பேரரசியாய் திகழ வைப்பவள்!

பேரரசியாய் திகழ வைப்பவள்!
இந்திராணி தங்கவேல்

என் பெயர் இந்திராணி தங்கவேல். சொந்த ஊர் தஞ்சாவூர். வசிப்பது சென்னையில் உள்ள மாடம்பாக்கம். சிறு வயது முதலே எழுத வேண்டும் என்ற ஆர்வம் அதிகம் இருந்தது. ஆதலால் முதன்முதலாக மங்கையர் மலருக்கு ஒரு கட்டுரை எழுதி அனுப்பினேன். அது பிரசுரமாகியதால் அதிலிருந்து எழுதத் தொடங்கினேன். இன்று பாரம்பரியமிக்க கல்கி குழும பத்திரிகைகளில் எழுதி வருகிறேன். அது எனக்கு மன நிறைவு தருகிறது.

Updated on

 43வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எனது இனிய தோழி மங்கையர் மலருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 

எனக்குள் ஒளிந்திருந்த எழுத்தார்வத்தை கண்டுபிடித்து, ஊக்குவித்து, பயிற்சி கொடுத்து உற்சாகப்படுத்தி, எழுதத் தூண்டிக்கொண்டிருக்கும் மங்கையர் மலருக்கு கோடான கோடி நன்றிகள்! 

டிப்ஸ், தகவல்கள், துணுக்குகள், சமையல், கை வேலை, கோலம், கருத்துயுத்தம், கதை, கவிதை, கட்டுரை என்று அவரவர்களுக்கு பிடித்தமானவை எழுதத் தூண்டி, எழுத்தில் இளவரசியாக இருந்தவர்களை பேரரசியாக மாற்றிக் கொண்டிருக்கும் பெருமை பெற்ற மலரே... யாதுமாகி நிற்பவளே! 

அன்பு வட்டத்தில் வாசகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு  நவரசம் ததும்ப  பதில் அளிக்கும் மங்கையே!

போட்டிகள்  பல வைத்து உரிய நேரத்தில் பரிசு, சன்மானம், புத்தகங்களை அனுப்பி வைப்பதிலாகட்டும், பரிசுகளை வாங்க வருபவர்களுக்கு கொடுக்கும் மரியாதையிலாகட்டும் மங்கையே! 

உனக்கு ஈடு இணை நீயே! 

ஒரு வார்த்தையில் உலக நடப்புகளை எடுத்துரைப்பதில்  இணையில்லா தோழியே… வாழ்க உன் புகழ்! வளர்க உன் தொண்டு! 

logo
Kalki Online
kalkionline.com