“ உலவும் தென்றல் காற்றினிலே …..” பழைய பாடல் ஒலித்தது கார் ஸ்டீரியோவில். கார், முன்னாரில் உள்ள அவர்களின் பிரத்தியேக ‘ஹில்டாப்’ பங்களாவை நெருங்கி விட்டது.
“இதே போல இன்னொரு ஃபேமஸ் பாட்டு உண்டு இல்லியா, இதே படத்தில்?”, கேட்டாள் நீரஜா.
அந்த இனிய குரல் நீலாம்பரியை நினைவூட்டியது கைலாஷூக்கு. ‘சேச்சே! எப்படி இருக்க முடியும்? அவளைத்தான் அவளைத்தான்…’ பொங்கி வந்தன பழைய நினைவுகள். தூக்கத்தில், விழிப்பில், கனவில் எப்போதும் அவளுடைய அந்தக் கடைசி அலறல்….
காதல் கல்யாணம் செய்து கொண்டு 5 வருடங்கள் ஆன மனைவியை, செகண்ட் ஹனிமூன் என்று சொல்லி முன்னார் (Munnar) அழைத்து வந்து, அவள் இம்மியும் எதிர்பாரத தருணத்தில் மலை உச்சியிலிருந்து தள்ளி விட்டால், அந்த மனைவி எப்பேர்ப்பட்ட அதிர்ச்சிக்கு உள்ளாவாள்… எப்படி அலறுவாள்…
அதிர்ச்சியின் முழுத் தாக்கம் மனத்தில் விரியுமுன், புவி ஈர்ப்புக்கு ஈடு கொடுக்க முடியாமல் பூமியை நோக்கி நீலாம்பரி படு வேகமாக விரைந்து, விரைந்து….