
-ஸ்ரீ
''பாட்டி! நீங்க ஏன் அழறீங்க?”
"போடா! நா ஒண்ணும் அழல..."
"இல்லை, நீங்க எப்பவும் அழுதுகிட்டேதான் இருக்கீங்க. நான் பார்க்கும் போதெல்லாம் ஒங்க கண்ணுல நீர் தளும்பியே இருக்கு..''
"அதெல்லாம் ஒண்ணுமில்லைடா கண்ணா. எனக்குக் கண் ஆபரேஷன் ஆனதுலேர்ந்தே என் கண் இப்படித்தான் இருக்கு. நானே நெறைய தடவை கண்ணாடில பார்த்திருக்கேன்..."
"இல்லே பாட்டி! நீங்க பொய் சொல்றீங்க எனக்குத் தெரியும். உங்களை இப்பல்லாம் யாரும் மதிக்கறதே இல்லேன்னுதானே அழறீங்க? உங்களைப் பார்க்க இப்பல்லாம் யாரும் வர்றதே இல்லேன்னுதானே வருத்தப்படறீங்க?"
"டேய்! கிருஷ்ணா! நீ சும்மா இருக்கமாட்டே? என்னத்தையோ உளறிக்கிட்டு? அது போகட்டும். இப்ப நீ எதுக்காக இங்கே வந்தே? அதைச் சொல்லு."
"பந்து எடுக்க வந்தேன் பாட்டி!" நான் அப்புறமா வர்றேன்."