
காலை மணி ஆறரையினை நெருங்கிக் கொண்டிருந்தது. சமையலறையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள் இந்திரா. இன்னும் பிள்ளைகள் விழித்துக் கொள்ளவில்லை. கணவன் ரமேஷ் மட்டும் வாக்கிங் சென்றுள்ளான். அவளும் சில நேரம் அவனுடன் செல்ல விரும்புவாள். ஆனால்,வீட்டிற்கு வந்து அரக்க பரக்க வேலை செய்ய வேண்டும் என்ற நினைவு வந்ததும் அவளது எண்ணம் மாறிவிடும்.
ரெண்டு நாளா அந்த தயிர்க்காரப் பாட்டியக் காணோம்... அவங்க கொண்டு வர்ற தயிர் நல்ல கெட்டியா ஆர்கானிக்கா இருக்கும். எங்க போனாங்கனே தெரியல. சின்னவன் வேற தயிர் சாதம் கேட்டு ரெண்டு நாளா உயிர வாங்குரான்...
இந்த எண்ணங்களோடே வேலைகளை பரபரப்பாக முடித்தாள். கணவனை அலுவலகத்திற்க்கும் பிள்ளைகளை பள்ளிக்கும் அனுப்பிவிட்டு வீட்டு வேலைகளை முடித்து விட்டு நிமிரும் போது மணி பத்தினை தாண்டியிருந்தது.
பக்கத்து வீட்டு சுசீலா, "என்ன? இன்னும் வேலை ஓயலையா?" என்றபடி கேட்டைத் திறந்தாள். "வா,வா முடிச்சிட்டேன், முடிச்சிட்டேன்.." என்றபடி வெளியே வந்தாள்.