
-ஸ்ரீ வித்யா சுரேஷ்
டீ.வி.யின் முன் உட்கார்ந்து மெய் மறந்து சீரியலைப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுமதி.
"திடீரென டீ.வி.யில் நிகழ்ச்சி வரவில்லை. ஐயோ, என்ன ஆச்சு?" பதறியபடி சேனலை அவசர அவசரமாக மாற்றினாள். எந்தச் சேனலிலும் நிகழ்ச்சிகள் வரவில்லை.
"ஏய், கமலா! அந்த கேபிள் கடன்காரனுக்குச் சீக்கிரமாக ஃபோன் செய்டி. முக்கியமான கட்டத்தில் திடீரென ஏதோ நோண்ட ஆரம்பிச்சுட்டான் படுபாவி" எரிச்சலுடன் திட்டினாள்.
கமலா அவசர அவசரமாகக் கேபிள் ஆபரேட்டருக்கு ஃபோன் செய்தாள்.
"ஹலோ, மேடம்! எங்களுக்கு எந்த சிக்னலும் கிடைக்கலை. பார்த்துக்கிட்டிருக்கோம். சீக்கிரம் சரியாகிவிடும்" என்றார் கேபிள் ஆபரேட்டர்.
"நாசமாய்ப் போக" எனச் சபித்துவிட்டு, தாம்பரத்திலிருக்கும் தங்கைக்கு ஃபோன் செய்தாள்.
"ஹலோ கலாவா? நான் அக்கா பேசறேன்டி. அங்கே உன் வீட்டில் டீ.வி. தெரிகிறதா?" என்றாள்.
''இல்லை அக்கா. அரை மணி நேரமா ஒண்ணும் வரலை. அங்கே வருதா? சீரியல் என்ன ஆச்சோ? நானே யாருக்காவது ஃபோன் செய்யணும்னு இருந்தேன்" என்றாள் கலா.
மறுபடியும் டெலிஃபோனைத் தட்டி. "ஹலோ சரளாவா? நான் அம்மா பேசறேன்டி” என்றாள் சுமதி.
"என்னம்மா இந்த நேரத்திலே?” பதற்றத்துடன் கேட்டாள் சரளா.
''ஒண்ணுமில்லை. இங்கே டீ.வி.யில் ஒரு மணி நேரமாக நிகழ்ச்சிகள் எதுவும் வரலை. அங்கே மும்பையில் டீ.வி.யில் நிகழ்ச்சி வருதா?"