
-மீனா கந்தன்
"அம்மா ப்ளீஸ்!"
மேஜை மேல் இரவுச் சாப்பாட்டை வைத்துக்கொண்டிருந்த பிருந்தா திரும்பி, குனிந்தாள்.
ஐந்து வயது பிரேம்.
"என்னடா வேணும் செல்லம்?"
"அதான் காலையிலேயே கேட்டேனேம்மா!"
காலையில் குட்மார்னிங் மம்மியோடு சேர்த்து அவன் கேட்ட கேள்வி இது.
"நான் எங்கேயிருந்து வந்தேன்?"
திடுக்கிட்டாள்.
"வந்தது இருக்கட்டும். இப்போ மம்மிகூட வர்ற வழியைப் பாரு. இன்னைக்கு ஆட்டோ ஸ்டிரைக். அம்மாதான் உன்னை ஸ்கூல்ல விட்டுட்டு, ஆபீஸ் போயாகணும்... ம்...ம்.. சீக்கிரமா கிளம்பு" என்றதோடு விட்டுவிட்டாள்
ஆனால், பிரேம் விடவில்லை.
மாலை பள்ளியிலிருந்து வந்ததிலிருந்து அப்பப்போ இதே கேள்விதான்.
இது ஐந்தாவது தடவை. இவள் பதிலுக்குக் காத்திருக்கும் அவன் முகத்தைப் பார்த்ததும் உள்ளே எழுந்த இலேசான கோபம் காணாமல் போயிற்று.
எங்களுக்கு ஒரு பிரேம் வேணும்னு ராத்திரி பூராவும் நானும் அப்பாவும் கடவுள்கிட்டே வேண்டினோமா, காலையில எழுந்து வந்து பார்த்தால் மொட்டை மாடியிலே
"காக்கா கொண்டுவந்து போட்டுச்சாக்கும். ஐயோ இந்த மாதிரி ஸில்லியான பதில் வேண்டாம்மா. நா சீரியஸாய்க் கேட்கிறேன்."
பிருந்தாவும் சீரியஸாகிவிட்டாள்.