
-கே. நிருபமா
அந்த ஐ.டி. கம்பெனியில் வேலைக்கான நேர்முகத் தேர்வு நடந்து கொண்டிருந்தது. கம்பெனியின் சி.இ.ஓ. ப்ரதீப் பரபரப்பாக இருந்தான். "அடுத்த கான்டிடேட் - காஞ்சனா” என்றபடி சி.வி.யை மேஜை மேல் வைத்துவிட்டுப் போனான் ப்யூன் சரவணன்.
"மே ஐ கம் இன்?" உள்ளே நுழைந்தவளைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்து போனான் ப்ரதீப். காஞ்சனா அவனை எதிர்பாராமல் சந்தித்ததில் தடுமாறித்தான் போனாள். ஒரு கணம் 'இந்த வேலை கிடைத்தாற்போலத்தான்' என எண்ணியது அவள் மனம். உடனே சமாளித்துக்கொண்டு அனைவருக்கும் வணக்கம் சொன்னாள் “ப்ளீஸ் டேக் யுவர் சீட்" அனுமதியுடன் உட்கார்ந்தாள். ப்ரதீப்பின் சிந்தனை ஐந்தாண்டுகள் பின்நோக்கி ஓடியது.
இந்தக் காஞ்சனாவை ஜாதகப் பொருத்தம் பார்த்துப் பெற்றோருடன் போய்ச் சம்பிரதாயமாகப் பெண் பார்த்தான். காஃபிடே, ஃபோரம் என்று இரண்டு மூன்று முறை சந்தித்துப் பேசி, நிச்சயதார்த்தத்திற்கு நாள் கூடக் குறித்தாகியிருந்தது.
திடீரென ஒருநாள் காலை காஞ்சனாவின் தந்தையிடமிருந்து ஃபோன்கால்.
''காஞ்சனாவிற்கு நேற்று எங்கேஜ்மெண்ட் ஆயிற்று. தெரிந்த இடம்தான். பிள்ளைக்கு ஸ்டேட்ஸில் வேலை" என்று பாடம் ஒப்புவிப்பது போல் சொன்னார்.