
-ஜானகி பரந்தாமன்
சாயந்தரம் நடக்கும் சூரசம்ஹாரம் பார்க்க சரசா காலையிலேயே தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தாள். பால், பழத்தோட ஆறு நாளும் விரதமிருந்து, இன்று சஷ்டியை பார்த்துவிட்டு பச்சரிசி சாதம் சாப்பாட்டோட விரதம் கம்ப்ளீட்.
'இன்று புதன் கிழமை. கணவர் வர ராத்திரி ஏழு மணியாகும். அவர் வந்தால் நிச்சயமாக போக விடமாட்டார். அதற்குள்ளாற போயிட்டு வந்துடலாம்.' நினைத்துக்கொண்டிருக்கும்போதே வாசல் கதவு தட்டும் சத்தம். 'ஆஹா ... என்றும் இல்லாத திருநாளாக இன்று கணவர் வந்துவிட்டார். .இன்னிக்கு சூரசம்ஹாரம் பார்க்கப்போன மாதிரிதான்'மனதிற்குள் முனகிக் கொண்டே அடுக்களைக்குள் போனாள் சரசா.
"சூடா ஒரு டீயைப்போடு." ஆர்டர் பன்னிவிட்டு டிவியில் மூழ்கிவிட்டான் மோகன்.
'இன்னிக்குன்னு பார்த்து செல்வி வேறு வரவில்லை. சூரசம்ஹாரம் பாக்கனும்னு லீவு போட்டுட்டா,' என்று நினைத்தபடியே எரிச்சலோடு டீ பாத்திரத்தை தேய்க்கப்போனாள் சரசா.