RmKV: Elegance-Innovation-Tradition! விழா கால கொண்டாட்டம்! 15 பட்டுப் புடவைகளின் அசத்தல் அணிவகுப்பு!

RmKV - Silk Sarees
RmKV - Silk Sarees
Published on
mangayar malar strip

1924 ஆம் ஆண்டு, முதல் கடையை திருநெல்வேலியில் துவங்கியதில் இருந்து, இன்று வரை, நூறாண்டு காலமாக, RmKV வாடிக்கையாளர்களின் அன்பாலும், வியாபாரிகளின் நம்பிக்கையாலும், நெசவாளர்கள் மற்றும் பணியாளர்களின் அர்ப்பணிப்புள்ள அயராத உழைப்பாலும் எட்ட முடியாத சிகரத்தை எட்டி இருக்கிறது.

வாடிக்கையாளர்களுக்காக நேர்த்தியான பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்வது RmKVயின் சிறப்பம்சம். பட்டுப்புடவைகள் RmKV டிசைன் ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டு, புதுமையான உக்திகள் மற்றும் வழிமுறைகள் மூலம் மிகச்சிறந்த நெசவாளர்களால் நெய்யப்பட்டு வருகிறது. பட்டு இழையை இலேசாகவும் காற்றோட்டம் உள்ளதாகவும் காப்புரிமை பெற்ற நுட்பங்களால் நெய்வது முதல், இயற்கை பொருட்களை பயன்படுத்தி பல வண்ணங்களை உருவாக்குவது வரை, நெசவுத்தொழிலில் பல புதுமைகள் இதில் உள்ளடங்கும்.

கடந்த 100 ஆண்டுகளாக 110க்கும் மேற்பட்ட பிரத்யேக பட்டு புடவை ரகங்களை அறிமுகம் செய்த RmKV, அதன் 101 ஆம் ஆண்டில், இந்த விழாக்காலத்தில் 15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகம் செய்கிறது.

2025-ன் விழாக்கால கொண்டாட்டத்திற்காக உருவாக்கப்படும் சிறப்பு படைப்புகள், ஜப்பானிய மற்றும் இந்திய கலை கலாச்சாரங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன.

Sashiko Reversible - RmKV Silk Saree
Sashiko Reversible - RmKV Silk Saree

ஷாஷிகோ ரிவர்சிபிள் (Sashiko Reversible)

RmKV டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட சாதனை படைப்பான ரிவர்சிபிள் பட்டு புடவை. ஒரு புறம் பச்சை வண்ணமும் மறுபுறம் அந்திவான செந்நிறமும் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவமான பட்டுப் புடவை. பார்டர் மற்றும் முந்தானைகளில், வெவ்வேறு வண்ணங்களில், ஜப்பானின் ஷாஷிகோ (Sashiko) வடிவங்கள் மற்றும் கிக்கியோ (Kikyo) மோட்டிஃப்களும், உடல் முழுதும் ஜரிகையின் நளினமான வேலைப்பாடுகளும் கொண்ட புடவை. காப்புரிமை பெறப்பட்ட KV நுட்பத்தில் கைத்தறியில் நெய்யப்பட்ட அற்புத புடவை.

Korvai Japan - RmKV Silk Saree
Korvai Japan - RmKV Silk Saree

கோர்வை ஜப்பான் (Korvai Japan)

RmKVயின் டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் தனித்துவமாக உருவாக்கப்பட்ட எலுமிச்சை மஞ்சள் வண்ண கோர்வை கைத்தறி பட்டு புடவை. எலுமிச்சை வண்ணத்தோடு, இணையும் பார்டர் மற்றும் முந்தானைகளின் கருஞ்சிவப்பு வண்ணங்கள், மேலும் ஜப்பானிய மோட்டிஃப்கள், ஹனாபிஷி (Hanabishi) பூக்களின் கொடிகள், வடிவங்கள், அடையாளங்கள் பட்டின் பெருமை பேசும் கைத்தறியின் கலை வடிவம்.

Mount Fuji - RmKV Silk Saree
Mount Fuji - RmKV Silk Saree

மவுண்ட் ஃபுஜி (Mount Fuji)

அடர் இண்டிகோ வண்ணத்தில் ஜப்பானிய ஷாஷிகோ (Sashiko) வடிவங்களும், முந்தானையில் இளங்காலை பொழுதின் சாயலோடு பூத்துக் குலுங்கும் செர்ரி மரங்களும், சணல் செடிகளும், அமைதியான மவுண்ட் ஃபுஜியும் ஜப்பானிய அலங்கார வளைவும் கொண்டு, கைத்தறியில் உருவாக்கப்பட்ட மிக அழகான புடவை.

Natural Peach Gradient - RmKV Silk Saree
Natural Peach Gradient - RmKV Silk Saree

நேச்சுரல் ஃபீச் கிரேடியன்ட் (Natural Peach Gradient)

RmKV டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் நமது பாரம்பரிய கைத்தறி முறையில், இயற்கை வண்ணத்தில், ஜப்பானிய கலை நுணுக்கங்களோடு சாய்வக கட்டங்கள் (Gradient Checks) கொண்ட கோடுகளுடனும் ஃபீச் வண்ணங்களில், ஆறு விதமான வண்ணச் சேர்க்கைகளில், வெளிர் வண்ணம் முதல் அடர் வண்ணம் வரை, தனித்துவமாக சப்பான் மரம் (Sappan Wood) மற்றும் மரப்பிசின்களால் (Lac) உருவாக்கப்பட்டது. இயற்கை வண்ணத்தோடு ஜரி வெளிக்கோடுகளுடன் உருவாக்கப்பட்ட பட்டுப்புடவை. அழகிய கட்டங்களில் உட்புறமாக கமலம் புட்டாக்கள். மரபின் அடையாளங்கள் நிறைந்த கோர்வை முறையில் கான்ட்ராஸ்ட் வடிவமைப்புடன் நெய்யப்பட்ட அழகிய பட்டுப்புடவை.

Mocha Mousse - RmKV Silk Saree
Mocha Mousse - RmKV Silk Saree

மோக்கா மவுஸ் (Mocha Mousse)

RmKV டிசைன் ஸ்டுடியோவின் இந்த வருடத்திற்கான மிகச்சிறந்த இயற்கை வண்ண பட்டுப்புடவை. பாக்கு மற்றும் காசுக் கட்டியை பயன்படுத்தி செம்பழுப்பு வண்ணமேற்றப்பட்டு, இதன் உடலெங்கும் பறக்கும் வகையிலான ஜப்பானிய கொக்கு வடிவங்களும், அதற்கு ஏற்ற வெள்ளி ஜரிகைகளின் அலை வடிவங்களும், புதிய தொழில் நுட்பத்தில் நெய்யப்பட்ட பட்டோவியம்.

Van Gogh Lino - RmKV Silk Saree
Van Gogh Lino - RmKV Silk Saree

வான் கோ லினோ (Van Gogh Lino)

உலகின் மிகச்சிறந்த ஓவியரான வான் கோ "ரீவெரி" பட்டு புடவை. உடலெங்கும் மிளிரும் சால்மன் பிங்க் வண்ணமும் அழகிய பொன்னிற பூக்களும், வான் கோவின் 'ஃபீல்ட் ஆஃப் ஐரிஸ்' (Field of Irises) ஓவியத்தை மெஜந்தா வண்ண முந்தானையுடன் வடிவமைத்து, RmKVயின் டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் காப்புரிமை பெறப்பட்ட லினோ நுட்பத்தில் 40% எடை குறைவாக உருவாக்கப்பட்டது. பாரம்பரியத்திற்கும் எல்லா வித விழாக்களுக்கும் அணியும் வகையில் உருவாக்கப்பட்ட உன்னத பட்டு புடவை.

Rasaleela - RmKV Silk Saree
Rasaleela - RmKV Silk Saree

ராசலீலா பட்டுப் புடவை (Rasaleela)

டர்க்காய்ஸ் வண்ணத்தில் கைத்தறியில் நெய்யப்பட்ட இந்தப் பட்டு புடவை தனித்துவமானது. ராசலீலா எனும் ஆனந்தத்தின் அடையாளமான பட்டு புடவை. முந்தானையில் ஏகாந்தமாக நடனமிடும் கோபியர்களும், கிருஷ்ணரும் அடர் கடல் நீல வண்ண பட்டிழை மற்றும் ஜரியால் வடிவமைக்கப்பட்டு, பார்டரில் மயிலிறகு வண்ணமும் வடிவமும் அழகுற நெய்யபட்ட, மீனாகாரி வேலைப்பாடுகளும் கொண்ட இப்புடவை ஆன்ம உணர்வின் அமைதியை உணர வைக்கும் RmKVயின் அற்புத படைப்பு.

Dubla Lino Varna - RmKV Silk Saree
Dubla Lino Varna - RmKV Silk Saree

டபுளா லினோ வர்ணா (Dubla Lino Varna)

ஜாம்தானி மோட்டிஃப்கள் புதுமைகளோடு தெளிவாக உருவாக்கப்பட்டது. பின்னல் வேலைப்பாடுகளுடனும் மல்லிகை பூவின் வடிவங்களுடனும் உடலெங்கும் மூவிலை வடிவ பூக்களுடனும் ஒளிரும் வகையில் படைக்கப்பட்ட கலையின் அடையாளம். RmKV காப்புரிமை பெற்ற லினோ நுட்பத்தால் 40% எடை குறைவாக உருவாக்கப்பட்டது. இப்புடவையின் முந்தானையும், பார்டர்களும் அழகிய மயில் வண்ணங்களுடனும், தூய பொன்னிற ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட உடலும், கலாச்சாரத்தின் அடையாளங்களோடும் உருவாக்கப்பட்ட அற்புதமான பட்டுப் புடவை.

Natural Chrysanthemum - RmKV Silk Saree
Natural Chrysanthemum - RmKV Silk Saree

இயற்கை வண்ண செவ்வந்தி பூ (Natural Chrysanthemum)

RmKVயின் ரஸ்ட்டிக் பிரவுன் தொடர் பார்டருடன் கூடிய கோர்வை பட்டு. இயற்கை பொருட்களான கடுக்காய், செவ்வல்லிகொடி, மல்பரி இலைகள் மற்றும் மரப்பிசின்கள் (Lac) கொண்டு வண்ணம் ஏற்றப்பட்டு, கோர்வை முறையில் உருவாக்கப்பட்ட அற்புதமான பட்டுப்புடவை. பாரம்பரியத்தின் சாயலோடு புதுமையும் கலந்து உருவாக்கப்பட்டது. உடல் எங்கும் செவ்வந்தி பூவின் வடிவங்களும் அதன் மீது தூய பட்டிழைகள் கொண்டு செய்யப்பட்ட மீனா வேலைப்பாடுகளும், கோர்வை முறையும் உடல் வண்ணத்திற்கு ஏற்ற அதோடு இயல்பாய் இணையும் வகையில் பார்டரில் இணை வண்ணங்களும், இப்புடவையின் அழகை மேலும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது. எல்லா விழா காலங்களுக்கும் ஏற்ற அற்புதமான பட்டுப் புடவை.

Muppagam Natural Colours - RmKV Silk Saree
Muppagam Natural Colours - RmKV Silk Saree

இயற்கை வண்ண முப்பாகம் (Muppagam Natural Colours)

RmKVயின் கைதேர்ந்த டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் இயற்கை வண்ணத்தில் உருவாக்கப்பட்ட முப்பாக கோர்வை பட்டு புடவை. தேர்ந்தெடுக்கப்பட்ட மூலிகைகளான கடுக்காய், செவ்வல்லிகொடி, மல்பரி மற்றும் மரப்பிசின்கள் (Lac) கொண்டு உருவாக்கப்பட்ட இண்டிகோ , பச்சை, ஃபீச் போன்ற வண்ணக் கலவைகளோடு, பின்னப்பட்ட ஜரி வேலைப்பாடுகளுடனும், அழகிய பாரம்பரிய கிளி வடிவங்களோடும், கட்டங்களுடன் கைத்தறியில் உருவாக்கப்பட்ட பட்டுப் புடவை.

Gradient Varna - RmKV Silk Saree
Gradient Varna - RmKV Silk Saree

கிரேடியன்ட் வர்ணா (Gradient Varna)

பாரம்பரியத்தையும் நவீன காலத்தையும் இணைக்கும் வகையில் RmKVயின் டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட அழகிய பட்டோவியம். உடல் முழுதும் நீல நிறமும், அதன் மீது பச்சை நிற முக்கோண வடிவங்களும், பார்டர் மற்றும் முந்தானைகளில் மரகத பச்சை வண்ணமும் அதற்கேற்றார் போல வெள்ளி, பொன்னிற ஜரிகைகளின் வேலைப்பாடுகளும் புடவைக்கு மெருகூட்டுகின்றன.

Kottadi Kattam - RmKV Silk Saree
Kottadi Kattam - RmKV Silk Saree

கொட்டடி கட்டம் (Kottadi Kattam)

தூய பட்டிழைகளால் பல வண்ணங்களான கட்டங்களும் அதற்கேற்ற ஜரிகையின் வெளிகோடுகளும், கருஞ்சிவப்பு வண்ண கட்டங்களில் ஒளிரும் நட்சத்திர பூக்களும், பூக்கள் வடிவங்கள் கொண்ட முந்தானையும், பொன்னிற கோடுகள் கொண்ட பார்டரும், அழகில் வியப்பைத் தரும் RmKVயின் கொட்டடி கட்டம் பட்டுப்புடவை.

Corner Mango - RmKV Silk Saree
Corner Mango - RmKV Silk Saree

திரிகோண மாம்பழ புட்டா (Corner Mango)

RmKV டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட புதுமையான பட்டுப் புடவை. நீலம் மற்றும் கடற் பச்சையென இரண்டு வண்ண கலவையால் அழகு மிளிரும் வடிவமைப்புடன் முந்தானையில் திரிகோண வடிவத்தில் மாங்காய் புட்டாவும் இணைத்து நெய்யப்பட்டு, ஜரிகையால் வடிவமைக்கப்பட்ட அன்னம் மற்றும் யானை வடிவங்களும், உயர்ந்த அழகை வெளிப்படுத்துகிறது. எல்லா விழாக் காலத்திற்கும் ஏற்ற அழகிய கைத்தறி பட்டு புடவை.

Kuyil Kann Korvai - RmKV Silk Saree
Kuyil Kann Korvai - RmKV Silk Saree

குயில் கண் கோர்வை (Kuyil Kann Korvai)

பசும் மஞ்சள் வண்ணத்தில் கோர்வை முறையில் உருவாக்கப்பட்ட RmKV டிசைன் ஸ்டுடியோவின் கைத்தறி பட்டுப்புடவை. தனித்துவமான வண்ணமும், ஈவினிங்-மார்னிங் பார்டர்களும் உடல் முழுதும் கமலம் புட்டாக்கள் வண்ண பட்டிழைகள் மற்றும் பார்டரில் பொன்னிற ஜரிகைகளின் வேலைப்பாடும், குயில் கண் வடிவங்களும் கொண்டு உருவாக்கப்பட்ட பட்டோவியம்.

Kumo Korvai - RmKV Silk Saree
Kumo Korvai - RmKV Silk Saree

குமோ கோர்வை (Kumo Korvai)

RmKVயின் டிசைன் ஸ்டுடியோ கலைஞர்களால் உருவாக்கப்பட்ட தனித்துவமான பிங்க் வண்ண கோர்வை முறையில் நெய்யப்பட்ட கைத்தறி பட்டுப்புடவை. உடல் முழுவதும் மென்மையான பிங்க் வண்ணத்துடனும், அதில் ஜப்பானிய மேகக் கூட்ட வடிவங்களும், அதற்கேற்ற வைலட் (Violet) நிற வெளிகோடுகளும், பர்ப்பிள் நிற முந்தானையும் அதில் ஜரியால் நெய்யப்பட்ட யாக சூரி அம்பின் வடிவங்களும் தனித்துவமானவை. மேலும் அதன் பூக்கள் வடிவங்களும் பொன் நிற ஜரி வேலைபாடுகளும், வைர வடிவங்களும் கொண்டு நெய்யப்பட்ட அழகிய பட்டுப்புடவை.

திருமண பட்டு புடவைகளில் தனித்துவமான பட்டுக்களை அறிமுகப்படுதியதில் வாடிக்கையாளர்களின் குடும்ப உறுப்பினராகவே மாறி இருக்கிறது RmKV. சென்னையில் மூன்று கிளைகளோடும் - தி.நகர் பனகல் பூங்கா, வடபழனி நெக்சஸ் விஜயா மால், வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மற்றும் திருநெல்வேலி, கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய கிளைகளோடு இயங்கி வருகிறது RmKV.

தொடர்ந்து தனித்துவமான படைப்புகளை அறிமுகப்படுத்துவதோடு இல்லாமல், கைத்தறி நெசவாளர்களுக்கு உதவும் வகையில், பெண்களும் எளிதாக நெய்யும் விதமாக, மாடர்னைஸ்டு நுமேடிக் ஹேண்ட்லூம் (Modernised Pneumatic Handloom) புதியதொரு தறியை வடிவமைத்து நெசவாளர்களுக்கு அர்ப்பணித்து இருக்கிறது RmKV! நெசவாளர்களின் குடும்ப பொருளாதார மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் RmKV என்றென்றும் துணை நிற்கும் என்பதற்கு இது ஒரு சாட்சியாக அமைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com