான் உண்மையில் கஜேந்திர மோட்சம் நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு சான்றாக இங்கு கரையில் யானைகளின் நடமாட்டமும், தண்ணீரில் முதலைகளின் வாசமும் அதிகம்.

கோமதி நதிக்கரையில்தான் நைமிசாரண்யம் என்ற புனித ஊர் அமைந்துள்ளது. நமது புராணங்கள் காலம் காலமாய் வைத்து பாதுகாக்கப்படும் இடம். இந்த தலத்தில் உள்ள லலிதை ஒரு சக்திபீட அம்மன்.

1440 கி.மீ நீளம் கொண்ட கோதாவரியில்தான் ராமனின் காட்டு வாழ்க்கை நீண்ட காலம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

இவ்வாறு பல நதிகளும் அதன் பெருமைகளும் நம் நாட்டின் பொக்கிஷங்களாக இருந்துவருகின்றன. அதைப் போற்றி பாதுகாத்து புகழ் சேர்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com