PSR silk sarees
PSR silk sarees

பளபளக்கும் பட்டுப்புடவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் தனி ரகம்! கோவை 'PSR Silk Sarees' வழங்கும் பாரம்பரிய பட்டுகளின் அணிவகுப்பு!

பெண்களுக்கும், புடவைகளுக்கும் எப்போதுமே பிரிக்க முடியாத பந்தம் உண்டு. என்னதான் உலகமே மார்டனாக மாறினாலும், இன்னும் நம்முடைய கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுக்காமல்தான் இருக்கிறோம். எந்த விஷேச நிகழ்ச்சியாக இருந்தாலும் அதற்கு பெண்கள் பட்டுப்புடவையை கட்டி வரும் அழகைக் காண கண் கோடி வேண்டும். பெண்களை மிகவும் அழகாக காட்டக்கூடிய உடைகளில் பட்டுப்புடவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பட்டுக்கு, அதுவும் முகூர்த்தப் பட்டுக்குப் பேர்போன கோவை PSR Silk Sarees வழங்கும் நம் இந்திய நாட்டின் பாரம்பரியப் பட்டு புடவைகளின் அணிவகுப்பு இதோ...

1. லேசர் எம்ராய்ட்ரி பட்டு (Laser embroidery silk)

Laser embroidery silk
Laser embroidery silkA pastel lilac saree adorned with laser embroidery. The pallu and border showcase a colourful floral embroidery pattern with sequin work adding sparkling beauty to the saree.

லேசர் எம்ராய்டரியில் உள்ள ஒரு நன்மை என்னவென்றால், டிசைன்கள் எப்படி உருவாக்கப்பட்டதோ அப்படியே அச்சுவடிவாக புடவையில் வடிவமைத்து கொடுத்துவிடும். இந்த வகை புடவையில் உள்ள பூப்போட்ட எம்ராய்டரி வேலைப்பாடுகள் புடவைகளை மேலும் பளபளப்பாகவும், நேர்த்தியாகவும் காட்டும். இப்புடவையில் செய்யப்பட்டிருக்கும் எம்ராய்டரி வேலைப்பாடும், ஜிகினா வேலைப்பாடும் மிக நுணுக்கமாக செய்யப்பட்டிருப்பது அழகை கூட்டுகிறது. புடவைக்கு மேட்சான பிளவுஸுடன் அணிவது மேலும் அழகை சேர்க்கும்.

2. பாந்தினி சில்க் காட்டன் (Bandhini silk cotton)

Bandhini silk cotton
Bandhini silk cottonA tie and die bandhini silk cotton saree with a burgundy hue interwoven with a blend of green tones. The green pallu adorned with graceful zari stripes perfectly complement the saree.

பாந்தினி காட்டன் பட்டுப்புடவை இந்தியாவின் பாரம்பரியமான புடவையாகும். பாந்தினி புடவைகள் பெரும்பாலும் அடர் நிறங்களில் இருக்கும். மஞ்சள், சிவப்பு, மெரூன், நீலம், பச்சை, கருப்பு ஆகிய நிறங்களைப் பயன்படுத்துவார்கள்.  புடவையில் வரையப்பட்ட டிசைன்களுக்கு ஏற்ப விரல்நுனியினைக் கொண்டு முடிச்சிட்டு பிறகு சாயமேற்றித் தயாரிக்கப்படுவதே பாந்தினி சேலைகளாகும். குஜராத், பஞ்சாப், சிந்து போன்ற இடங்களில் பாந்தினி புடவைகள் தயாரிக்கப்படுகின்றன.

3. டூப்பியான் பட்டு (Dupion silk)

Dupion silk
Dupion silkThis navy blue kora dupion silk saree with military green border boasts of contemporary abstract prints with a pallu featuring zari stripes. The saree has a traditional floral zari work border.

டூப்பியான் பட்டுப்புடவைகள் வாரணாசியில்தான் அதிகமாகத் தயாரிக்கப்படுகின்றன. அந்த ஊரிலேயிருக்கும் அன்சாரி என்னும் கிராமவாசிகளே தலைமுறை தலைமுறையாக இதை நெய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டூப்பியான் சேலையை வீட்டு விசேஷங்களுக்கும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும்  பயன்படுத்தலாம். இந்தப் பட்டுத்துணி மிகவும் பளபளப்பானதாக இருக்கும். டூப்பியான் பட்டுச்சேலை கோடைக்காலத்தில் உடலை குளுமையாகவும், குளிர்காலத்தில் உடலை வெதுவெதுப்பாகவும் வைத்துகொள்ளும் என்பது சிறப்பு!

4. பனாரஸ் துஸார் பட்டு (Banaras tussar silk)

Banaras tussar silk
Banaras tussar silkThis beautiful beige banaras tussar silk saree feautures captivating floral prints adorned with intricate floral zari cutwork motifs adding a timeless grace to the saree.

துஸார் பட்டுப்புடவைகள் சட்டீஸ்கர், பீஹார், ஒரிசா, ஆந்திரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. பனாரசில் தயாரிக்கப்படும் பனாரஸ் துஸார் பட்டுப்புடவை கைகளாலேயே நெய்யப்படுவதால் விலை சற்று அதிகமாக இருக்கும். இருப்பினும் அதிகநாள் உழைக்க கூடியதாகும். பனாரஸ் துஸார் பட்டுப்புடவை ஆடம்பரமான தோற்றம் அளிக்கும். உடுத்துவதற்கு எளிமையாகவும் இருக்கும்.

நம் நாட்டின் பாரம்பரிய பட்டுகளின் பெருமைகளாய் போற்றுவோம்! கைத்தறிப் பட்டு நெசவாளர்களை ஆதரித்து ஊக்குவிப்போம். இப் புடவைகளின் தயாரிப்பில் காணக்கூடிய கலைகளைப் பாதுகாப்போம்!

5. போச்சம்பள்ளி பட்டு (Pochampalli silk)

Pochampalli silk
Pochampalli silkPSR Silk Sarees showcases this dark blue and red pochampalli silk saree with a beautiful Ikat pattern. The saree features a contrasting pallu and plain tissue border creating a visual contrast.

போச்சம்பள்ளி பட்டுப்புடவை ஆந்திர பிரதேச மாநிலத்தில், நால்கொண்டா மாவட்டத்திலுள்ள பூதன் போச்சம்பள்ளி என்னும் இடத்தில் தயாரிக்கப்படுகிறது. இந்த இடத்தை பட்டுப்புடவைகளின் தலைநகரம் என்று அழைப்பார்கள். தனித்துவம் வாய்ந்த டிசைன்கள் கொண்ட இந்த புடவையில் Ikat வகை நெய்தலைப் பயன்படுத்துகிறார்கள். அதாவது முதலில் நூலில் சாயம் பூசப்பட்டு பிறகு புடவை நெய்யப்படும்.

6. பனாரஸ் பட்டு (Banaras silk)

Banaras silk
Banaras silkPSR Silk Sarees presents burgundy coloured banaras jute silk saree combined with beige colour with colourful motifs and neem zari work.

பனாரஸ் பட்டுப்புடவை வாரணாசியிலுள்ள பனாரஸ் என்னும் இடத்திலே தயாரிக்கப்படுகிறது. பனாரஸ் புடவை அதனுடைய தங்கம், வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகளுக்கு பெயர் போனதாகும். இந்த புடவை 3,000 முதல் 3,00,000 ரூபாய் வரை விற்பனையாகிறது. பனாரஸ் புடவையை கைத்தறிகொண்டு நெய்வதால் ஒரு புடவையை தயாரிக்க 15 முதல் 1 மாதம் வரை கூட ஆகலாம். சில சமயங்களில் அதன் வேலைப்பாட்டினைப் பொறுத்து ஆறு மாதங்கள் கூட ஆகலாம்.

7. காஞ்சிபுரம் பட்டு (Kancheepuram silk)

Kancheepuram silk
Kancheepuram silkPSR Silk Sarees is famous for its most intricate, traditional and yet youthful bridal ‘Kanchipuram Pattu’ sarees. This multicoloured pure kanchipuram silk saree with violet tones, features zari and violet coloured pallu and korvai border, woven with half fine golden zari that adds further elegance to the saree.

காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளை திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அதிகம் வாங்குகிறார்கள். மணமகளுக்கான புடவையாக காஞ்சிபுரம் பட்டையே தேர்வு செய்கிறார்கள்.

தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே இவ்வகை பட்டுப்புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த பளபளப்பான பட்டுப்புடவையை  தயாரிப்பதற்குத் தூய்மையான மல்பரி பட்டு காஞ்சிபுரத்திலிருந்தும், ஜரிகை குஜராத்திலிருந்தும் வரவழைக்கப்பட்டு நெய்யப்படுகிறது. இதுவே காஞ்சிபுரம் பட்டுப்புடவையை மற்ற பட்டுப்புடவையை காட்டிலும் தனித்துவமாக காட்டுகிறது. நல்ல ஜரிகையுடைய காஞ்சிபுரம் பட்டுப்புடவையின் ஆரம்ப விலை ரூபாய் 12,000லிருந்து தொடங்குகிறது.

8. டிஸ்யூ எம்ராய்டரி பட்டு (Tissue embroidery silk)

Tissue embroidery silk
Tissue embroidery silkA white dove coloured tissue saree with delicate aari embroidery. The saree is of a translucent nature with intricate aari embroidery motifs delicately scattered across the saree.

டிஸ்யூ எம்ராய்டரி பட்டுப்புடவை அதன் மென்மைக்கும், பளபளப்பு தன்மைக்கும் பேர் போனது! கட்டுவதற்கு எளிது என்பதாலும் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்தப் பட்டுப்புடவை சுலபமாகவும், நேர்த்தியாகவும் பயன்படுத்தக் கூடியதாகும். திருமண சுபநிகழ்ச்சி, பண்டிகை போன்ற தினங்களில் கட்டிக்கொள்வதற்கு ஏற்றதாகும். டிஸ்யூ பட்டுப்புடவைகள் ஆந்திராவிலே ஃபேமஸ். மெலிதான தங்க வெள்ளி ஜரிகையை பட்டுத்துணியில் நெய்து பளபளக்கும் தன்மையை புடவையில் கொண்டு வர வேண்டும்.

9. சந்தேரி பட்டு (Chanderi silk cotton)

Chanderi silk cotton
Chanderi silk cottonThis awesome chanderi silk cotton saree in turquoise hue with a striking indigo combination features a floral paisley print that adds timeless beauty to the saree.

மத்திய பிரதேசத்தில் உள்ள சந்தேரி என்னும் இடத்தில் தயாரிக்கப்படும் இப்புடவையில் தங்கம், மற்றும் வெள்ளி பார்டர் வைத்து அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். இந்த புடவை இதன் பளபளப்புத்தன்மைக்குப் பெயர் போனதாகும். சந்தேரி பட்டுப்புடவை எடை குறைவாகவும், வெயில் காலத்திலும் அணியக் கூடியதாகவும் இருக்கும்.

10. ஆர்கன்ஸா பட்டு (Organza silk)

Organza silk
Organza silkPSR Silk Sarees presents this pastel pink organza silk cotton saree blended with steel blue accents. This saree contains vibrant floral prints with silver zari borders.

ஆர்கன்ஸா பட்டுப்புடவை குறிப்பிட்ட பட்டு நெய்யும் முறைப்படி கைகளாலேயே தயாரிக்கப்படும் பட்டுப்புடவையாகும். இந்தப் புடவையை நெய்வதற்கு மிகவும் மெல்லிய, பளபளப்பான நூலை பயன்படுத்துவதால் மிகவும் மெல்லிதான புடவையாகவும், அதேசமயம் ஆடம்பரமாகவும் கவர்ச்சியாகவும் காட்சியளிக்கிறது. ஆர்கன்ஸா பட்டுப்புடவை தயாரிப்பு பனாரஸில் மிகவும் பிரபலமாகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு பெண்கள் இப்பட்டு புடவைகளை அதிகம் உடுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

11. முகா பட்டு (Muga silk)

Muga silk
Muga silkA hand printed muga silk saree with vibrant hand printed floral motifs and a plain crimson tissue border elegantly framing across the length of the saree.

முகா பட்டுப்புடவை இந்தியாவிலுள்ள அசாம் மாநிலத்தின் அடையாளம். இந்த வகை புடவை நீண்ட நாட்கள் உழைக்க கூடியதாகும்.  முகா பட்டு  இயற்கையாகவே தங்க நிறத்தையும், பளபளக்கும் தன்மையையும் கொண்டதாகும். அசாமில் ‘முகா’ என்பது மஞ்சள் நிறத்தைக் குறிக்கும். இந்த பட்டு இயற்கையாகவே மஞ்சள் நிறத்தைக் கொண்டதாலும் மற்றும் முகா பட்டுப்பூச்சி மிகவும் மென்மை வாய்ந்தது என்பதால் சிறிதளவு மாசுவைகூட தாங்கிக்கொள்ள முடியாததாலும் இந்தப் பட்டு மிகவும் விலை உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. நடுத்தர குடும்பத்தினர் முகா பட்டை தங்கத்திற்கு இணையாக பாதுகாக்கிறார்கள். முகா பட்டானது மிக உயர் ரகப் பட்டு என்பதால், ஒரு காலத்தில், ராஜ குடும்பங்களில் மட்டுமே முகா பட்டுப்புடவையை அணிந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

12. காதி துஸார் பட்டு (Khadi tussar silk)

Khadi tussar silk
Khadi tussar silkThis khadi tussar silk saree in coral peach paired with sandstone orange hue. The saree boast of enchanting prints… swans, flamingoes, vibrant flowers highlighted with aari embroidery work.

துஸார் பட்டுக்கள் அதிக அளவில் ஜார்கண்ட் மற்றும் பீஹார் மாநிலத்திலேயே தயாரிக்கப்படுகி்ன்றன. இந்தப் பட்டுப்புடவை எடைகுறைவாகவும், நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருப்பதால் கோடைக்காலத்திலும் உடுத்த வசதியாக இருக்கும். துஸார் பட்டை கோசா பட்டு என்றும் அழைப்பார்கள். காஞ்சிபுரம் பட்டு, பனாரஸ் பட்டை ஒப்பிடுகையில் துஸார் பட்டு விலை குறைவேயாகும். அலுவலகத்திற்கும், மாலை நேர பார்ட்டிகளுக்கும் உடுத்த ஏற்றவை. உங்கள் அழகைக் கூட்டும் தன்மை கொண்டவை. ‘எலிகென்ட் லுக்’ அளிக்கும் கிளாசிக் புடவைகள்!

13. மைசூர் பட்டு (Mysore silk)

Mysore silk
Mysore silkA spring green colour mysore silk saree in combination with caribbean green. A simple and elegant zari work in its pallu and border is very unique to Mysore silk sarees.

மைசூர் பட்டுப்புடவை கர்நாடக மாவட்டத்தில் உள்ள மைசூரில் தயாரிக்கப்படுகிறது. இந்தப் புடவை தூய்மையான பட்டையும், தங்க ஜரிகையையும் சேர்த்து உருவாக்கப்படுகிறது. இந்தப் பட்டுப்புடவை உலகம் முழுவதும் பிரபலமாவதற்குக் காரணம் அதனுடைய மென்மை தன்மையும் லேசான எடையும் வித்தியாசமான, கண்களுக்கு இதமான நிறங்களும்தான். 50+ பெண்கள் திருமணம், பண்டிகை போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு இந்த புடவையை கட்ட மிகவும் விரும்புவார்கள்.

14. சாஃப்ட் பட்டு (Soft silk)

Soft silk
Soft silkA grey soft silk saree with captivating blend of pink hues showcased by PSR Silk Sarees. The saree has a floral pattern with intricate silver zari floral motifs. A timeless elegance indeed!

மிருதுவானது. மென்மையானது. பட்டுத்துணியையும், குறைந்த சரிகையையும் கொண்டு உருவாக்கப்படுவதாகும். இந்த வகை புடவையின் எடை குறைவாக இருப்பதால் தினமுமே பயன்படுத்த ஏற்றதாக உள்ளது. குறைந்த விலையிலும் கிடைப்பதால் அனைவராலும் விரும்பி வாங்கப்படும் புடவையாக உள்ளது. இப்புடவையை துவைப்பதும் மிகவும் எளிதாகும். இதனால் இவ்வகை புடவை பலராலும் விரும்பப்படுவது. விலையுயர்ந்த காஞ்சிப்பட்டுக்குப் பதிலாக அதே பளபளப்புடனும் விரும்பப்படுவது. விலையுயர்ந்த காஞ்சிப்பட்டுக்கு பதிலாக அதே பளபளப்புடனும் அழகுடனும் காணப்படும் இப்புடவைகளை பெண்கள் இப்போது மிகவும் விரும்பி வாங்குகிறார்கள். பணியிடத்திற்கும் பார்ட்டிகளுக்கும் மிக நேர்த்தியாக உடுத்திச் செல்ல ‘பெஸ்ட்’ சாய்ஸ்!

15. ஜியார்ஜெட் பட்டு (Georgette silk)

Georgette silk
Georgette silkThis stunning red georgette silk saree is a symbol of elegance and grace. The intricately crafted floral zari work in the pallu and border enhances the beauty of the saree.

ஜியார்ஜெட் பட்டுப்புடவை இந்தியாவின் மிகவும் பிரபலமான பாரம்பரியம் வாய்ந்த பட்டுப்புடவையாகும். இந்த பட்டுப்புடவை வாரணாசியில் மிகவும் பிரபலமாகும். இது மிகவும் விலையுயர்ந்த புடவையாகக் கருதப்படுவதற்கு காரணம், இப் பட்டுப்புடவை நெய்யப்படும் பட்டு நூல் மிகவும் விலை உயர்ந்ததாகும். இப்புடவை மிகவும் எடை குறைவாகவும், மெலிதாகவும் இருக்கும். இந்தப் புடவையில் உள்ள சிக்கலான வடிவமைப்பு மற்றும் நெய்யப்படும் மையக்கருத்தானது பிரின்ட் அல்லது எம்பிராய்டரி செய்யப்பட்டு மிக நேர்த்தியான முறையில் காணப்படும். பலவிதமான விழாக்களுக்கும் இப்புடவையை அணியலாம்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com