
-டி. சுமதி ராம்குமார்
தலைப்பைப் பார்த்ததுமே ஏதோ வீட்டுப் பராமரிப்புக்கான டிப்ஸ்... என்று அலுத்துக் கொள்பவர்களுக்கு ஸாரி. இது நான் அட்லைஸ் செய்வதற்காக எழுதியது என்பதைவிட நான் உணர்ந்த ஓர் அனுபவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள எழுதியது. இப்படிப் பகிர்ந்துகொண்டாலாவது கொஞ்சம் மனப்பாரம் குறையும்.
அது அழகான ஞாயிறு காலைப்பொழுது வழக்கம்போல காலை நாளிதழிலும் டீவி முன்பு கிரிக்கெட் மேட்சிலும் மூழ்கியபடி என் கணவர்.
'"ஞாயிற்றுக்கிழமைன்னா இப்படித்தான் இருக்கணும்னு யார் சட்டம் எழுதி வைச்சாங்கன்னு தெரியலை. ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு ஒரு வார்த்தைகூட கேட்கக்கூடாதா?" என்று முணுமுணுத்தபடியே காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருந்தேன்.
"என்னங்க அடுத்த வாரம் எங்க அத்தை பொண்ணு ஸ்டேட்ஸ்லேருந்து வர்றா. வரும்போது நம்ப வீட்டுக்கும் வரப்போறதா மெயில் அனுப்பி யிருக்கா..."
"ஒ. யாரு போனதடவை வந்தபோது இங்க வர்றதா சொன்னதைக் கேட்டு விழுந்து விழுந்து புதுசா ஏதோ ரெஸிபியெல்லாம் சுத்துக்கிட்டு ட்ரெயல் பார்க்கிறேன் பேர்வழியேன்னு எல்லாத்தையும் வேஸ்ட் செஞ்சு கடைசியில் அவங்க ப்ரொக்ராம் கேன்ஸல் ஆனதும் புலம்பித் தீர்த்தியே அந்த அத்தைப் பொண்ணா?" என்று வம்புக்கு இழுத்தார் அவர்.