சிறுகதை – பல்லக்கு!

பல்லக்கு...
பல்லக்கு...

மிருதுளாவிற்கு திருமணம் நிச்சயம் ஆகிவிட்டது. கல்யாண மண்டபம் மற்றும் கேட்டரிங் எல்லாவற்றையும் அரேன்ஜ் பண்ணனும் என்று கூறிய அப்பாவிடம் "அப்பா… எனக்கு ஒரு ஆசை. நம்ப கிராமத்து வீட்டில் கல்யாணம் வச்சுக்கலாம். அப்புறம் ஜானவாசம் அன்னிக்கு நான் பல்லக்கில் ராணிபோல உட்கார்ந்து யானை முன் செல்ல கரகோஷம் முழங்க போகணும்னு ஆசை" என்றதும் "என்னம்மா இப்படி ஒரு ஆசை. நான் மாப்பிள்ளை வீட்டில் இந்த மண்டபம், இந்த கேட்டரிங், ரிஸப்ஷன், இந்த ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில்ன்னு சொல்லிட்டேனே… சரி, கேட்டு பார்க்கறேன்." இரண்டு நாட்களில் சம்மதம் வாங்கி, கிராமத்தில் கல்யாணம் செய்ய எல்லா ஏற்பாடுகளும் செய்தாகிவிட்டது...

மிருதுளாவின் ஆசைப்படி அவள் பல்லக்கில் அமர்ந்து வர எதிரில் மாப்பிள்ளை எப்படி வருவார் என்று மிருதுளா கேட்க, மாப்பிள்ளை "நான் எப்படி வரணும்’னு நான்தான் முடிவு செய்வேன்.., சர்ப்ரைஸ்" என்று சொல்லி விட்டார்.

பல்லக்கில் அமர்ந்துகொண்டு கிராமத்தை உலாவரும் வழியில் மிருதுளாவும் எதிரில் மாப்பிள்ளை குதிரையில் ராஜா மாதிரி வருவாரோ என்று எட்டிஎட்டி பார்த்துக் கொண்டே வந்தாள்.

இதையும் படியுங்கள்:
திறமைசாலிகள் உடன் இணைந்து செயல்படுங்கள்!
பல்லக்கு...

ஏமாந்து போன மிருதுளா அலங்கரிக்கப்பட்ட கிராமத்து வீட்டில் காலடி வைக்கும்முன் கண்ணீருடன் "அப்பா என்னாச்சு… அவர் வரவே இல்லையா? நான் இறங்கி வீட்டுக்கு வரமாட்டேன்" என்று அடம் பிடிக்கவே அனைவரும் திகைத்துப்போய் இருக்கையில், "மிருதுளா இளவரசியே இறங்குங்கள்" என்று கையை நீட்டிய பல்லக்குத் தூக்கியைத் தயக்கத்துடன் பார்க்க "நான்தான் பல்லக்கில் உன்னைத் தூக்கி வந்தேன். உன்னைப் பார்த்துக்கொண்டேதான் தூக்கி வந்தேன்..." என்றதும் வெட்கத்தில் மிருதுளாவின் முகம் சிவந்தது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com