

-பி. சாரதாதேவி
சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை கணேஷுக்கு. எவ்வளவு முன்னெச்சரிக்கையானவன் அவன்! மாமியார் மருமகள் சண்டை வந்துவிடுமோ என்று பயந்து தாயாரை ஊரிலேயே விட்டு வைத்திருந்தான். வேலை பார்க்கும் பெண்களை எல்லாம் மறுத்துவிட்டான். நன்கு சமைக்கத் தெரிந்த, பார்க்க அழகாய் பெண்ணாக இருக்கவேண்டும் என்பது மட்டுமே அவன் போட்ட கண்டிஷன். சமையல் எக்ஸ்பர்ட்டான அம்மா, 'பிரமாதம்' என்று சர்டிபிகேட் கொடுத்திருந்தார். பெண் அழகுதான் என்பதை நேரிலும் பார்த்து உறுதிசெய்துகொண்டான். இருந்தும் இப்போது...
இவ்வளவு நாள் ஹோட்டலில் சாப்பிட்டு அலுத்துவிட்டது. வீட்டுச் சாப்பாடு என்றாலே தனிதான். மாமியார் வீட்டில் ஒரு வாரம் விருந்து சாப்பிட்டுவிட்டு புது மனைவி ப்ரியாவுடன் ஊர் சுற்றிவிட்டு சென்னை திரும்பியிருந்தான். நாளை ஆபீஸ் போகவேண்டும். இன்று முதன்முதலாக மனைவி கையால் சாப்பிடப் போகிறான். லஞ்சுக்கு மட்டன் வாங்கிக் கொடுத்திருந்தான். நல்ல பசியுடன் தட்டின் முன் உட்கார்ந்தான். ப்ரியா பரிமாறினாள்.