மும்பையைச் சேர்ந்த ஷ்ரத்தா வாக்கர் என்கிற பெண் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாள். இது சம்பந்தமாக, அப்தாப் அலிகான் என்பவரைக் கைது செய்துள்ளனர். இருவரும் ‘லிவ்-இன்’ வாழ்க்கை நடத்தி யிருக்கின்றனர்.
இது நாட்டையே உலுக்கிய சம்பவமாகும். பெற்றோர் எதிர்ப்பை மீறி வேறு மதம், ஜாதியைச் சேர்ந்தவர்களைத் திருமணம் செய்யும் காரணம், இது போன்ற கொலை, தற்கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன.
கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களில் பலர் பெற்றோர்களுடன் தொடர்பு கொள்ள உதவும் வகையில் ‘பாதுகாப்பு குழு’ ஒன்றினை கூடிய விரைவில் அமைக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. இது ஒரு புது முயற்சியாகும்.
கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு உதவி தேவைப்படுகையில், பிரிந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள பாதுகாப்பு குழு உதவி செய்யும். கிட்டத்தட்ட கெளன்சிலிங் மாதிரி எனலாம். இதன்மூலம் கொலைகள் நடைபெறுவதைத் தடுக்க இயலும் என நம்பப்படுகிறது.
வேறு மதம், இனம் ஆகியவைகளில் கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் பெண்களைப் பாதுகாக்கும் வகையில், ஓய்வு பெற்ற காவல் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், என்.ஜி.ஓக்கள் உள்ளிட்டோர் அடங்கிய 10 பேர்கள் கொண்ட குழுவாக இது அமையும்.
****************************
எதிரி எதிரி ரோலில் ப்ருத்விராஜ்!
அமிதாப் பச்சன் – கோவிந்தா நடித்து 1998 இல் வெளிவந்த “படே மியான் சோடே மியான்” ஹிந்திப்படம் பயங்கர ஹிட்டானது. இதைத் தொடர்ந்து தற்சமயம் அதே பெயரில் அலி அப்பாஸ் ஸாபர் (Zaffer) இதை எடுக்க ஆரம் பித்துள்ளார்.
அக் ஷய் குமார், டைகர் ஷராப் ஷராப் இருவரும் நடிக்கும் இப்படத்தில் எதிரி ரோலில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிக்க உள்ளார்.
“சக்தி வாய்ந்த கலைஞராகிய பிருத்விராஜுடன் இணைந்து வேலை செய்வதைப் பெருமையாக எண்ணுகிறேன்” என்கிறார் இயக்குனர் Zaffer.
தயாரிப்பாளரோ ஒரு படி மேலே போய், ‘பிருத்விராஜ் நடிப்பதால் அதிகமான த்ரில்கள் இருக்குமென எதிர்பார்க்கிறேன்” என்கிறார். பார்க்கலாம்.