நான் கல்லூரி முடித்து விட்டு தொலைப்பேசி அலுவலகத்தில் சேர்ந்தேன். எங்களுக்கு 3 மாதம் கோவையில் பயிற்சி. பயிற்சி முடிந்தப் பிறகு ஊட்டி, குன்னூரில் வேலை. பயிற்சி காலத்தில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். பெண் நண்பர்களும் உண்டு.
அதில் குறிப்பாக ஜெயந்தி என்பவர் என்னிடம் நன்கு பழகுவார். அவரது காதலைப் பற்றி சொல்லுவார். அவர் காதலிக்கும் சேகர் கல்லூரியில் எனக்கு சீனியர். எனக்கு நன்கு தெரியும்.