
-லில்லி ராமதுரை
தியாகு ஆபீஸ் கிளம்பும் நேரம்.
அவசர அவசரமாக இடுப்பு பெல்ட்டை சரிசெய்தவண்ணம் சொன்னான். "சுசீ... ராத்திரி வீட்டுக்கு வர கொஞ்சம் லேட்டாகும் விமலாவோட செமஸ்டர் ஃபீஸ் விஷயமா அப்பாவைப் பார்த்துப் பேச வேண்டியிருக்கு..."
"போச்சுடா... எப்பவும் இதே பிடுங்கல்தான்! தெரியாமத்தான் கேட்கறேன். அத்தைக்கும், மாமாவுக்கும் நீங்க மட்டுந்தான் மகனா? உங்க தம்பியோடதானே இருக்காங்க...? இந்தத் தடவை ஃபீஸ் கட்டறதை அவர் பார்த்துக்க மாட்டாரா? எந்த ஒரு செலவுன்னாலும் உங்கப்பா... அம்மாக்கு 'நம்ம பணம்'தான் கண்ணுல படுமா? சே.. சே... தனிக்குடித்தனம் வந்தாலும் பிக்கல், பிடுங்கல் இல்லாம நிம்மதியா இருக்க முடியலை."
"கூல் டவுன் சுசீ... என் தம்பி என்னை மாதிரி எம்.பி.ஏ. படிக்கலை. பெரிய உத்தியோகமும் அவனுக்குக் கிடையாது. வருமானம் கம்மி. மனைவியும், குழந்தையும் வேற இருக்காங்க! இந்த நிலைமையில் பாவம்.. அவனால் ஃபீஸ் விஷயத்தில் பெரிசா எந்த உதவியும் பண்ணமுடியாது. நாமும் கண்டுக்காம் விட்டா அவங்க என்ன செய்வாங்க?"
"உங்க தம்பி ஒழுங்கா படிக்கலை… அதனால நல்ல வேலைக்கு வர முடியலை... இதெல்லாம் அவனவன் தலையெழுத்து. அதுக்கு நாம என்ன பண்ண முடியும்?"