
ஆழ்வார் திருநகரில் குடி இருந்தேன். இளங்கோ தெரு. சரியாக 10 மணிக்கு நான் சிகரெட் குடிக்க வெளியே வருவேன். அப்போது ஒரு கீரைக்'காரி’ வருவார். நடுத்தர வயது தான். சிறுகீரை, புதினா, முருங்கை கீரை, அரைக்கீரை, மணதக்காளி கீரை, பலாக் கீரை என்று கத்துவார். தெருவில் பலர் வாங்குவார்கள்.
காய் கறியும் விற்பார். உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணி, கத்தரிக்காய் மற்றும் தக்காளி என்று நன்கு கத்துவார். நான் அவரிடம் ஒரு மைக் வாங்க ஆலோசனை தந்தேன். ஆனால், பலன் இல்லை. இப்போது நான் சொல்வதும் இல்லை. ஒரு நாள் அவருடன் மனம் விட்டு பேசினேன். அவர் வரலாறு முழுக்க முழுக்க தெரிந்து கொண்டேன். பாவம் அவர்.
அவர் கணவர் ஒரு சினிமா தயாரிப்பாளர் இடம் டிரைவராக பணி புரிந்தார். தினமும் வர இரவு ஆகிவிடும். வரும்போது குடித்து விட்டு தான் வருவார். குடும்பத்திற்கு வெரும் ₹1,000 ரூபாய் தான் கொடுப்பார். அது எப்படி போதும்… ? அவர்களுக்கு சுந்தரி என்று ஒரு பெண். நன்கு படிப்பார். இந்த வருடம் பொது தேர்வு. ஆம். அவர் 10ம் வகுப்பு படித்து வந்தார்.